ஆப்கன் நில நடுக்கம் 2,200ஐ கடந்த பலி எண்ணிக்கை
ஜலாலாபாத்:ஆப்கானிஸ்தான் நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை, 2,205 ஆக உயர்ந்துள்ளதாக அந்நாட்டின் தலிபான் அரசு தெரிவித்துள்ளது. தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானில் சமீபத்தில் 6.0 ரிக்டர் அளவுக்கு கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில், பல கிராமங்கள் தரைமட்டமாகின. இதில் ஆயிரக்கணக்கான மக்கள் இடிபாடுகளில் சிக்கி கொண்டனர். இடிந்து விழுந்த வீடுகளில் இருந்து இதுவரை நுாற்றுக்கணக்கான உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.இதையடுத்து பலி எண்ணிக்கை 2,200ஐ தாண்டியுள்ளதாக தலிபான் அரசு தெரிவித்துள்ளது. தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கை தொடர்ந்து நடந்து வருவதாகவும், மீட்கப்பட்டவர்களுக்கு முதலுதவி மற்றும் அவசரகால பொருட்களை வழங்குவது தொடர்ந்து நடந்து வருவதாகவும் தெரிவித்து உள்ளனர். கடந்த 2021ல் தலிபான் பயங்கரவாத அமைப்பு, ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியதில் இருந்து, அந்நாட்டை பேரழிவுக்கு உட்படுத்திய மூன்றாவது நிலநடுக்கம் இதுவாகும்.