உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / பொதுமக்கள், வழிபாட்டுத் தலங்கள் மீதான தாக்குதலை ஏற்கமுடியாது; ஐநா கண்டனம்

பொதுமக்கள், வழிபாட்டுத் தலங்கள் மீதான தாக்குதலை ஏற்கமுடியாது; ஐநா கண்டனம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

நியூயார்க்: பொதுமக்கள், வழிபாட்டுத் தலங்கள் மீதான தாக்குதல்கள் ஏற்றுக்கொள்ள முடியாது என ஐநா கண்டனம் தெரிவித்துள்ளது. சிரியாவில் மசூதி மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து, ஐநா பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சிரியாவின் ஹோம்ஸில் உள்ள அலி பின் அபி தாலிப் மசூதியில் வெள்ளிக்கிழமை தொழுகையின் போது நடந்த கொடிய பயங்கரவாத தாக்குதலை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். பொதுமக்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்கள் மீதான தாக்குதல்கள் ஏற்றுக்கொள்ள முடியாது. கொல்லப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் அனைவரும் விரைவாகவும் முழுமையாகவும் குணமடைய இறைவனிடம் பிரார்த்திக்கிறேன். இவ்வாறு அன்டோனியோ குட்டெரெஸ் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

RK
டிச 27, 2025 21:59

இந்தியா அமைதி படையை அனுப்பி அமைதி மார்கத்தினரை அமைதி படுத்தலாமே...


RAJ
டிச 27, 2025 19:45

ஐநா.. பாவம்.. ஒரு செத்துப்போன சபை. ..


ஜெகதீசன்
டிச 27, 2025 19:29

உங்களால் கண்டனம் மட்டுமே தெரிவிக்க முடியும். பங்களாதேஷில் நடக்கும் இன படுகொலைக்கு கண்டனம் தெரிவித்தீர்களா?


raja
டிச 27, 2025 18:49

வழிபாட்டு தலங்கள் மீது தாக்குதல் நடத்தக்கூடாது


V.Mohan
டிச 27, 2025 18:27

ஐயா, ஐ.நா சபை இன்னும்உயிரோடிருக்கிறதா?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை