உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / கொட்டினால்தான் தேள்; குட்டிய கோர்ட்டுக்கு குனிந்தார் எலான் மஸ்க்; சட்டத்துக்கு கட்டுப்படுவதாக அறிவிப்பு

கொட்டினால்தான் தேள்; குட்டிய கோர்ட்டுக்கு குனிந்தார் எலான் மஸ்க்; சட்டத்துக்கு கட்டுப்படுவதாக அறிவிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பிரேசிலியா: கடந்த சில நாட்களுக்கு முன்னர் ' எக்ஸ் ' சமூக வலைதளத்திற்கு தடை விதித்து இருந்த பிரேசில் உச்சநீதிமன்றம், தற்போது அபராதம் விதித்து அதிரடி காட்டி உள்ளது.வெறுப்பை தூண்டும் பேச்சை கட்டுப்படுத்த வேண்டும், நீதிமன்றம் கேள்வி கேட்டால் பதிலளிக்க பொறுப்பான அதிகாரியை நியமிக்க வேண்டும் என எக்ஸ் சமூக வலைதளத்திற்கு பிரேசில் நாட்டு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து இருந்தது. இந்த உத்தரவை நிறைவேற்றவில்லை எனக்கூறி அந்த வலைதளத்திற்கு உச்சநீதிமன்றம் தடை விதித்தது.இதற்கு எக்ஸ் சமூக வலைதளத்தின் உரிமையாளர் எலான் மஸ்க் எதிர்ப்பு தெரிவித்து இருந்தார்; விமர்சனமும் செய்து வந்தார். ஆனால் பிரேசில் உச்சநீதிமன்றம் தன் நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளவில்லை. இதனால் உலகின் பெரிய நாடுகளில் ஒன்றான பிரேசிலில் எக்ஸ் தளம் இல்லாத நிலை ஏற்பட்டது.வேறு வழியில்லாத நிலையில், கடந்த வாரம் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு கட்டுப்படுவதாகவும், தடையை நீக்க வேண்டும் என மேல்முறையீடு செய்தது.இதனை விசாரித்த நீதிபதி அலெக்சாண்ட்ரே டி மோரஸ், நிறுவனம் முன்பு உத்தரவிட்டு இருந்தபடி, எக்ஸ் நிறுவனம் 3.4 மில்லியன் அமெரிக்க டாலர் அபராதத்தை செலுத்த வேண்டி உள்ளது. இதனை செலுத்தாத பட்சத்தில், எக்ஸ் சமூக வலைதளம் மற்றும் ஸ்டார்லிங்க் நிறுவனத்தின் சொத்துகளை முடக்குவோம். தடையை மீறிய ஒரு சிலருக்கு மட்டும் எக்ஸ் சமூக வலைதளத்தை அணுக முடிந்தது. இதற்காக கூடுதலாக 1.8 மில்லியன் டாலர் அபராதத்தை அந்த நிறுவனம் செலுத்த வேண்டும். இவ்வாறு நீதிபதி உத்தரவு பிறப்பித்து இருந்தார்.இது தொடர்பாக எக்ஸ் நிறுவனம் எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை. ஏற்கனவே உள்ள அபராதத்தை செலுத்த முன்வந்துள்ள அந்த நிறுவனம், புதிதாக விதிக்கப்பட்ட 1.8 மில்லியன் டாலர் அபராதத்திற்கு எதிராக மேல்முறையீடு செய்யவும் திட்டமிட்டு வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

சிங்காரவேலன்
செப் 28, 2024 14:39

இவருக்கெல்லாம் இதுவும் வேண்டும் இன்னமும் வேண்டும்


Ramesh Sargam
செப் 28, 2024 12:21

உலகில் எவ்வளவோ பணக்காரர்கள் இருக்கிறார்கள். அதில் ஒருசிலர் இவரைப்போல் தலை கணம் பிடித்து ஆடுகிறார்கள். கோர்ட்டு குட்டு வைத்து திருத்தவேண்டி இருக்கிறது. இது போன்ற தலை கணம் பிடித்தவர்களுக்கு ஒன்று புரிவதில்லை - அவர்கள் இறந்தவுடன் அவர்கள் கூட அவர்கள் சம்பாதித்து சேர்த்துவைத்த செல்வங்கள் வருமா என்று. புரிந்தால் இப்படி தலை கணம் பிடித்து ஆடமாட்டார்கள். இந்தியாவில் கூட பலர் இப்படி தலை கணம் பிடித்து ஆடுகிறார்கள். ஆனால் இந்தியாவில் நீதிமன்றங்கள் இதுபோன்று குட்டு வைத்து திருத்த முயலுவதில்லை. அதுதான் மிகப்பெரிய பிரச்சினை இந்தியாவில்.


சமீபத்திய செய்தி