உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / காசாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் பாலஸ்தீனியர்கள் 82 பேர் பலி

காசாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் பாலஸ்தீனியர்கள் 82 பேர் பலி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஜெருசலேம்: காசாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் பாலஸ்தீனர்கள் 82 பேர் உயிரிழந்துள்ளனர்.மேற்காசிய நாடான இஸ்ரேலுக்கும்-, பாலஸ்தீனத்தின் காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கும் இடையே 21 மாதங்களாக போர் நீடித்து வருகிறது.இதனை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். அவர் நேற்று, ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு மீதான, 60 நாள் போர் நிறுத்த நிபந்தனைகளுக்கு இஸ்ரேல் ஒப்புக்கொண்டுள்ளதாக கூறியிருந்தார்.எனினும் இந்த நிபந்தனைகளை ஹமாஸ் அமைப்பினர் ஒப்புக்கொள்ளவில்லை. அதே நேரம், போரை முழுமையாக முடிவுக்குக் கொண்டு வரும் முயற்சியை ஏற்றுக் கொள்ள தயாராக உள்ளோம் என ஹமாஸ் அமைப்பு கூறி இருந்தது. இந்நிலையில் காசாவில் பல்வேறு இடங்களில் இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளது. அதிபர் டிரம்பின் கோரிக்கையை கருத்தில் கொள்ளாமல், காசாவில் பல்வேறு இடங்களில் இஸ்ரேல் படையினர் நடத்திய வான்வழி தாக்குதலில் பாலஸ்தீனர்கள் 82 பேர் உயிரிழந்தனர். தொடர்ந்து இஸ்ரேல் படையினர் தாக்குதல் நடத்தி வருவதால் பதற்றமான சூழல் நிலவுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Sudha
ஜூலை 03, 2025 21:30

இறந்தது 82 பேர் மட்டுமல்ல, மனிதம், ஈவிரக்கம், கண்ணியம் ìன்னும் எத்தனைyo...


SUBBU,MADURAI
ஜூலை 03, 2025 18:53

போரினால் பாதிக்கப்பட்ட பாலஸ்தீன மக்கள் அனைவரும் இடம்பெயர்ந்து தினசரி அச்சுறுத்தல்கள் பட்டினி போன்ற பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர்: இதற்கெல்லாம் மூல காரணம் யார் என்று பலர் கேட்க விரும்பாத சில சங்கடமான உண்மைகளைப் பற்றிப் பேசலாம். கணிசமான எண்ணிக்கையிலான காசா மக்கள் அங்கு தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான ஹமாஸை ஆதரிக்கின்றனர். 2024 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் சுமார் 38 சதவீத காசாவாசிகள் ஹமாஸை தங்கள் விருப்பமான அரசியல் கட்சியாகக் குறிப்பிட்டுள்ளனர். அக்டோபர் 7 ஆம் தேதி ஹமாஸ் தீவிரவாதிகள் இஸ்ரேலில் நடத்திய கொடூரமான தாக்குதல்களை ஆதரிப்பதாக சுமார் 57 சதவீதம் பேர் தெரிவித்தனர். ஏராளமான வீடியோ மற்றும் நேரில் கண்ட சாட்சியங்கள் இருந்தபோதிலும் அன்று ஹமாஸ் எந்த அட்டூழியங்களையும் செய்யவில்லை என்று சுமார் 90 சதவீதம் பேர் மறுக்கின்றனர். காசா குழந்தைகள் யூதர்களை வெறுக்க வளர்க்கப்படுகிறார்கள். இஸ்ரேலியர்களையோ அல்லது யூதர்களையோ கொல்லும் எண்ணம் அவர்களின் சமூகத்தின் பல பகுதிகளில் முற்றிலும் சாதாரணமானது.அதே சமயம் ரஷ்யா மற்றும் உக்ரைன் போரில் பாதிக்கப்பட்ட பெரும்பாலான உக்ரேனியர்கள் போலந்து மற்றும் பிற அண்டை நாடுகளில் தஞ்சம் புகுந்தனர். நான் அண்டை நாடு என்று சொன்னதை நினைவில் கொள்க ஆனால் எகிப்து, ஜோர்டான் அல்லது பிற மத்திய கிழக்கு நாடுகள் ஏன் போரினால் பாதிக்கப்பட்ட காஸா மக்களை ஏன் அகதிகளாக ஏற்றுக் கொள்ளவில்லை என்று யாரும் கேட்பதாகத் தெரியவில்லை. அதிர்ச்சியூட்டும் விதமாக, எகிப்து போன்ற நாடுகள் காசா மக்களை தங்களின் அச்சுறுத்தலாகக் கருதுகின்றன என்பதுதான் இதற்கு காரணம். எனவே காசா மக்களை அகதிகளாக தங்கள் நாட்டுக்குள் அனுமதிப்பது மிகவும் ஆபத்தானது என்பதை பொது அறிவின் அடிப்படைக் கொள்கைகள் மிகத் தெளிவாகக் காட்டுகின்றன.


PERUMAL C
ஜூலை 04, 2025 09:36

well said , Peace group is always against peace in world. That is clearly understood by some


கோபாலகிருஷ்ணன் பெங்களூர்
ஜூலை 03, 2025 17:37

அதிபர் டிரம்பின் கோரிக்கையை ஏன் இஸ்ரேல் கருத்தில் கொள்ளவேண்டும்.... டிரம்ப் என்ன இஸ்ரேலின் அதிபரா ??? இஸ்ரேலின் பிணைய கைதிகளை விடுவிக்க மாட்டோம் என்று அடம் பிடிக்கும் ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு டிரம்ப் கருத்தை சொல்ல வேண்டியது தானே தவிர ஹமாஸ் தீவிரவாதிகள் அமெரிக்கர்களை பிணை கைதிகளாக வைத்திருந்தால் டிரம்ப் இப்படித்தான் கருத்து சொல்லி கொண்டிருப்பாரா ???? இதற்கு தீர்வு ஒன்று தான்...அனைத்து பிணைக்கைதிகளை விடுவித்து இனி எக்காலத்திலும் இஸ்ரேல் பக்கம் தலைவைத்து படுக்க மாட்டோம் என்று கூறினால் மிச்சமிருக்கும் காஸா மக்கள் நிம்மதியாக சந்தோஷமாக உயிர் வாழலாம்..... இதேபோன்று ஹிஸ்புல்லா தீவிரவாதிகளும் செய்தால் பாலிஸ்தீனியர்களும் நிம்மதியாக வாழலாம்....இவர்களை தூண்டிவிட்ட ஈரானும் நொண்டி குதிரை போலாகிவிட்டது அது எழுந்து நிற்கவே எத்தனை வருடம் ஆகும் என்று தெரியவில்லை..... ஆதலால் இத்தீவிரவாதிகளின் கொட்டம் இன்னும் சில ஆண்டுகளுக்கு அடங்கி இருக்கும் என்பது திண்ணம்....!!!


Tiruchanur
ஜூலை 03, 2025 17:37

ஸூப்பர்...


Nada Rajan
ஜூலை 03, 2025 17:36

காசா மக்கள் ஐயோ பாவம் தொடர்ந்து உயிர்களைப் போல சந்தித்து வருகின்றனர்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை