உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / தாக்குதல் - பதில் தாக்குதல்: மேற்காசியாவில் நீடிக்கும் பதற்றம்

தாக்குதல் - பதில் தாக்குதல்: மேற்காசியாவில் நீடிக்கும் பதற்றம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

நமது நிருபர் ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் நடத்திய தாக்குதல், ஐந்தாவது நாளாக தொடர்ந்தது. ஈரான் தலைநகர் டெஹ்ரான் உள்ளிட்ட பகுதிகளை குறி வைத்து இஸ்ரேல் தொடர்ந்து ஏவுகணைகளை செலுத்தி வருகிறது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், மேற்காசிய நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் உள்ளிட்டவை மீது ஈரான் பதில் தாக்குதலை நடத்தி வருகிறது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=92qra4vs&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0ஈரானுக்கு ஆதரவாக செயல்படும் லெபனானில் உள்ள ஹெல்பொல்லா பயங்கரவாத அமைப்பை குறிவைத்து, இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. ஈரான் படைகளும், லெபனானுக்குள் நுழைந்துள்ளது.ஈரான் செலுத்திய ஏவுகணையை, 'நேட்டோ' எனப்படும் ராணுவ ஒத்துழைப்புக்கான அமைப்பின் ஏவுகணை தடுப்பு அமைப்பு நடுவானில் அழித்ததாக, துருக்கி அறிவித்துள்ளது.ஈரானில் உள்ள முக்கிய தளங்களை குறி வைத்து இஸ்ரேலும், இஸ்ரேலின் முக்கிய பகுதிகளை நோக்கி ஈரானும் பரஸ்பரம் ஏவுகணை தாக்குதலில் ஈடுபட்டுள்ளன.சவுதி அரேபியாவின் ராஸ் தனுராவில் உள்ள, 'அராம்கோ' நிறுவனத்தின், எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை, இரண்டாவது முறையாக ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியது.மத்திய தரைக்கடல் பகுதியில், லிபியா அருகே, ரஷ்யா கொடியுடன் சென்ற, திரவ இயற்கை எரிவாயு ஏற்றிச் சென்ற கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் அந்தக் கப்பல் தீப்படித்து எரிந்து, கடலில் மூழ்கியது.ஐக்கிய அரபு எமிரேட்சில் அமைந்துள்ள, 'அமேசான்' நிறுவனத்தின் இரண்டு, தகவல் பகுப்பாய்வு மையங்கள், ஈரான் தாக்குதலில் சேதமடைந்தன. பஹ்ரைனில் உள்ள மையமும் தாக்கப்பட்டது.போர் ஐந்தாவது நாளாக தொடர்ந்த நிலையில், ஈரானில் இதுவரை, 1,045 பேர் கொல்லப்பட்டுள்ளதாக, அந்த நாட்டின் மனித உரிமை அமைப்பு தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Ramesh Sargam
மார் 04, 2026 22:44

உக்ரைன், ரஷ்யா இடையிலே துவங்கிய போர் ஐந்து ஆண்டுகளாக தொடர்கிறது. பல லட்சம் மக்கள் மாண்டனர். பலகோடி மதிப்புள்ள பொருட்கள் நாசமாகிப்போயின. அதற்குள் இப்பொழுது அமெரிக்காவின் தூண்டுதலால் இஸ்ரேல், ஈரான் இடையிலே போர். தொடங்கி இரண்டு நாட்களிலேயே ஆயிரத்துக்கும் அதிகமானோர் மாண்டிருக்கின்றனர். பொருட்களின் சேதம் பல லட்சங்கள். போரினால் அழிவுதான் மிஞ்சும் என்று ஏன் இந்த போரிடும் நாட்டு தலைவர்கள் யோசிப்பதில்லை.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை