உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / இந்தியா எங்களை தடுக்கிறது: அஜர்பைஜான் அபாண்டம்

இந்தியா எங்களை தடுக்கிறது: அஜர்பைஜான் அபாண்டம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பீஜிங்: ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் நாங்கள் முழு உறுப்பினர் ஆவதை இந்தியா தடுக்கிறது என அஜர்பைஜான் தெரிவித்துள்ளது. பாகிஸ்தானுடன் நெருங்கிய நட்பு உள்ளதால் சர்வதேச அமைப்புகளில் எங்களை பழிவாங்குவதாகவும் தெரிவித்துள்ளது. ஐரோப்பிய நாடான அஜர்பைஜான், பாகிஸ்தானுடன் நெருங்கிய நட்பில் உள்ளது. ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து, இந்தியா பாகிஸ்தான் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது, பாகிஸ்தானுக்கு அஜர்பைஜான் வெளிப்படையாக ஆதரவு அளித்தது. இதனால், அந்நாட்டுக்கு செல்வதை சுற்றுலா செல்வதையும் நம் நாட்டினர் தவிர்த்து வருகின்றனர்.அந்நாடு ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பிலும் அங்கம் வகித்து வருகிறது. மேலும், அதில முழு நேர உறுப்பினராகவும் முயன்று வருகிறது.இந்நிலையில், இந்த அமைப்பில் முழு நேர உறுப்பினராகும் தங்களின் முயற்சியை இந்தியா தடை செய்துள்ளதாக குற்றம்சாட்டி உள்ளது. நாங்கள் பாகிஸ்தானுடன் கொண்டுள்ள உறவு காரணமாக, சர்வதேச அமைப்புகளில் எங்கள் மீது இந்தியா பழிவாங்கி வருகிறது எனவும் குற்றம்சாட்டி உள்ளது.ராஜதந்திர விதிமுறைகளை இந்தியா மீறுகிறது என அந்நாட்டின் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.இது தொடர்பாக வெளியான செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது: ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் அஜர்பைஜான் முழுநேர உறுப்பினராகும் முயற்சிக்கு இந்தியா தடை விதித்துள்ளது. ஆர்மீனியாவுடன் உறவுகளை மறுபரிசீலனை செய்வதாக பாகிஸ்தான் கூறியுள்ளது. இது எங்கள் நாட்டின் அமைதி நடவடிக்கையின் ஒரு பகுதி எனத்தெரிவித்துள்ளது.இதனிடையே சீனாவில் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பை சந்தித்த பிறகு அஜர்பைஜான் அதிபர் இல்ஹாம் அலியேவ் கூறுகையில், சரவ்தேச அமைப்புகளில் இந்தியாவின் நடவடிக்கையையும் மீறி பாகிஸ்தானுடன் உறவுக்கு முக்கியத்துவம் அளிப்போம். இரு நாடுகளுக்கு இடையிலான உறவு அரசியல், கலாசார உறவு கொண்டது எனக் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

kannan
செப் 03, 2025 09:29

What will you do in case you join SCO? Better look after your country and do not support terrorism and the country which supports terrorism


அப்பாவி
செப் 03, 2025 06:54

பாகிஸ்தானுக்கு சீனா ஆயுதம் விக்கிது. நாம கை கோர்க்கலியா? முடிஞ்சா சீனா கிட்டே ஆயுதமும், ரஷியா கிட்டே ஆயிலும் வாங்கப் பாருங்க. போருக்கு இது நேரமில்லைன்னு சொல்லுங்க. துருக்கிய மன்னிச்சு ப்ளேன் லீஸ் எக்ஸ்டென்சன் குடுத்திருக்கோம்.


Kasimani Baskaran
செப் 03, 2025 04:05

தீவிரவாத நாடுகளுடன் கை கோர்த்தால் வேறு என்ன நடக்கும்.


தாமரை மலர்கிறது
செப் 03, 2025 01:31

இந்தியாவிற்கு எதிராக பாகிஸ்தானுக்கு மிலிட்டரி உதவி அஜர்பைஜான் செய்யுமாம். இந்தியா சும்மா பாத்துகிட்டு இருக்க, ராகுல் காந்தி பிரதமர் இல்லை. இந்திய இறையாண்மைக்கு எதிராக செயல்பட்டால் பழிவாங்கதான் செய்வோம்.


Kannan Chandran
செப் 03, 2025 00:32

வேறென்ன, நம்ம Akash Air defence -ஐ அர்மேனியாவுக்கு கொடுத்தா இவனுங்களுக்கு நடுக்கம் வராம. பாகிஸ்தான் வாங்குன அதே அடி இவங்க அர்மேனிவிடம் சீக்கிரம் வாங்குவானுங்க.


ManiMurugan Murugan
செப் 02, 2025 23:48

அவ்வளவு தான் அசர்பைஜான் தவறாக செய்தி பரப்பு கிறது சீனா தொடங்கிய அமைப்பு இதில் இந்தியா எதுவும் தவறாக கையாளாது அமெரிக்க கவனத்தைப் பெற பாகிஸ்தான் அசர்பைஜான் துருக்கி போன்ற நாடுகள்இப்படி தவறான செய்திக் கொடுப்பது தவறு


உ.பி
செப் 02, 2025 23:38

அப்படிதான் பண்ணுவோம்


ஆதிகுடி கொற்கை
செப் 02, 2025 22:59

அப்படிதாண்டா பண்ணுவோம் !!! இப்படியே அழுது சாவு !!!


Svs Yaadum oore
செப் 02, 2025 22:04

பாகிஸ்தானுடன் நெருங்கிய நட்பு உள்ளதால் சர்வதேச அமைப்புகளில் இந்தியா அஜர்பைஜான் நாட்டை பழிவாங்குவதாக அஜர்பைஜான் தெரிவித்துள்ளதாம் ....இது பற்றி அஜர்பைஜான் திராவிட முதல்வருக்கு கடிதம் எழுதினால் , உடனடியாக விடியல் முதல்வர் ஒன்றிய அரசுக்கு தடை விதித்து சமூக நீதி மத சார்பின்மையாக அஜர்பைஜான் நாட்டுக்கு அனைத்து உதவிகளும் செய்வார் ....மேலும் கனி அக்கா அஜர்பைஜான் நாட்டுக்கு ஆதரவாக மவுண்ட் ரோடில் மெழுகுவத்தி ஊர்வலம் நடத்தி கவர்னருக்கு கண்டனம் அறிவிப்பார் ..


நிக்கோல்தாம்சன்
செப் 02, 2025 21:31

உலகின் மிகப்பெரிய பிச்சைக்கார நாடு பாகிஸ்தான் , அதனுடன் ஒட்டி உறவாடுங்க அசர்பைஜான் , உங்களுக்கும் அதன் தாக்கம் வரட்டும்


புதிய வீடியோ