உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / ஆஸி., பொதுத்தேர்தல்; மீண்டும் ஆட்சியைப் பிடித்தது ஆளும் தொழிலாளர் கட்சி

ஆஸி., பொதுத்தேர்தல்; மீண்டும் ஆட்சியைப் பிடித்தது ஆளும் தொழிலாளர் கட்சி

கான்பெரா: ஆஸ்திரேலியா பொதுத்தேர்தலில் பிரதமர் அல்பானீஸின் தொழிலாளர் கட்சி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியைப் பிடித்தது.ஆஸ்திரேலியாவில் பிரதமர் அந்தோனி அல்பானீஸ் தலைமையிலான தொழிலாளர் கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது. கடந்த 2022ம் ஆண்டு நடந்த தேர்தலில், அல்பானீஸின் தொழிலாளர் கட்சி பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=hxklnszy&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்த நிலையில், ஆஸ்திரேலியா பார்லிமென்டிற்கு இன்று தேர்தல் நடைபெற்றது. தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்புகளின்படி, பிரதமர் அல்பானீஸ் கட்சி தான் வெற்றி பெறும் என்று கூறப்பட்டு வந்தது. அதன்படியே, ஓட்டு எண்ணிக்கையில் பிரதமர் அந்தோனி அல்பானீஸ் தலைமையிலான தொழிலாளர் கட்சி, பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று, மீண்டும் ஆட்சியை பிடித்துள்ளது. மொத்தம் 151 இடங்களைக் கொண்ட ஆஸ்திரேலியா பார்லிமென்ட் தேர்தலில், 76 இடங்களைப் பிடித்தால் ஆட்சியை பிடித்து விடலாம். இப்படியிருக்கையில், அல்பானீஸின் கட்சி 78 இடங்களைப் பிடித்து பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியைப் பிடித்துள்ளது. எதிர்கட்சியான லிபரல் கட்சியின் தலைவர் பீட்டர் டட்டனுக்கு 30 இடங்களே கிடைத்துள்ளன. தேர்தல் வெற்றி குறித்து அல்பானீஸ் கூறுகையில், 'இது என்னுடைய வாழ்க்கையில் பெருமைமிக்க சிறந்த தருணம்,' என்றார். அதேபோல, பிரிஸ்பேனில் தனது ஆதரவாளர்களுக்கு மத்தியில் தேர்தல் தோல்வி குறித்து பேசிய டட்டன், 'தேர்தல் முடிவை முழுமையாக ஏற்றுக் கொள்கிறேன். தொழிலாளர் கட்சிக்கு வரலாற்று சிறப்புமிக்க தருணம் இது. அதனை ஏற்கிறேன்,' எனக் கூறினார். தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்பு, அதிகரிக்கும் பொருளாதார செலவு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் அல்பானீஸூக்கு பின்னடைவு ஏற்பட்டிருந்தது. ஆனால், எதிர்கட்சியான லிபரல் கட்சியின் தலைவர் பீட்டர் டட்டனின் சில திட்டங்கள், அமெரிக்க அதிபர் டிரம்ப் நிர்வாகத்தைப் போன்று இருந்ததால், அவருக்கான ஆதரவு குறைந்தது. இதன்மூலம், அல்பானீஸ் மீண்டும் பிரதமராக உள்ளார். அவருக்கு உலக நாடுகளின் தலைவர்கள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Senthoora
மே 03, 2025 17:49

ஆகா மொத்தத்தில் வெள்ளையர்கள் அதிகம் வாழும் ஆஸ்திரேலியாவை டிரம்ப் அடிமையாக பார்த்தார், மக்கள் தெளிவாக இருந்தார்கள், இப்போ இதுவரை அல்பானிஷ் 76 இடங்களுக்கு 85 இடம் எடுத்துவிட்டார், ஆஸ்திரேலியாவில் தேர்தலுக்கு விடுமுறை கிடையாது, கைக்கு மை, பூசுவது இல்லை, உலகில் எந்த நாட்டில் இருந்தாலும் ஒட்டு அந்த நாட்டு துதரகத்தில் ஒட்டு போடலாம், ஒட்டு பதிவுக்கு முன் இரண்டுவாரத்துக்கு முன் EARLY VOTE தளத்துக்கு சென்று ஒட்டு ஓடலாம், ஒட்டு போடாவிட்டால் ஆகா கூடியது 303 டாலர் தண்டப்பணம் கட்டணும், முக்கியமா EVM கிடய்யாது, என்று இந்தியாவுக்கு இந்த நடைமுறை வருகுதோ, அன்றுதான் ஜனநாயகம், டிஜிட்டல் கிடைத்தது என்று சந்தோசப்படலாம்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை