உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / ஒரே ஒரு காப்பி 60 ஆயிரம் ரூபாய்; அதிகபட்ச விலை என கின்னஸ் சாதனை பதிவு

ஒரே ஒரு காப்பி 60 ஆயிரம் ரூபாய்; அதிகபட்ச விலை என கின்னஸ் சாதனை பதிவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

துபாய்: பனாமா நாட்டில் விளைந்த உயர்தர காப்பியை பயன்படுத்தி, துபாயில் தயார் செய்யப்படும் ஒரு கோப்பை பில்டர் காப்பி 60 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன் அதிகபட்ச விலைக்காக, கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. ஆடம்பர வாழ்க்கைக்கு பெயர் பெற்றது துபாய் என்பது நாம் எல்லோரும் அறிந்த ஒன்று தான். அதற்கு உதாரணமாக அங்கு உள்ள காபி ஷாப்பில், பனாமா நாட்டில் விளைந்த உயர்தர காப்பியை பயன்படுத்தி, தயார் செய்யப்பட்ட ஒரு கப் காப்பி 2,500 திர்ஹாமிற்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இது, இந்திய மதிப்பில் ரூ.60 ஆயிரம். இந்த காப்பிக்கு துபாயில் வசிக்கும் செல்வந்தர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. உலகில் மிகக் குறைந்த அளவே விளையும் இந்த வகை காப்பி, அதீத சுவை கொண்டிருப்பதால் விலையும் பன்மடங்கு அதிகம். மிஷின் இல்லாமல், கைகளால் தயாராகும் இந்த பில்டர் காப்பி, இதன் அதிகபட்ச விலைக்காக, கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. இந்த காப்பி, துபாயின் ரோஸ்டர்ஸ் ஸ்பெஷாலிட்டி காப்பி ஹவுசில் மட்டுமே கிடைக்கிறது. https://x.com/dinamalarweb/status/1974315223596384757''நாங்கள் பனாமா நாட்டில் அதிக தொடர்பில் இருப்பதால் மட்டுமே எங்களுக்கு இந்த காப்பி கிடைக்கிறது. இந்த காப்பி கிடைப்பது மிகவும் அரிதான ஒன்றாகவே இருக்கிறது. சுவை குறித்து காப்பி பிரியர்களிடம் பல கருத்துக்களை பெற்றோம். குடித்துப் பார்த்த அனைவருமே, இந்த காப்பியின் சுவை நன்றாக இருக்கிறது என்கின்றனர்,'' என துபாயின் ரோஸ்டர்ஸ் ஸ்பெஷாலிட்டி காப்பி ஹவுசின் நிறுவனர் கான்ஸ்டான்டின் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Kasimani Baskaran
அக் 04, 2025 21:59

லுவாக் காப்பிதான் பல நாடுகளில் பிரபலம். $10-30 க்கு ஒரு கப் கிடைக்கும். நமக்கு ப்ரு பியூர் காபி போதும். எந்த நாட்டுக்கு சென்றாலும் ஒரு பாட்டில் தூள் எடுத்துச்சென்று விடுவேன்.


ராமகிருஷ்ணன்
அக் 04, 2025 21:37

துபாயில் எண்ணெய் கிணறுகளில் ஆயில் வற்றி விட்டால் இந்த காப்பி காணாமல் போய் விடும்.


வாய்மையே வெல்லும்
அக் 04, 2025 14:38

நான் நினைத்ததை நீர் எழுதிட்டேர் பலே ஸ்வாமின். கும்ப கோணம் டிகிரி காபிக்கு நிகர் வேறு எதுவுமில்லை. துபாய் நாட்டில் வர்த்தக ரீதியாக விலை மிகைப்படுத்தி கூறி இருக்கலாம். எல்லாமே வாய் ஜாலம் தான்


Saai Sundharamurthy AVK
அக் 04, 2025 13:36

நம்மூரில் அதிக சுவையுடன் கூடிய கும்பகோணம் டிகிரி காப்பி 30 ரூபாய்க்கே கிடைக்கிறதே.......! ஆலடிப்பட்டியான் கருப்பட்டிக் காப்பியின் சுவையும் அலாதி தான். அதுவும் 30 ரூபாய்க்கு கிடைக்கிறது......! 60,000 ரூபாய் செலவழித்து ஒரு கோப்பை காப்பி குடிப்பதால் என்ன சுவை கிடைத்து விடப் போகிறது ???? வாயில் கொஞ்சம் பனங்கற்கண்டைப் போட்டுக் கொண்டு விடலாம். சுவையோ சுவையாக இருக்கும்.


Field Marshal
அக் 04, 2025 13:22

ரெயில்வே ஸ்டேஷன்ல பத்துரூபாய்க்கு காப்பி தராங்களே


angbu ganesh
அக் 04, 2025 14:01

அது காப்பி இல்ல தண்ணில கொஞ்சூண்டு பால் ஊத்தி கொஞ்சூண்டு காப்பி பவ்டர் போட்டு கொடுக்கற விஷம்


வாய்மையே வெல்லும்
அக் 04, 2025 14:40

ரயில்வேயில் காபி என சொல்லி காபி பெயருக்கே களங்கம் விளைவிக்கிறார்கள். இன்றுவரைக்கும் சகித்து கொண்டு மக்கள் அதை பருகிட்டு இருக்காங்க. அதை தட்டி கேட்டால் நன்றாக இருக்கும். பூனைக்கு யார் மணிக்கட்டுவது ?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை