உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் பயங்கரவாத அமைப்பாக அறிவிப்பு: என்ன சொல்ல முயல்கிறது அமெரிக்கா?

பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் பயங்கரவாத அமைப்பாக அறிவிப்பு: என்ன சொல்ல முயல்கிறது அமெரிக்கா?

வாஷிங்டன்: பாகிஸ்தானிலிருந்து பலுசிஸ்தான் மாகாணத்தை பிரித்து தனி நாடாக அறிவிக்கக் கோரி செயல்பட்டு வரும் ' பலுசிஸ்தான் விடுதலை ராணுவத்தை' பயங்கரவாத இயக்கமாக அமெரிக்கா அறிவித்துள்ளது. இதுவரை தெற்காசியாவில் பாகிஸ்தானை விட இந்தியாவிடம் அமெரிக்கா அதிகம் நட்பு பாராட்டி வந்தது. பாகிஸ்தானில் சுதந்திரமாக வலம் வந்த பயங்கரவாதிகள், அவர்களால் அமெரிக்காவில் நடந்த தாக்குதல்கள் இதற்கு காரணம். ஆனால் தற்போது இந்த நிலை மாறி உள்ளது. கடந்த ஜூன் மாதம் பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் முனீரை வெள்ளை மாளிகைக்கு அழைத்து டிரம்ப் விருந்து வைத்தார். அமைச்சர்கள் யாரும் இல்லாமல், பாகிஸ்தான் ராணுவ தளபதியை மட்டும் அமெரிக்க அதிபர் சந்தித்தது இதுவே முதல் முறை. இதற்கிடையே அசிம் முனீரை அந்நாட்டு ராணுவத்தின் 'சென்ட்காம்' எனப்படும் மத்திய படைப் பிரிவின் தளபதி மைக்கேல் குரில்லா, தன் பணி நிறைவு விழாவுக்காக அழைத்திருந்தார். அதற்காக இந்தாண்டில் இரண்டாவது முறையாக சமீபத்தில் அமெரிக்கா சென்றார் அசிம் முனீர். அவர் பயணத்தின் விளைவாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் மற்றும் அதன் துணை அமைப்பான மஜீத் பிரிகேடை, அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் சர்வதேச பயங்கரவாத அமைப்புகளாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை வைத்து, தாங்களும் பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளோம் என காட்டிக்கொள்ள பாகிஸ்தானுக்கு உதவும். பலுசிஸ்தான் விடுதலை ராணுவத்துக்கு இந்தியா உதவி செய்வதாக பாகிஸ்தான் நீண்ட காலமாக குற்றஞ்சாட்டி வருகிறது. ஆனால் அதற்கான எந்த ஒரு ஆதாரத்தையும் அவர்கள் அளித்ததில்லை. பஹல்காம் தாக்குதலுக்கு பொறுப்பேற்ற பாகிஸ்தானைச் சேர்ந்த லஷ்கர்-இ--தொய்பாவின் து ணை அமைப்பான 'தி ரெசிஸ்டன்ஸ் பிரன்ட்' அமைப் பை கடந்த மாதம் அமெரிக்கா சர்வதேச பயங்கரவாத அமைப்பாக அறிவித்தது. இந்த இயக்கம் எப்போதோ செயலிழந்ததாக பாக்., கூறியிருந்தது. இந்த சூழலில் அந்நாட்டின் பலுசிஸ்தான் விடுதலை ராணுவத்தை பயங்கரவாத இயக்கமாக அமெரிக்கா அறிவித்திருப்பதன் மூலம், தன் தெற்காசிய கொள்கையில் பாக்.,கையும் கருத்தில் கொள்ளும் என்பதை உணர்த்துகிறது. இதை வைத்து காஷ்மீர் மற்றும் சிந்து நதி நீர் ஒப்பந்தத்தில் இந்தியா மீது பாக்., சர்வதேச அழுத்தத்தை ஏற்படுத்த முயற்சிகளை மேற்கொள் ளும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை