உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / சண்டை முடிந்தது சமாதானம் பிறந்தது: எலான் மஸ்க் சிறந்த மனிதர் என்கிறார் அதிபர் டிரம்ப்

சண்டை முடிந்தது சமாதானம் பிறந்தது: எலான் மஸ்க் சிறந்த மனிதர் என்கிறார் அதிபர் டிரம்ப்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: எலான் மஸ்க் எதிர்ப்பு தெரிவித்த மசோதா, செனட்டில் நிறைவேறி உள்ளது. இது தொடர்பாக நிருபர்கள் கேள்விக்கு, ''எலான் மஸ்க் சிறந்த மனிதர். அவர் சிறப்பாக செயல்பட கூடியவர்'' என டிரம்ப் பதில் அளித்தார்.அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வரி குறைப்பு, அமெரிக்க அரசின் கடன் உச்சவரம்பை அதிகப்படுத்துவதற்காக 'பெரிய அழகான வரி' என்ற பெயரில் கொண்டு வந்த மசோதா நேற்று செனட்டில் விவாதம் மற்றும் திருத்தங்களுக்கு அனுமதிக்கும் நடைமுறை ஓட்டெடுப்பில் இரு ஓட்டுகளில் தேர்வானது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=b93svkkw&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்த மசோதாவுக்கு தான் தொழிலதிபர் எலான் மஸ்க் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.எலான் மஸ்க் அமெரிக்க அதிபரின் நெருங்கிய ஆலோசகராக கடந்த மே மாதம் பணியாற்றினார். பின்னர் அவரது பதவிக்காலம் முடிந்தது. இந்நிலையில், எலான் மஸ்க் எதிர்ப்பு தெரிவித்த 'பெரிய அழகான வரி' மசோதா செனட்டில் நிறைவேறியது குறித்து டிரம்ப் கூறியதாவது: எலான் மஸ்க் ஒரு அற்புதமான மனிதர் என்று நான் நினைக்கிறேன். நான் அவருடன் அதிகம் பேசியதில்லை, ஆனால் அவர் எப்போதும் நன்றாகச் செயல்படுவார் என்பது எனக்குத் தெரியும். அவர் ஒரு புத்திசாலி. அவர் உண்மையில் என்னுடன் பிரசாரம் செய்து, இதையும் அதையும் செய்தார். ஆனால் அவர் கொஞ்சம் வருத்தப்பட்டார், அது பொருத்தமானதல்ல. இவ்வாறு டிரம்ப் கூறினார்.மசோதாவுக்கு மஸ்க் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் டிரம்புக்கும் அவருக்கும் கடும் மோதல் ஏற்பட்டது. இருவரும் ஒருவரை ஒருவர் திட்டி தீர்த்தனர். மஸ்க் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட அரசு ஒப்பந்தங்களை ரத்து செய்யப் போவதாக அதிபர் மிரட்டலும் விடுத்தார்.பின்னர் மஸ்க் வருத்தம் தெரிவித்ததை தொடர்ந்து பிரச்னை முடிவுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

குடந்தை செல்வகுமார்
ஜூன் 30, 2025 16:49

இவனுங்க அக்கப்போர் தாங்க முடியல


Ramesh Sargam
ஜூன் 30, 2025 11:41

சகிக்கல.


N Srinivasan
ஜூன் 30, 2025 11:13

போங்க நீங்களும் உங்க பழ விளையாட்டும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை