உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / ராணுவ வலிமையுள்ள நாடுகள் பட்டியலில் அமெரிக்காவுக்கு முதலிடம்: நான்காம் இடத்தில் இந்தியா

ராணுவ வலிமையுள்ள நாடுகள் பட்டியலில் அமெரிக்காவுக்கு முதலிடம்: நான்காம் இடத்தில் இந்தியா

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: நாட்டின் ராணுவத்தை வலுப்படுத்துவதில் உலகளவில் அமெரிக்கா முதலிடத்தில் இருப்பதாக ஆய்வறிக்கையில் தகவல் வெளியாகியுள்ளது. இதில் நம் நாடு நான்காம் இடத்தில் உள்ளது.குளோபல் ஃபையர் பவர் என்ற இணையதளம் , உலகளவில் நாடுகள் தங்களின் ராணுவத்தில் உள்ள வீரர்கள், ராணுவ தளவாடங்கள் இருப்பு, ராணுவத்தின் நிதி நிலைமை, புவியியல் இருப்பிடம், உள்ளிட்ட 60 காரணங்களை ஆய்வு செய்து அதிக குறியீட்டை பெற்றுள்ள நாடுகள் குறித்த தகவல்களை வெளியிட்டுள்ளது. இதில் 2024-ல் உலகளவில் ராணுவத்தை வலுப்படுத்தும் 145 நாடுகளின் பட்டியலில் முதல் பத்து நாடுகள் பட்டியல் விவரம்:1)அமெரிக்கா, 2)ரஷ்யா,3) சீனா,4) இந்தியா, 5) தென்கொரியா , 6) பிரிட்டன், 7) ஜப்பான்,8) துருக்கி,9)பாகிஸ்தான், 10) இத்தாலி ஆகிய நாடுகள் இடம் பிடித்துள்ளது. அதே போன்று குறைந்த ராணுவ வலிமையுடைய நாடுகள் பட்டியலில் முதலிடத்தில் பூட்டான் உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Sivakumar
ஜன 17, 2024 10:27

அமெரிக்க முதல் இடத்தில் வருது என்றால் அங்கே இருக்கிற மக்கள்ல பாதி பேர் நம்ம தான் இருக்கும் மற்றும் மிக முக்கியமான பொறுப்புகளில் நம்ம இந்தியர்கள் தான் இருக்கிறார்கள் மிக முக்கியமான இடத்தில் எல்லாம் நம்மதான் இந்தியாவின் அவர்கள் ஜீரோ ஜீரோ


Mohan
ஜன 17, 2024 09:40

அது சரி .. எப்பிடி இந்த பத்துக்குள்ள வந்தது


கந்தசாமி,மதகுபட்டி
ஜன 17, 2024 11:03

அறிவாலய எடுபிடிக்கு அதை சொன்னால் மட்டும் புரிஞ்சுக்கிற அளவுக்கு இருக்கா?


Kasimani Baskaran
ஜன 17, 2024 00:01

ஒற்றைப்பிள்ளை கொள்கையுடைய சீன வீரர்கள் போர் என்று வந்தால் முதலில் ஓடி உயிர் பிழைத்துகொள்வார்கள். ஆதலால் உண்மையான போர் என்று வந்தால் இந்தியாவால் சிறப்பாகவே செய்ய முடியும். தளவாடங்கள் இல்லாமல் பார்த்தால் இந்தியா முதல் இரண்டு இடங்களுக்குள் வரும்.


Ramesh Sargam
ஜன 16, 2024 23:50

முதல் பத்தில் வடகொரியா இல்லாமல் போனது ஆச்சர்யம் அளிக்கிறது.


Venkataraman
ஜன 16, 2024 23:22

எல்லா நாடுகளிலும் ராணுவம் நவீனமயமாக்கப்படுகிறது. புதிய தொழில்நுட்பங்களுடன், செயற்கை நுண்ணறிவுடன், தானியங்கி கருவிகளான ரோபோக்கள், ட்ரோன்கள், லேசர் மூலமாகவும் துணைக்கோள்களின் வழிகாட்டுதலின் மூலமாகவும் இலக்கை துல்லியமாக தாக்கும் பல்வேறு ஏவுகணைகள் இப்போது கண்டுபிடிக்கப்பட்டு விட்டன. விஞ்ஞானம் வேகமாக வளர்ந்து வருவதை போல ராணுவமும் போர் யுக்திகளும் மாறி வருகிறது.


Bye Pass
ஜன 16, 2024 23:16

அமெரிக்காவை விரட்டியடித்த ஆபிகானிஸ்தான் எந்த இடத்தில ?


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை