உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / ஆஸ்திரியா பள்ளியில் துப்பாக்கிச்சூடு: 7 மாணவர்கள் உட்பட 10 பேர் பலி

ஆஸ்திரியா பள்ளியில் துப்பாக்கிச்சூடு: 7 மாணவர்கள் உட்பட 10 பேர் பலி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வியன்னா: ஆஸ்திரியாவில் உள்ள பள்ளி ஒன்றில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 7 மாணவர்கள் உட்பட 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். சிலர் காயமடைந்துள்ளனர்.ஆஸ்திரியா தலைநகர் வியன்னாவின் 200 கி.மீ., தொலைவில் உள்ள கிராஜ் நகரம். 3 லட்சம் பேர் வசிக்கும் இந்நகரில் உள்ள பள்ளி ஒன்றில் இன்று திடீரென துப்பாக்கிச்சூடு சத்தம் கேட்டதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. துப்பாக்கிச்சூடு சத்தம் கேட்டதை உறுதி செய்த அந்நாட்டின் உள்துறை அமைச்சகம் உறுதி செய்ததுடன், சிலர் உயிரிழந்ததாகவும், சிலர் காயம் அடைந்துள்ளதாகவும் தெரிவித்தது. ஆனால், எத்தனை பேர் என்ற தகவலை தெரிவிக்கவில்லை.இந்நிலையில், இந்த சம்பவத்தில் 7 மாணவர்கள் உட்பட 10 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு மீடியாக்கள் தெரிவித்து உள்ளன. இவர்களில் ஆசிரியர்களும் அடக்கம். காயமடைந்தவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தகவல் அறிந்து வந்த பெற்றோர், மாணவர்களை சந்திக்க அனுமதிக்கப்பட்டனர். இந்த தாக்குதலில் ஈடுபட்டது, அந்தப்பள்ளியில் படித்த முன்னாள் மாணவர் என்றும், அவரும், தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.சம்பவத்தைத் தொடர்ந்து, பள்ளியில் இருந்து அனைவரும் வெளியேற்றப்பட்டனர். இதனைத் தொடர்ந்து துப்பாக்கிச்சூடு முடிவுக்கு வந்தது என போலீசார் தெரிவித்து உள்ளனர். இந்த சம்பவத்துக்கு அந்நாட்டு அதிபர் மற்றும் உள்துறை அமைச்சர் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Kulandai kannan
ஜூன் 10, 2025 22:27

சுட்டவன் பெயர் என்ன? தெரிந்தால்தானே சூதானமாக இருக்க முடியும்.


Palanisamy Sekar
ஜூன் 10, 2025 17:14

குடும்பங்களில் நடக்கின்ற ஏச்சுக்கள், சண்டையும் சச்சரவும், குழந்தைகளின் மனநிலையை பாதித்துவிடுகின்றது.. அதன் தாக்கம்தான் இப்படிப்பட்ட சம்பவங்கள். இந்திய குடும்ப பாரம்பரியம் மட்டுமே ஒழுக்கத்தை போதிக்கின்றன. சில சம்பவங்களை வைத்து குறை சொல்ல முடியாது. பிள்ளைகளின் மன நிலையை அறியாத பெற்றோர்கள்தான் இதற்கு காரணமே. தளிர்கள் வளரும்போதே வீழ்ந்துவிட்டனவே. கொடுமை இது


முக்கிய வீடியோ