உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / 7 விநாடிகளில் இதய நோயை கண்டறியும் ஏ.ஐ., செயலி; இந்திய வம்சாவளி சிறுவனுக்கு குவியும் வாழ்த்து

7 விநாடிகளில் இதய நோயை கண்டறியும் ஏ.ஐ., செயலி; இந்திய வம்சாவளி சிறுவனுக்கு குவியும் வாழ்த்து

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

தலாஸ்: 7 விநாடிகளில் இதய நோயை கண்டறியும் ஏ.ஐ., செயலியை கண்டுபிடித்த அமெரிக்காவைச் சேர்ந்த 14 வயது இந்திய வம்சாவளி சிறுவனுக்கு அமெரிக்க முன்னாள் அதிபர்கள் ஒபாமா, ஜோ பைடன் ஆகியோர் பாராட்டு தெரிவித்துள்ளனர். அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் உள்ள தலாஸ் நகரில் வசித்து வரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் 14 வயது சிறுவன் சித்தார்த் நந்த்யாலா. இவர் ஆந்திராவின் ஐதராபாத் பூர்வீகமாகக் கொண்டவர். உலகளவில் ஏ.ஐ., சான்றிதழ் பெற்ற இளம் மென்பொறியாளர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இவர் தொழில்நுட்பம் மற்றும் மருத்துவ துறைக்கு உதவும் விதமான புதிய படைப்பை உருவாக்கி உலகளவில் கவனத்தை பெற்றுள்ளார். 7 விநாடிகளில் இதய துடிப்பின் சத்தத்தை வைத்து இதய நோயை கண்டுபிடிக்கும் சர்காடியன் ஏ.ஐ., எனும் செயலியை உருவாக்கியுள்ளார். உலகளவில் நிகழும் இறப்புகளில் 31 சதவீதம் உயிரிழப்புகள் இருதய நோய் தொடர்பானது என்பதே, தன்னை இந்த புதிய கண்டுபிடிப்பை உருவாக்க தூண்டியதாக சித்தார்த் நந்த்யாலா தெரிவித்துள்ளார். இந்தியா, அமெரிக்கா என இருநாடுகளிலும் சேர்த்து 2,000 நோயாளிகளிடம் இந்த சோதனை செய்து பார்க்கப்பட்டது.அண்மையில் சித்தார்த் நந்த்யாலாவை சந்தித்து ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு மற்றும் துணை முதல்வர் பவன் கல்யாண் ஆகியோர் வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

Kasimani Baskaran
ஏப் 10, 2025 04:02

சித்தார்த் நந்த்யாலாவுக்கு பாராட்டுகள்... மெசின் லேர்னிங் என்பது என்பது பலருக்கு பிடிபடாத விஷயம்..


ஙாங்ஞா
ஏப் 09, 2025 23:31

உங்கள் வியாதி முற்றிலும் குணமாக வாய்ப்புள்ளது.


Krishnan
ஏப் 09, 2025 23:07

Great. This isnt in main stream news while anything against Indians is spread fast by bots..


Thetamilan
ஏப் 09, 2025 22:32

தங்கள் தவறுகளை தோல்விகளை மறைக்க இப்படி சிறுவர்களை கேடயமாக பயன்படுத்தவேண்டாம் . இந்துமதவாத குழப்பத்தின் உச்சம் இது


JAYACHANDRAN RAMAKRISHNAN
ஏப் 10, 2025 05:32

ஆந்திராவை பூர்வீகமாக இல்லாமல் தமிழகத்தை பூர்வீகமாக கொண்டு இருந்தால் உங்களுக்கு ஓகேவாக இருந்திருக்கலாம். ஆந்திர முதல்வர் சிறுவனை அழைத்து பாரட்டியதற்கு பதிலாக தமிழக முதல்வர் அழைத்து பாராட்டி இருந்திருந்தால் இந்நேரம் சன் டிவி கலைஞர் டிவியில் மற்றும் சுற்றத்தார் டிவிக்களில் செய்திகள் அனல் போல் பறந்திருந்தால் நமக்கு நன்றாக தான் இருந்திருக்கும். பெரியாரை கூட அழைத்து வாழ்த்தி இருக்கலாம். ஆனால் இல்லையே. பரவாயில்லை புரோ எப்படியோ ஒன்றை தேற்றி நாமும் இந்தியாவை பரபரப்பாக்குவோம். நம்மால் முடியாதா என்ன. புதிய செயலி ஒன்றை கண்டுபிடித்து 5 வினாடிகளில் டாஸ்மாக் ஊழல்களை அமலாக்க துறை கண்டுபிடிக்காமல் செய்யும் தொழில்நுட்பம் ஒன்றை கண்டுபிடித்து உலகளவில் பிரபலப்படுத்துவோம். தமிழகத்தை மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடக்கூடாது மற்ற நாடுகளுடன் ஒப்பிட வேண்டும் என்று முதல்வர் சொல்லி இருக்கிறார்.


M R Radha
ஏப் 10, 2025 06:28

அடிக்கடி உறுதி செய்கிறாய்.


Thetamilan
ஏப் 09, 2025 22:31

ஏற்கனவே நோய் உள்ளவர்களிடம் நோய் உள்ளது என்று கூற ஒரு AI வேண்டுமா ?


Thetamilan
ஏப் 09, 2025 22:30

நோய் இல்லாதவர்களுக்கும் ஒரே வினாடியில் கண் இமைக்கும் நேரத்தில் நோய் உண்டாக்கிவிடலாம் .


Thetamilan
ஏப் 09, 2025 22:29

நோயாளிகள் என்று ஏற்கனவே நிரூபணமானவர்களிடம் ஏன் சோதனை செய்யவேண்டும் ?.


Thetamilan
ஏப் 09, 2025 22:28

7 வினாடிகளில் நோய் இருப்பதுபோல் இருக்கும் பத்து வினாடிகளில் இல்லாமல் போய்விடும்.ஒரு சிறுவனை வைத்துக்கொண்டு உலகத்தில் உள்ளவர்களை எல்லாம் மூடர்களாக்க வேண்டாம் , இந்துமதவாத மூடநம்பிக்கையை விஞ்ஞானம் என்ற பெயரில் பரப்ப வேண்டாம்.


Kundalakesi
ஏப் 09, 2025 23:06

உண்மை பெயரை எங்கேயும் கூற மாட்டான்


மீனவ நண்பன்
ஏப் 09, 2025 23:51

திராவிட மாடலுக்கு முட்டு கொடுக்கும் நேரங்களில் இந்த மாதிரி ஞானோதயம் உங்களுக்கு வர்றதில்லயே


Kasimani Baskaran
ஏப் 10, 2025 04:03

விஞ்ஞானத்தை மூட நம்பிக்கை என்று சொல்லவேண்டும் என்றால் அதற்க்கு திராவிட அறிவு வேண்டும்...


sridhar
ஏப் 10, 2025 06:09

நோய் என்பது பொதுச்சொல் . அது என்ன விதம் என்று கண்டறியத்தான் கருவிகள் , பரிசோதனைகள் . திராவிட மக்குக்கு ஹிந்து விரோதம் மட்டும் தான் தெரியும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை