உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / நிவாரண முகாம் அருகே இஸ்ரேல் தாக்குதல்; 27 பாலஸ்தீனியர்கள் பலி

நிவாரண முகாம் அருகே இஸ்ரேல் தாக்குதல்; 27 பாலஸ்தீனியர்கள் பலி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

காசா: காசாவின் தெற்கு முனை பகுதியில், நிவாரண பொருட்கள் வழங்கும் இடமருகே இஸ்ரேல் விமானப்படை நடத்திய தாக்குதலில் பாலஸ்தீனத்தை சேர்ந்த 27 பேர் உயிரிழந்தனர்.இது தொடர்பாக விளக்கமளித்துள்ள இஸ்ரேல் விமானப்படை, குறிப்பிட்ட வழித்தடத்தை தாண்டி வேறு பகுதிகளில் சந்தேகத்திற்கு இடமான வகையில் அவர்கள் சென்றதாகவும், தங்கள் படைகள் அருகே வர வேண்டாம் என்ற எச்சரிக்கையை அவர்கள் பொருட்படுத்தவில்லை என விளக்கமளித்து உள்ளது. என்ன நடந்தது என்பது குறித்து விசாரணை நடப்பதாகவும் தெரிவித்து உள்ளது.காசாவின் வடக்கு முனையில் நடக்கும் போரில், தங்களது நாட்டை ராணுவத்தைச் சேர்ந்த மூன்று வீரர்கள் கொல்லப்பட்டு உள்ளதாக இஸ்ரேல் தெரிவித்து உள்ளது. ஆனால், இதனை ஏற்க மறுத்துள்ள ஐ.நா., மனித உரிமைகள் அமைப்பானது, இந்த தாக்குதல் குறித்து பாரபட்சமற்ற முறையில் விசாரணை நடத்த வேண்டும். சாமானிய மக்கள் மீது தாக்குதல் நடத்துவது என்பது சர்வதேச சட்டங்களை மீறிய செயல் எனவும், இது போர் குற்றம் எனவும் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

theruvasagan
ஜூன் 04, 2025 09:57

தீவிரவாத மண்ணில் முளைக்கும் அத்தனை செடிகளும் நச்சுத் தன்மையோடு இருக்கவே அதிக வாய்ப்புள்ளது என்கிற கோணத்தில் இஸ்ரேல் நினைக்கிறதோ.


Kasimani Baskaran
ஜூன் 04, 2025 04:05

நிரந்தரமாக தீவிரவாதம் என்கிற பேராபத்தை எதிர்கொண்டு பயணிப்பது இஸ்ரேல் மட்டுமல்ல எந்த ஒரு நாட்டுக்கும் சாத்தியமில்லை. ஆகவே ஹமாஸ் நிரந்தரமாக அழிக்கப்பட வேண்டிய தீவிரவாத அமைப்பு. இவ்வளவு கேவலப்பட்டுப் போனபின்னரும் அப்பாவிகளால் தீவிரவாதிகளை பிடித்துக்கொடுக்க முடியாதா?


பெரிய ராசு
ஜூன் 03, 2025 22:50

ஆனால், இதனை ஏற்க மறுத்துள்ள ஐ.நா., மனித உரிமைகள் அமைப்பானது, இந்த தாக்குதல் குறித்து பாரபட்சமற்ற முறையில் விசாரணை நடத்த வேண்டும். சாமானிய மக்கள் மீது தாக்குதல் நடத்துவது என்பது சர்வதேச சட்டங்களை மீறிய செயல் எனவும், இது போர் குற்றம் எனவும் தெரிவித்துள்ளது. வேணுமுன்னா மண்டிய போட்டு கெஞ்சுங்க ...


தமிழ்வேள்
ஜூன் 03, 2025 21:07

ஒரு இஸ்ரேல் வீரரின் உயிருக்கு குறைந்தது ஆயிரம் ஹமாஸ் பயங்கரவாதிகள் அவர்களை ஆதரித்தவன் உயிர் பிடுங்கி எடுக்கப்பட வேண்டும்....


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை