உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / பாகிஸ்தானுக்கு அமெரிக்காவின் நவீன ஏவுகணை

பாகிஸ்தானுக்கு அமெரிக்காவின் நவீன ஏவுகணை

இஸ்லாமாபாத்:அமெரிக்காவின் நவீன 'ஏ.ஐ.எம். - 120' ரக ஏவுகணைக ளை பாகிஸ்தானுக்கு வழங்க அந்நாட்டின் போர் விவகாரங்கள் துறை ஒப் புதல் அளித்துள்ளது. இது குறித்து அமெரிக்க போர் விவகாரங்கள் துறை வெளியிட்ட அறிக்கை: அரிசோனா மாகாணம் டூசான் நகரைச் சேர்ந்த 'ரேதியான் கம்பெனி' தன் தயாரிப்பான ஏ.ஐ.எம். - 120 ஏவுகணைகளின் உற்பத்திக்கான ஒப்பந்தத்தை பெற்றுள்ளது. ஒப்பந்தத்தின்படி, பாகிஸ்தான் உள்ளிட்ட பல நாடுகள் ஏவுகணைகளை பெற உள்ளன. இது வானில் இருந்து வானில் உள்ள நடுத்தர துார இலக்குகளை தாக்கக் கூடியது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Ramesh Sargam
அக் 09, 2025 11:50

ஒருபக்கம் அமெரிக்க அதிபர் டிரம்ப் உலகில் நடக்கும் போரை நிறுத்த முயற்சிக்கிறார். மறுபக்கம் இப்படி நவீன ஏவுகணைகளை, ராணுவ பொருட்களை கொடுத்து வேறு நாடுகளுக்கு கொடுத்து அந்நாட்டை போர் தொடுக்க தயார் படுத்துகிறார். டிரம்ப்பின் செயல்கள் விநோதமாயிருக்கின்றன. ஒன்று அவர் மனநிலை பாதிக்கப்பட்டிருக்கவேண்டும், அல்லது நம்மை அவர் மனநலம் பாதித்தவர்கள் என்று கருதி இப்படி எல்லாம் செய்கிறாரோ என்று எண்ணத்தோன்றுகிறது.


முக்கிய வீடியோ