உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / சிறுபான்மையினர் எரித்துக்கொல்லப்படும் அட்டூழியம்: ஷேக் ஹசீனா குற்றச்சாட்டு

சிறுபான்மையினர் எரித்துக்கொல்லப்படும் அட்டூழியம்: ஷேக் ஹசீனா குற்றச்சாட்டு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

டாக்கா: '' வங்கதேசத்தில் இடைக்கால அரசு மத சுதந்திரத்தில் தலையிடுவதால் சிறுபான்மையினர் உயிருடன் எரித்துக் கொல்லப்படுகின்றனர்,'' என அந்நாட்டு முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா கூறியுள்ளார்.வங்கதேசத்தில் ஹிந்துக்கள் மீதான தாக்குதல் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. திபு சந்திர தாஸ் என்ற ஹிந்து இளைஞரை கும்பல் அடித்துக் கொன்றதுடன் அவரது உடலை மரத்தில் கட்டிவைத்தும், நடுரோட்டில் போட்டும் எரித்தனர். இந்த சம்பவத்தில் இருந்து அங்கு வசிக்கும் ஹிந்து மக்கள் மீள்வதற்குள், அவர்களின் வீடுகளுக்கு தீவைத்து எரிக்கப்பட்டன. நேற்று நள்ளிரவு மற்றொரு ஹிந்து மத இளைஞர் ஒருவரை கும்பல் ஒன்று அடித்துக் கொலை செய்தனர்.இந்நிலையில் இந்தியாவில் தஞ்சம் புகுந்துள்ள அந்நாட்டு முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா, கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு வெளியிட்ட வீடியோவில் கூறியதாவது: வங்கதேச நிறுவனர் நாட்டை, மதசார்பற்ற நாடாக இருக்க கனவு கண்டார். இந்த கனவு நிறைவேற, அனைத்து தரப்பு மக்களும் அமைதியாக வாழ்வதை அவாமி லீக் கட்சி உறுதி செய்தது. சட்டவிரோதமாக அதிகாரத்தை கைப்பற்றிய தற்போதைய அரசு, அனைத்து மதங்கள் மற்றும் சமூகங்களைச் சேர்ந்த மக்களின் மத சுதந்திரத்தில் தலையிடுகிறது என்பது வருத்தமளிக்கிறது. இதனால் மதச் சிறுபான்மையினர் உயிருடன் எரிப்பது போன்ற அட்டூழியங்களுக்கும் இது வழிவகுக்கிறது. வங்கதேச மக்கள் இந்த இக்கட்டான நிலை தொடர அனுமதிக்க மாட்டார்கள். சிறுபான்மையின மக்கள் சொல்ல முடியாத துயரத்தில் உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

பாரதி
டிச 26, 2025 10:22

பல ஆயிரம் தலைமுறைகளாக மண்ணின் மைந்தர்கள் வளைகுடா கொள்ளையர்களை தங்குவதற்கு இடம் கொடுத்து அனுமதித்ததால் இன்று கணக்கிட முடியாத வர்ணிக்க முடியாத துயரங்களை அனுபவிக்கிறார்கள் இங்கும் தமிழக மக்களை அப்படியே அழைக்க திமுக போன்ற பலர் வேலை செய்கிறார்கள் இஸ்லாமியர்களின் சுயரூபத்தை புரிந்து கொள்வோம் முன் ஜாக்கிரதையாக வாழ்வோம்


Yaro Oruvan
டிச 26, 2025 09:57

நம்ம விடியா மாடல்கிட்ட தெளிவா சொல்லீருங்க.. சிறுபான்மை பாதிப்புன்னா ஒடனே பொங்கீருவாங்க .. இது அவிங்க சிறுபான்மை இல்லை இது இந்துக்க்க்ள் பாதிப்பு .. பாவம் வழக்கம்போல ஓட்டுக்காக தீயமுக தேவை இல்லாம பொங்கி ... வேணாம்னு எடுத்து சொல்லீருங்க ... இருக்கவே இருக்கு டுமில், திராவிஷம், முப்பெரும் விழா சமோசாநீதி இப்டி வேற யாதையாச்சும் செய்ங்கப்பா


Matt P
டிச 26, 2025 05:07

இந்தியாவில் இருந்து கொண்டு இப்படி சொல்லவில்லை என்றால் திருப்பி துரத்தி அனுப்பப்படுவார் என்று அவருக்கு தெரியும்.


Sun
டிச 26, 2025 05:05

வங்கத்தின் இரும்பு பெண்மணியாக இத்தனை வருடங்கள் கோலோச்சியவர்! தன் குடும்ப உறுப்பினர்கள் அனைவருமே சுட்டுக் கொல்லப்பட்ட பின்பும் கலங்காமல் வங்க தேச அரசியலில் குதித்து சாதித்தவர். இவருக்கு உள்ள இந்துக்கள் மீதான பாசம் கூட இங்கு மேற்கு வங்கத்தில் அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு இருப்பதில்லை.


Palanisamy T
டிச 26, 2025 04:07

குற்றச் சாட்டால் எந்தப் பயனுமில்லை. வங்கதேசத்தில் சிறுப்பான்மை மக்களுக்கு எதிராக நடக்கும் அநீதிகள் இன்று நேற்றல்ல, 1974-ல் வங்கதேசம் என்று அறிவிக்கப் பட்ட புதிய நாட்டில், வங்கதேச தந்தை ஷேக் முஜீப் ரஹ்மான் அன்று படுகொலை செய்யப்பட மறுக்கணமே முளைத்து விட்டது. அன்று இந்தியா என்ற நாட்டின் உதவிமட்டும் இல்லை யென்றால் இன்று வங்கதேசம் என்ற புதியநாடு வெறும் பகற்கனவுதான். இன்றுவரைக்கும் அந்நாடு பாகிஸ்தானின் ஒருபகுதி நாடாக இருந்திருக்கும். அன்று கிழக்குப் பாகிஸ்தானில் 1971 - ல் பாகிஸ்தான் படையினரின் ஆக்கிரமிப்பால் அன்று வங்கதேசத்தில் ஒரு குஞ்சுக் கூட அங்கு மிஞ்சியிருக்காது. அப்போது நடந்த இனப் படுகொலையை தடுத்து நிறுத்தியது இந்திய நாடு. வங்கதேசத்தை காப்பாற்றியதும் இந்தியநாடுதான். இப்போது வங்கதேச கிளர்ச்சியாளர்கள் இந்தியாவிற்கு நன்றிக் கடனை செலுத்திக் கொண்டு வருகின்றார்கள் இதுதான் உண்மை. வாழ்க வங்கதேசத்தின் "மதச் சார்பற்றக் கொள்கை".


Venugopal, S
டிச 26, 2025 00:51

உலகிலேயே சிறுபான்மையினர் என்று சொல்லிக் கொண்டு அனைத்து சலுகைகளையும் அனுபவித்து வருகின்றனர். இது மட்டுமல்லாமல் மற்ற சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு அனைத்து கொடுமைகளையும் செய்து வருகின்றனர்...எதற்கெல்லாம் குறிபிட்ட மதம் சார்ந்த மத சார்பற்ற கேடு கெட்ட அரசியல் வியாதிகளின் பதவி வெறி காரணம்...


Palanisamy T
டிச 26, 2025 04:31

உங்களின் உணர்வுகள் புரிகின்றது உங்கள் உணர்வுகள் அழுதுக் கொண்டு இருக்கின்றது. மதவாதக் கொள்கைக்கும் மதச்சார்பற்றக் கொள்கைக்கும் வித்தியாசம் தெரியாது முதல்வர் அவர்கள் சொந்த லாபத்திற்காக சுயநல அரசியல் செய்கின்றார். கிறிஸ்மஸ் பண்டிகைக்கும் வாழ்த்து முஸ்லீம் பண்டிகைக்கும் வாழ்த்து ஆனால் தீபாவளிக்கு வாழ்த்தில்லை. இது என்ன மதச்சார்பற்றக் கொள்கை, புரியவில்லை. அவருக்கு வாக்களிக்கும் மக்களுக்கு இது புரிகின்றதா? முதல்வர் உண்மை அறிந்து மாறினால் அவருக்கு நல்லது.


Sivakumar
டிச 26, 2025 04:34

என்ன சலுகைகள் என்று பட்டியலிட முடியுமா ?


புதிய வீடியோ