உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் முனீர் பதவியில் தொடர சட்ட திருத்தம்

பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் முனீர் பதவியில் தொடர சட்ட திருத்தம்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் முனீர் அப்பதவியில் தொடர்வதற்கு வசதியாக நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளும் முயற்சிகள் துவங்கியுள்ளன. நம் அண்டை நாடான பாகிஸ்தானின் ராணுவ தளபதியாக உள்ளவர் அசிம் முனீர். மிகவும் சக்திவாய்ந்த அவருடைய கண்ணசைவுக்கு ஏற்பவே, ஆட்சி அதிகாரம் நடக்கிறது. கடந்த, 2022 நவ.,ல் ராணுவ தளபதியான அசிம் முனீரின் ஆதரவை பெறுவதற்காக, ஜெனரல் அந்தஸ்தில் இருந்த அவருக்கு, பீல்டு மார்ஷல் என்ற அந்தஸ்து சமீபத்தில் வழங்கப்பட்டது. இந்நிலையில், வரும் 27ம் தேதியுடன் ஆசிம் முனீர் ஓய்வு பெற உள்ளார். அந்நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தின்படி, ஜெனரல் அந்தஸ்தில் உள்ள ராணுவ தளபதிக்கே பதவி நீட்டிப்பு வழங்க முடியும். அசிம் முனீருக்கு பதவி நீட்டிப்பு வழங்குவதற்கு வசதியாக, அரசியலமைப்பு சட்டத்தின், 243வது பிரிவில் திருத்தங்கள் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஆளும் கூட்டணியில் உள்ள பி.பி.பி., எனும் பாகிஸ்தான் மக்கள் கட்சித் தலைவர் பிலாவல் புட்டோவுடன், பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் பேசியுள்ளார். இந்தத் தகவலை பிலாவல் புட்டோ தன் சமூக வலைதளப் பக்கத்தில் உறுதி செய்துள்ளார். அரசியலமைப்பு சட்டத்தில் மேற்கொள்ளப்படும் திருத்தம், ராணுவ தளபதி அசிம் முனீரின் பதவி மற்றும் அதிகாரத்தை பலப்படுத்தவும், நீட்டிக்கவும் வழிவகுக்கும் என கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

sekar ng
நவ 05, 2025 08:12

பாகிஸ்தான் சட்டம் ட்ரோனால்ட் டிரம்ப் கையில் உள்ளது. அவர் சொல்வதற்கு பணியாளர்கள் தான் பாகிஸ்தான் அரசும் ராணுவமும்


புதிய வீடியோ