உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / ஒற்றை லட்டு 1.87 கோடி ரூபாய்; விநாயகர் சதுர்த்தி படையலுக்கு போட்டி போட்ட பக்தர்கள்!

ஒற்றை லட்டு 1.87 கோடி ரூபாய்; விநாயகர் சதுர்த்தி படையலுக்கு போட்டி போட்ட பக்தர்கள்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஹைதராபாத்; தெலுங்கானா மாநிலத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நடைபெற்ற ஏலத்தில் ஒரு லட்டு ரூ.1.87 கோடிக்கு ஏலம் போயிருக்கிறது.தெலுங்கானாவில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட்டங்கள் எப்போதுமே களைகட்டும். அங்குள்ள பண்டலகுடா பகுதியில் நடைபெறும் விநாயகர் சதுர்த்தி விழா பிரபலம். இங்க ஆண்டுதோறும் விழாவின் போது லட்டு படைக்கப்பட்டு பின்னர் அந்த லட்டு ஏலம் விடப்படும்.அதன்படி சிறப்பு பூஜைகளுக்கு பின்னர் இந்த ஆண்டும் அதே நடைமுறை பின்பற்றப்பட்டது. ஏராளமானோர் கலந்து கொண்டு ஏலம் கேட்டனர். கடும் போட்டிக்கு இடையே ஏலத்தில் இந்த லட்டு ரூ.1.87 கோடிக்கு விலை போனது. இது கடந்தாண்டை விட ரூ.61 லட்சம் அதிகமாகும். யார் இந்த லட்டை வாங்கி உள்ளார் என்ற விவரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

J.Isaac
செப் 17, 2024 19:47

லட்டை ஏலம் எடுத்தவர் ,அங்குள்ள பிச்சைக்காரர்களுக்கு பிச்சை போட்டிருப்பாரா?


J.Isaac
செப் 17, 2024 19:45

பாவம் விநாயகர். வருடாவருடம் தண்ணீரில் போடுகிறார்கள். எதற்காக ? மனிதன் சொல்லுவதை , செய்வதை கடவுள் வேடிக்கை பார்க்கிற காலம்.


என்றும் இந்தியன்
செப் 17, 2024 16:55

இந்த அளவு GPay மூலமாக கொடுக்கமுடியாது ஆகவே செக் மூலமாகத்தான் இந்த பணம் சென்றிருக்கும் அப்போ அந்த அக்கோவுன்டில் அவ்வளவு பணம் உள்ள ஒருவன் என்றால் அதுவும் இந்து என்றால் பெரிய தொழிலதிபராகத்தானிருக்கும்


venugopal s
செப் 17, 2024 14:13

வாங்கியவர் நிச்சயமாக நேர்மையாக உழைத்து சம்பாதித்தவராக இருக்க வாய்ப்பு இல்லை!


Sudarsan Ragavendran
செப் 17, 2024 16:21

எபோழுதும் குறுகிய எண்ணங்கள்


VENKATESAN V
செப் 17, 2024 11:42

BY CASH OR DIGITAL TRANSFER


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை