உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / அமெரிக்காவில் இன்னொரு அதிர்ச்சி; நீதிபதியை சுட்டுக்கொன்ற போலீஸ்காரர்; விபரீதத்தில் முடிந்த வாக்குவாதம்

அமெரிக்காவில் இன்னொரு அதிர்ச்சி; நீதிபதியை சுட்டுக்கொன்ற போலீஸ்காரர்; விபரீதத்தில் முடிந்த வாக்குவாதம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: அமெரிக்காவில் நீதிமன்ற வளாகத்தில் நீதிபதியை போலீஸ்காரர் சுட்டுக்கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் பெருகியுள்ள துப்பாக்கி கலாசாரத்தால், நாளுக்கு நாள் கொலை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.அங்குள்ள கென்டுகி மாகாணத்திற்குட்பட்ட மாவட்ட நீதிபதியாக இருந்தவர் கெவின் முல்லின்ஸ், 54. இவர் லெட்சர் கவுண்டி கோர்ட் அலுவலகத்தில், இவருக்கும், போலீஸ் அதிகாரி மிக்கே ஸ்டைன்ஸூக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இருவரும் பரஸ்பரமாக வாக்குவாதம் செய்த நிலையில், ஒரு கட்டத்தில் கோபத்தின் உச்சிக்கு சென்ற போலீஸ் அதிகாரி மிக்கே ஸ்டைன்ஸ், தன்னிடம் இருந்த துப்பாக்கியை எடுத்து நீதிபதி கெவின் முல்லின்ஸை சுட்டுக்கொன்றார். தற்போது, போலீஸ் அதிகாரி மிக்கே ஸ்டைன்ஸை போலீசார் கட்டுப்பாட்டில் எடுத்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் எதற்காக நடந்தது என்பது குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

KayD
செப் 20, 2024 14:28

இது தாண்டா போலீஸ்... நிறைய தமிழ் படம் telegu படம் அமெரிக்கா la ரிலீஸ் ஆகிற effect இது. Ethsvsdu படம் பார்த்து இருப்பார் போட்டு தள்ளி விட்டார். படத்தில் irukum போலீஸ் paathaa zoo கீப்பர் Jay brewer மாதிரி இருக்கே


RAMAKRISHNAN NATESAN
செப் 20, 2024 13:51

ம்ம்ம்ம்ம்ம்ம்ம் ....... வல்லரசை குறை சொல்லக்கூடாது ............


Rasheel
செப் 20, 2024 12:31

ஆசியாவின் பல நாடுகளிலும் அரசாங்கத்தை மாற்றும் பணியில் அமெரிக்கா ஈடுபடுகிறது. பங்களாதேஷ் அதற்கு இப்போதைய உதாரணம்.


Iyer
செப் 20, 2024 12:30

இன்றைய அமெரிக்கா 10 கோடி அப்பாவி செவ்விந்தியர்களின் பிணங்களுக்கு மேல் எழுப்பப்பட்ட ஒரு நரகம் ஆகும். செவ்விந்தியர்கள் நம் இந்தியர்களைப்போல் மிக செல்வம் படைத்த கருணை மிகுந்த அப்பாவிகளாக இருந்தார்கள். ஐரோப்பாவில் இருந்து சென்ற ஸ்பெயின் மற்றும் பிரிட்டிஷ் திருடர்கள் 10 கோடி செவ்விந்தியர்களை இரக்கமின்றி கொன்று குவித்தான்கள் இன்று அந்த அமெரிக்கா திருடர்கள் உலகத்துக்கே மனித உரிமை பற்றி பாடம் எடுக்கிறான்கள்


Ramesh Sargam
செப் 20, 2024 11:37

இந்த அமெரிக்காகாரங்களுக்கு தங்கள் புறமுதுகை சரியாக, சுத்தமாக வைத்துக்கொள்ள தெரியாது. ஆனால் பிற நாட்டு விவகாரத்தில் முந்திரிக்கொட்டை மாதிரி தலையிடுவான். என்னவோ இந்த உலகமே இவன் கட்டுப்பாட்டிற்குள் இருப்பது மாதிரி நடந்துகொள்வான். டே அமெரிக்காகாரனே, முதலில் உன் புறமுதுகை சுத்தம் செய்யும் வழியைப்பார்.


s sambath kumar
செப் 20, 2024 11:29

இந்த லட்சணத்தில் மனித உரிமையை பற்றி நமக்கு பாடம் எடுக்கிறானுங்க இந்த அமெரிக்கனுங்க


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை