மேலும் செய்திகள்
ஈக்வடார் சிறையில் ஏற்பட்ட மோதல்: 31 கைதிகள் உயிரிழப்பு
2 minutes ago
வங்கதேசத்தில் பல இடங்களில் குண்டுவீச்சு
3 hour(s) ago | 1
மாலே: நம் நாட்டு கடன் உதவியுடன் மாலத்தீவில் கட்டப்பட்ட ஹனிமாதுா சர்வதேச விமான நிலையத்தை, அந்நாட்டின் அதிபர் முகமது முய்சு திறந்து வைத்தார். தெற்காசிய நாடான மாலத்தீவில் ஏற்றுமதி, இறக்குமதி செ ய்ய வசதியாக, பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு இந்தியா நிதியுதவி அளித்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, மாலத்தீவின் ஹனிமாதுா சர்வதேச விமான நிலைய மேம்பாட்டுக்காக, 7,000 கோடி ரூபாய் கடனுதவி வழங்கும் ஒப்பந்தம், 2019ல் கையெழுத்தானது. கடந்த நான்கு ஆண்டுகளாக நடைபெற்று வந்த கட்டுமானப் பணிகள் முடிந்து, நேற்று முன்தினம் இந்த விமான நிலையத்தை, அந்நாட்டின் அதிபர் முகமது முய்சு திறந்து வைத்தார். இதில், இந்தியா சார்பில், தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த விமான போக்குவரத்து அமைச்சர் ராம் மோகன் நாயுடு பங்கேற்றார். அப்போது பேசிய அதிபர் முய்சு, “இது வெறும் விமான நிலையம் அல்ல. வடக்கு மாலத்தீவின் செழிப்புக்கான வாயில். இதனால் சுற்றுலா, விவசாயம், மீன்பிடி, பொருளாதார முன்னேற்றம் ஏற்படும். இந்தியா- - மாலத்தீவு துாதரக உறவுகளின் 60 ஆண்டு நிறைவை கொண்டாடும் இவ்வாண்டில், இந்த விமான நிலையம் இரு நாடுகளின் உறவுகளின் வலிமையை உறுதிப்படுத்தும் நினைவுச் சின்னமாக திகழ்கிறது,” என்றார்.
2 minutes ago
3 hour(s) ago | 1