உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / வங்கதேசத்தில் தொடரும் ஹிந்துக்கள் மீதான தாக்குதல்; மேலும் ஒருவர் மீது தீ வைப்பு

வங்கதேசத்தில் தொடரும் ஹிந்துக்கள் மீதான தாக்குதல்; மேலும் ஒருவர் மீது தீ வைப்பு

டாக்கா: வங்கதேசத்தின் ஷரியத்பூர் மாவட்டத்தில் மற்றொரு ஹிந்து நபர் ஒரு கும்பலால் கொடூரமாக தாக்கப்பட்டு, தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை கிளப்பி உள்ளது. அவர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.வங்கதேசத்தில் தேர்தல் தேதி அறிவிப்பு வெளியானதில் இருந்து வன்முறைகள் தீவிரமடைந்துள்ளன. மாணவர் போராட்டத்தை நடத்திய, இந்திய எதிர்ப்பாளர் ஓஸ்மான் ஹாதி சமீபத்தில் சுட்டுக் கொல்லப்பட்டார். இதைத் தொடர்ந்து, ஹிந்து இளைஞர் தீபு சந்திர தாஸ், ஒரு கும்பலால் அடித்துக் கொல்லப்பட்டார். அந்த கும்பல், அவருடைய உடலை, தீ வைத்து எரித்தது.இதைத்தொடர்ந்து ராஜ்பாரி மாவட்டத்தைச் சேர்ந்தஅம்ரித் மண்டல் என்ற 29 வயது ஹிந்து இளைஞரை, அப்பகுதியைச் சேர்ந்த கும்பல் கடுமையாக தாக்கியதில் படுகாயம் அடைந்த அவர், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். ஆடை தொழிற்சாலை ஒன்றில் பிஜேந்திர பிஸ்வாஸ் (42) என்ற ஹிந்து தொழிலாளி சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.தற்போது ஷரியத்பூர் மாவட்டத்தில் மற்றொரு ஹிந்து நபர் ஒரு கும்பலால் கொடூரமாக தாக்கப்பட்டு, தீ வைத்து எரிக்கப்பட்டார்.இது சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறை அதிகரித்து வருவது குறித்த புதிய கவலைகளை எழுப்பியுள்ளது. தாக்குதலில் பாதிக்கப்பட்டவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்டவர் 50 வயதான கோகோன் தாஸ் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, ​​தாக்குதல் நடத்திய ஒரு குழு அவரை சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தினர் என்பது விசாரணையில் தெரியவந்தது. கடந்த 15 நாட்களில் வங்கதேசத்தில் ஒரு ஹிந்து நபர் மீது நடத்தப்பட்ட நான்காவது தாக்குதல் இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Narasimhan
ஜன 02, 2026 00:14

இங்கு புள்ளி கூட்டணி ஆட்சிக்கு வந்தால் அதேகதிதான்


R.Subramanian
ஜன 01, 2026 21:29

நம் நாட்டில் அமைதி வேண்டும் என்றால் மதமாற்றத்திற்கு தடை சட்டம் கொண்டு வர வேண்டும்


Kumar Kumzi
ஜன 01, 2026 20:55

மூர்க்க காட்டுமிராண்டி கூட்டம் நாசமா போகணும்


MUTHU
ஜன 01, 2026 19:46

இதுவெல்லாம் விஷயமா. 1971 ஆண்டுகளில் அன்றைய மக்கள் தொகையில் சுமார் 30-35 சதவீதம் இருந்தனர் இந்துக்கள். இதில் நிறைய பேர் ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் நல்ல நிறுவனங்கள் நடத்தியவர்கள் வசதியானவர்கள் அனைவரும் தங்கள் பகுதி மக்களாலேயே அடையாளம் காட்டப்பட்டு ராணுவத்தால் கொல்லப்பட்டனர். மற்றவர்கள் தங்கள் உடைமைகளை விட்டுவிட்டு இந்தியாவிற்குள் புலம்பெயர்ந்தனர். அவர்களின் சொத்துக்கள் மற்றவர்களால் ஆக்கிரமிக்கப்பட்டது. இந்துக்கள் மட்டுமே கடந்த காலங்களில் இருந்து பாடம் கற்கவே மாட்டார்கள். சிலுவைப்போர் நிகழ்வுகள் கொடுமைகள் இன்று வரை கடைக்கோடி இஸ்லாமியர்களால் மறக்கப்படாமல் நினைவு கூறப்படும். கிறிஸ்தவ எதிர்ப்பு அலை எப்பொழுதும் வீசும்.


Priyan Vadanad
ஜன 01, 2026 19:43

வருத்தத்துடன் கோபம் வருகிறது.


பேசும் தமிழன்
ஜன 01, 2026 19:15

சிறுபான்மை...சிறுபான்மை என்று கூப்பாடு போடும் திருட்டு திராவிட மாடல் ஆட்கள் எல்லாம் எங்கே போய் விட்டார்கள்.... குவாட்டர் அடித்து விட்டு குப்புற படுத்து விட்டார்களா..... ஒரு பயலும் வாயே திறக்கவில்லை..... அல்லக்கைகள் எல்லாம் எங்கே இருந்தாலும் உடனே மேடைக்கு வரவும்..... மக்கள் உங்களை கழுவி ஊற்ற காத்து கொண்டு இருக்கிறார்கள்.


Priyan Vadanad
ஜன 01, 2026 21:12

எங்கே எங்கே நான் பாக்குறேன். கண்ணை மூடு நான் காட்டுறேன். சிறுபான்மை மக்கள்மேல் தொடுக்கப்பட்டு அநாகரீகமான, காட்டுமிராண்டித்தமான தாக்குதல்களுக்கு கணடனம் கொடுக்கப்பட்டுதான் வருகிறது. சும்மா பூச்சாண்டி காட்டாதீர்கள்.


R. SUKUMAR CHEZHIAN
ஜன 01, 2026 19:09

வங்கதேசம் ஒரு தேவை இல்லாத பகுதி ஆதலால் சிட்டகாங் டாகா உட்பட 50% பகுதிகளை நாம் மீட்டு எடுத்து எஞ்சிய பகுதிகளை காட்டுமிராண்டிகள் வாழும் பகுதி என கூறி அங்கு சுற்றி அரண் அமைத்து அந்த பகுதியை தனித்து விடவேண்டும் ஆனால் நம் கண்காணிப்பில் வைத்து கொள்ள வேண்டும். வங்கதேசதில் சிறுபான்மை இந்துக்கள் மீது நடக்கும் காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் பற்றி செக்யூலர் மதசார்பின்மை சோஷலிசம் நடுநிலை பேசும் கும்பல்கள் வாய்திறந்து கண்டனத்தை தெரிவிக்க வேண்டும்.


Santhakumar Srinivasalu
ஜன 01, 2026 18:53

ஐ நா அமைதிப்படை மூலமாக இந்துக்கள் பாதுகாப்பு மற்றும் வன்முறையை நிறுத்த இந்தியா ஏற்பாடு செய்ய வேண்டும்?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை