உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / வங்கதேச கரன்சிகளில் முஜிபுர் படம் நீக்கம்: ஹிந்து கோயில் சேர்ப்பு

வங்கதேச கரன்சிகளில் முஜிபுர் படம் நீக்கம்: ஹிந்து கோயில் சேர்ப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

டாக்கா: நம் அண்டை நாடான வங்கதேசத்தில், இட ஒதுக்கீடு தொடர்பாக கடந்தாண்டு நடந்த மாணவர் போராட்டத்தைத் தொடர்ந்து, பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா நாட்டை விட்டு வெளியேறினார்.ஆட்சி கவிழ்ந்ததைத் தொடர்ந்து, ராணுவத்தின் தலையீட்டில், இடைக்கால நிர்வாக அரசு அமைந்துள்ளது. நோபல் பரிசு வென்ற பொருளாதார நிபுணர் முஹமது யூனுஸ், இடைக்கால அரசின் தலைமை ஆலோசகராக நியமிக்கப்பட்டார்.வங்கதேசம் உருவாவதற்கு காரணமான, வங்கதேச தந்தை என்றழைக்கப்படும் முன்னாள் பிரதமரான ஷேக் முஜிபுர் ரஹ்மானின் படமே, அந்த நாட்டின் டாகா எனப்படும் கரன்சிகளில் இடம்பெற்று வந்தன. ஆனால், தற்போது, முஜிபுர் ரஹ்மான் தொடர்பான அனைத்து நினைவுகளும் அழிக்கப்பட்டு வருகின்றன.ஷேக் ஹசீனாவின் தந்தையான முஜிபுர் ரஹ்மானின் படங்கள் இல்லாத புதிய கரன்சி நோட்டுகளை, இடைக்கால அரசு வெளியிட்டுள்ளது. இவை விரைவில் புழக்கத்துக்கு வரவுள்ளன. இவற்றில், கலாசார மற்றும் வரலாற்று அடையாளங்களை பிரதிபலிக்கும் படங்கள் இடம்பெற்றுள்ளன. தினாஜ்பூரில் உள்ள 18ம் நுாற்றாண்டைச் சேர்ந்த காந்தாஜி ஹிந்து கோயிலும் அதில் உள்ளது.புதிய கரன்சிகள் 1000, 50 மற்றும் 20 ஆகிய மதிப்பில் வெளியிடப்பட உள்ளன. அதே சமயம் ஏற்கனவே உள்ள கரன்சி நோட்டுகளும் செல்லும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

kannan sundaresan
ஜூன் 04, 2025 15:17

பொருளாதாரம் படு மோசமாக இருக்கிறது. புது கரன்சி அடிக்க காசு எங்கிருந்து வந்தது?


Keshavan.J
ஜூன் 04, 2025 15:12

இன்னும் சில காலத்தில் கரன்ஸியில் ஹிந்து கோயில் இருக்கும் ஆனால் ஹிந்து மக்கள் இருக்க மாட்டார்கள். கங்களாதேஷி எல்லாரையும் முடித்து விடுவான். அடுத்து சர்ச் போட்டோ வரும் அப்புறம் அவங்களும் அவுட்.


தத்வமசி
ஜூன் 04, 2025 13:14

இதற்கு எங்கிருந்து காசு வந்தது ? தனது சரித்திரத்தை மறந்தவன் முன்னேறவே முடியாது. வருங்காலத்திற்கு இது தவறான உதாரணம்.


Rathna
ஜூன் 04, 2025 12:49

ஒரு பக்கத்தில் ஹிந்துக்களை இன அழிப்பு செய்து விட்டு இன்னொரு பக்கம் ஏமாற்று வேலை செய்வது தான் இவர்களின் வாடிக்கை. ஒருவரை கொலை செய்து விட்டு அவர்கள் படத்திற்கு மாலை போடுவதை தான் பாகிஸ்தானும் பங்களாதேஷும் அதன் மாத்துகளும் செய்கின்றன.


shyamnats
ஜூன் 04, 2025 11:59

வங்க தேசத்தில் ஹிந்துக்கள் மீதான, மூர்க்கர்களின் தாக்குதல்களை முதலில் நிறுத்துங்கள். இந்த நாட்டை உருவாக்கிய இந்தியாவிற்கு நன்றி உணர்வோடும் உண்மையாகவும் இருங்கள்.


Anand
ஜூன் 04, 2025 10:52

இப்படி செய்தால் மட்டும் அந்நாட்டில் ஹிந்துக்கள் மீதான மூர்க்கங்களின் தாக்குதல் குறையுமா என்ன? முதலில் நீங்க மாறுங்கடா?


பெரிய குத்தூசி
ஜூன் 04, 2025 09:10

இந்து கோயில்களை சேர்த்து உலகம் தெரியாத இந்துக்கள் மற்றும் 2கே கிட்ஸ் களின் மண்டைய கழுவுற வேலைய பாக்குறானுக. பங்களாதேஷ் இந்துக்களுக்கு எதிரானவங்க இல்லேனு இந்துக்கள் மனசுல முஸ்லிம்கள் மேல் பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் மேல் பாசம் வரவைத்து மக்களை இந்தியாவுக்கு எதிரா தூண்டுவது ஒருவகையான மறைமுக போர் தான். நம்மூர்ல திமுக கன்றோல் ல இருக்கற 30 டிவி ல ருபாய் 200 க்கும் குவாட்டருக்கும் டிவி விவாதத்துல கலந்துகொள்கிற திமுக அடிப்பொடிகள் மூச்சை மூச்சைப்பிடிச்சிகிட்டு பங்களாதேஷ் பணத்துல இந்து கோயில் இருக்கு, பாகிஸ்தான் பனத்துல திராவிடம் இருக்குனு பேசுவனுக, அதை ணாமூர் அறிவில்லாத மூடர்கள் மிக்சர் எடுத்து வச்சிக்கிட்டு நின்னுகிட்டு பாப்பானுங்க. ஒரு பண நோட்டுல பாருங்க, சென்னையில் இருக்கிற அறிவே இல்லாத மூடர்கள் திமுக வின் அறிவாலயம் படம் போட்டுருக்கானுக. திராவிழம் இருக்கு, அது புரியாம நம்ம பிரதமர் மோடி ஆபரேஷன் சிந்தூர் றை நாட்டிற்குள் பண்ணாம வெளியே பண்ணிக்கிட்டு இருக்காரு. ஆபரேஷன் சிந்தூர் றை ரதமிழ்நாட்டுல 25 அரசியல்வாதிகள் மொத்த இந்திய நாட்டுக்குள்ளே பேரை தூக்குனாலே வெளியே இருக்கற எதிரி அடங்கிடுவான், இங்குள்ள தேச துரோகிகள் உயிர் பயத்தில் அடக்கி வாசிப்பனுக. போருக்கு பல ஆயிரம் கோடி செலவு பண்ண அவசியம் இல்ல. பாகிஸ்தான் , கனடா உள்ளே இருக்கற தீவிரவாதிகள் டம்மி பீஸ். இங்கே இந்திய குள்ளே 100 பேர் தீவிரவாத தேச துரோகிகள் அரசியல்வாதி ரூபத்துல இருக்கான், இவன போட்டாச்சினா வெளியே இருக்கற டம்மி பீஸ் அடக்கிருவானுக.


தமிழன்
ஜூன் 04, 2025 11:30

உங்களுக்கு என்னா அறிவு


தர்மராஜ் தங்கரத்தினம்
ஜூன் 04, 2025 15:08

தமிழன் என்கிற பெயரில் உலவும் மூர்க்கனுக்கு பெரிய குத்தூசியின் கருத்து ஊசி குத்துவது போல இருந்திருக்கும் போல .... ஹாஹஹாஹா ....


Amar Akbar Antony
ஜூன் 04, 2025 08:41

நம்ப முடியவில்லை. இருந்தாலும் தொண்டை குழிவறைக்கும் ...


SRIRAM
ஜூன் 04, 2025 08:41

இந்தியாவிலும் நடக்கனும்


ameen
ஜூன் 04, 2025 11:43

அப்படி ஒரு சூழல் வந்தால் அடியோடு நாட்டைவிட்டு விரட்டப்படுவார்கள்...


நரேந்திர பாரதி
ஜூன் 04, 2025 08:20

அப்போ ?


சமீபத்திய செய்தி