உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / வங்கதேசத்தில் 2026ம் ஆண்டு துவக்கத்தில் தேர்தல் நடக்கும்; அறிவித்தார் முகமது யூனுஸ்

வங்கதேசத்தில் 2026ம் ஆண்டு துவக்கத்தில் தேர்தல் நடக்கும்; அறிவித்தார் முகமது யூனுஸ்

டாக்கா: 'வங்கதேசத்தில் 2025ம் இறுதியில் அல்லது 2026ம் ஆண்டின் துவக்கத்தில் தேர்தல் நடைபெறும்' என முகமது யூனுஸ் அறிவித்துள்ளார்.நம் அண்டை நாடான வங்கதேசத்தில், மாணவர்களின் போராட்டம் தீவிரமடைந்ததை அடுத்து, ஆக., 5ல், பிரதமர் பதவியை ராஜினாமா செய்து, அவாமி லீக் கட்சி தலைவர் ஷேக் ஹசீனா நம் நாட்டுக்கு தப்பி வந்தார். இதையடுத்து, நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் தலைமையில், வங்கதேசத்தில் இடைக்கால அரசு பதவியேற்றது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=r48w3erq&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0ஷேக் ஹசீனா தப்பியோடியதை அடுத்து, வங்கதேசத்தில் சிறுபான்மையினராக உள்ள ஹிந்துக்கள் மீது பல்வேறு இடங்களில் தாக்குதல்கள் நடந்தன. மேலும், ஹிந்து கோவில்களும் தாக்கப்பட்டன. இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது. இந்நிலையில், டாக்காவில் நிருபர்கள் சந்திப்பில், முகமது யூனுஸ் கூறியதாவது: வங்கதேசத்தில் 2025ம் இறுதியில் அல்லது 2026ம் ஆண்டின் துவக்கத்தில் தேர்தல் நடைபெறும். அனைத்து முக்கிய சீர்திருத்தங்களையும் முடித்த பின்னர் தேர்தல் நடத்த வேண்டும். கடந்த 15 ஆண்டுகளில் ஓட்டளிக்க தகுதி பெற்ற அனைவரின் பெயர்களும் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளதா, என்பதை உறுதி செய்யும் பணி நடக்கிறது. முன்பே தேர்தலை நடத்த அரசியல் கட்சிகள் ஒப்புக் கொண்டால் 2025ம் ஆண்டு நவம்பர் மாதம் இறுதிக்குள் நடத்தப்படும். மாணவர்கள் அமைப்பினர் போராட்டத்திற்கு பிறகு தற்போது எழுச்சி பெற்றுள்ளனர். அவர்கள் எந்த தவறும் செய்ய இடமில்லை. நீண்ட நாட்களுக்கு இளைஞர்கள் அனைவரும் ஓட்டளிப்பார்கள். இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

N Sasikumar Yadhav
டிச 16, 2024 22:29

மாணவர்கள் என்ற போர்வையில் பயங்கரவாதிகள் சிறுபான்மையினரை இன அழிப்பு செய்கிறானுங்க அதை நோபூலுக்கு கொஞ்சங்கூட தகுதியில்லாத ஆட்சியாளன் வேடிக்கை பார்க்கிறான்


சமீபத்திய செய்தி