உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா பாஸ்போர்ட் ரத்து; வங்கதேச அரசு நடவடிக்கை

முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா பாஸ்போர்ட் ரத்து; வங்கதேச அரசு நடவடிக்கை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

டாக்கா: வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் பாஸ்போர்ட்டை அந்த நாட்டு இடைக்கால அரசு ரத்து செய்துள்ளது.நம் அண்டை நாடான வங்கதேசத்தில், இட ஒதுக்கீடு விவகாரத்தில் அரசு பாரபட்சம் காட்டுவதாக மாணவர் அமைப்பினர் கடந்த ஆண்டு போராட்டத்தில் குதித்தனர். பல இடங்களில் வன்முறை வெடித்தது. இதில், 400க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். கடும் நெருக்கடி காரணமாக பிரதமர் பதவியை ராஜினாமா செய்த ஷேக் ஹசீனா, நாட்டைவிட்டு ரகசியமாக வெளியேறி இந்தியாவில் தஞ்சமடைந்தார்.இதையடுத்து, பொருளாதார நிபுணர் முகமது யூனுஸ் தலைமையில் அங்கு இடைக்கால அரசு அமைந்துள்ளது. புதிய ஆட்சி பதவியேற்றது முதல், அங்குள்ள கோவில்கள், ஹிந்து அமைப்புகள் மற்றும் சிறுபான்மையினராக உள்ள ஹிந்துக்கள் மீது தொடர் தாக்குதல்கள் நடக்கின்றன. இந்நிலையில், வங்கதேசத்தில் மாணவர்கள் போராட்டம் தொடர்பான விவகாரத்தில் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக, நேற்று சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் 2வது முறையாக கைது வாரண்ட் பிறப்பித்தது.மர்மமான முறையில் ஏராளமானோர் காணாமல் போக காரணமாக இருந்ததாக தொடரப்பட்ட வழக்கில் பிரதமர் ஷேக் ஹசீனா உள்ளிட்டோருக்கு கைது செய்ய பிறப்பிக்கப்பட்டுள்ளது. வரும் பிப்ரவரி 12ம் தேதிக்குள் ஷேக் ஹசீனா உள்ளிட்ட 11 பேரையும் கைது செய்ய வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு நிலவுகிறது.இந்நிலையில், இன்று (ஜன.,07) வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் பாஸ்போர்ட்டை வங்கதேச இடைக்கால அரசு ரத்து செய்துள்ளது. மொத்தம் 97 நபர்களின் பாஸ்போர்ட் ரத்து செய்யப்பட்டு உள்ளன. இவர்களில் 22 பேர் குற்ற வழக்குகளை எதிர்கொள்கின்றனர். 75 பேர் கடந்த ஆண்டு வங்கதேசத்தில் நடந்த மாணவர் போராட்டத்தின் போது கொலைகளில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுகளை எதிர் கொள்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Kasimani Baskaran
ஜன 08, 2025 06:38

இந்தியா பங்களாதேசுக்கு சுதந்திரம் பெற்றுத்தந்த பொழுது இருந்த இந்துக்களின் விகிதாச்சாரத்துக்கு இணையான நிலத்தை பங்களாதேஷில் இருந்து எடுத்து புது இந்து நாடாக அறிவிக்க வேண்டும். இல்லை என்றால் என்றும் இந்துக்கள் அந்நியர்கள் போலவே நடத்தப்படுவார்கள்.


S SRINIVASAN
ஜன 07, 2025 22:28

why PM Modi govt is silent on this issue straight away send agni with necessary


Binoi Sasitharan
ஜன 07, 2025 22:36

I presume ..The government will be vigilant of any covert strategies from other countries aimed at undermining our economy, similar to the situations in Ukraine and Russia.


புதிய வீடியோ