உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / வங்கதேசத்தில் ஹிந்துக்கள் மீது தொடரும் தாக்குதல்: இந்தியாவுக்கு வர பலர் முயற்சி

வங்கதேசத்தில் ஹிந்துக்கள் மீது தொடரும் தாக்குதல்: இந்தியாவுக்கு வர பலர் முயற்சி

டாக்கா: வங்கதேசத்தில் இருந்து ஷேக் ஹசீனா பதவி விலகி நாட்டை விட்டு வெளியேறிய பிறகும், ஹிந்துக்கள் வீடுகள் மீதான தாக்குதல் தொடர்கிறது. இதனால் ஹிந்துக்கள் பலர் இந்தியாவுக்கு வர முயற்சி செய்கின்றனர்.வங்கதேசத்தில் வசிக்கும் 17 கோடி பேரில் 8 சதவீதம் பேர் ஹிந்துக்கள். இவர்கள் பெரும்பாலும் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சியை ஆதரித்து வந்தனர். மற்ற கட்சிகளை காட்டிலும் அவாமி லீக் கட்சியின் கொள்கை, ஹசீனாவின் இந்தியா உடனான உறவு காரணமாக ஹிந்துக்கள் அவரை ஆதரித்து வந்தனர். ஹசீனாவிற்கு எதிராக எதிர்ப்பு கிளம்பி போராட்டம் வெடித்த நிலையில் ஹிந்துக்களின் வீடுகள், கோயில்கள், வணிக வளாகங்களை குறிவைத்து வன்முறையாளர்கள் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், அங்கு அவர்கள் அச்சத்துடனேயே வசித்து வருகின்றனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=eobd6sqt&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0ஹசீனாவிற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், ஹிந்துக்களின் பாதுகாப்பு குறித்து அச்சம் தெரிவித்ததுடன் வன்முறையில் ஈடுபட வேண்டாம் என கோரிக்கை விடுத்த போதிலும் வன்முறையாளர்கள் யாரும் அதனை கண்டுகொள்ளவில்லை. அந்நாட்டின் எதிர்க்கட்சியான கலீதா ஜியாவின் பிஎன்பி கட்சி தலைவர் ஒருவரும் , ‛ யாரும் வன்முறையில் ஈடுபட வேண்டாம். அமைதி காக்க வேண்டும் ' எனக்கூறியுள்ளார்.வங்கதேச வாழ் ஹிந்துக்கள் கிறிஸ்தவர்கள், புத்த மதத்தினர் ஒற்றுமை கவுன்சில் வெளியிட்ட அறிக்கையில், கடந்த திங்கட்கிழமை முதல் நடந்து வரும் தாக்குதலில் ஹிந்துக்களுக்கு சொந்தமான வீடுகள் மற்றும் வணிக வளாகங்கள் குறிவைத்து தாக்குதல் நடத்தப்படுகிறது. 20 ஹிந்து கோயில்கள் சேதப்படுத்தப்பட்டு உள்ளன. 40 பேர் லேசான காயமடைந்துள்ளனர்.22 மாவட்டங்களில் ஹிந்துக்களின் வீடுகள் மற்றும் சொத்துகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்து உள்ளனர்.

பாதுகாப்பு

இந்த வன்முறை சம்பவங்களுக்கு மத்தியில், டாக்கா நகரில் உள்ள சில கோயில்களை ஹிந்துக்களும், முஸ்லிம்களும் இணைந்து பாதுகாத்து வருகின்றனர். இஸ்கான் ஸ்வாமிபாக் கோயிலில் பாதுகாவலர்கள் யாரும் இல்லாவிட்டாலும், அங்கு ஒட்டப்பட்ட சுவரொட்டி ஒன்றில், ‛‛ பயம் வேண்டாம். நீங்கள் எங்களது சகோதரர்கள். வங்கதேசம் அனைவருக்குமானது '' என அதில் கூறப்பட்டு உள்ளது.

நாடு திரும்பும் ஊழியர்கள்

இதனிடையே, டாக்காவில் உள்ள இந்திய தூதரகத்தில் பணியாற்றும் அத்தியாவசியம் இல்லாத ஊழியர்கள் குடும்பத்தினருடன் நாடு திரும்பி வருகின்றனர். ஹிந்துக்கள் பலரும் இந்தியாவுக்கு வர முயற்சிக்கின்றனர்.

கவுன்சிலர் கொலை

ரங்பூர் மாவட்டத்தில் கஜல் ராய் என்ற ஹிந்து கவுன்சிலரை வன்முறையாளர்கள் சுட்டுக்கொன்ற கொடூரம் அரங்கேறியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

Sathyanarayanan Sathyasekaren
ஆக 07, 2024 20:52

மோகன்தாஸ் காந்தி, நேரு செய்த குளறுபடிகளால் இன்றுவரை ஹிந்துக்கள் பாதிக்கப்பட்டுக்கொண்டு இருக்கிறார்கள். நாட்டை மத அடிப்படையில் பிரித்தபோது அணைத்து முஸ்லிம்களையும் பாகிஸ்தானுக்கு அனுப்பி இருந்தால் இன்று இந்த பயங்கரங்கள் நடக்க வாய்ப்பில்லை. கத்திக்கு பயந்து மதம் மாறிய இந்த கயவர்கள் திருந்த முடியாத அளவு மூளை சலவை செய்யப் படுகிறார்கள். இவர்கள் திருந்த வாய்ப்பே இல்லை. ஆகவே ஹிந்துக்கள் இப்போதாவது படம் கற்றுக்கொண்டு இந்த பயங்கரவாத மதத்திற்கு சோம்பு தூக்கும் இரண்டு திருட்டு திராவிட கட்சிகளையும் தூக்கி எறியவேண்டும். ஹிந்து அமைப்புகள் எல்லாம் அமைத்து பேரணி சென்று மத்திய அரசை பங்களாதேஷ் ஹிந்துக்களை காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வலியுறுத்தவேண்டும்.


K.ragupathy
ஆக 07, 2024 18:57

போலி மதச்சார்பின்மை பேசுபவர்கள் வாய் திறக்க மாட்டார்கள்... நம்நாட்டின் தேசிய மதம் இந்து என அறிவிக்க வேண்டும்...


Rajah
ஆக 07, 2024 18:42

வங்கதேசத்தில் இருக்கின்ற ஹிந்துக்களுக்கு ஆதவராகப் பேசினால் நீங்கள் சமூகநீதிக்கு எதிரானவர்கள். வங்கதேச அத்துமீறிய குடியேறிகள் பற்றி பேசினாலும் நீங்கள் சமூகநீதிக்கு எதிரானவர்கள். இது திராவிட மொடல் சித்தாந்தம். இந்த புள்ளிக் கூட்டனிக்கு ஆதரவாகப் பேசுபவர்களை என்னவென்று சொல்வது. இப்படியும் நாட்டுப்பற்று இல்லாத ஜென்மங்கள் இந்தியாவில் இருக்கின்றார்கள்.


K.P SARATHI
ஆக 07, 2024 18:36

ஹிந்துக்களை பற்றி ஹிந்துக்களுக்கே கவலை இல்லை. தமிழக இந்துக்களிடம் சுயநலம் கலந்த பக்தி மட்டும்தான் உள்ளது.


பேசும் தமிழன்
ஆக 07, 2024 18:22

சிறுபான்மை.....? சிறுபான்மை எ‌ன்று கூவும் கூமுட்டைகள் எல்லாம் எங்கே போய் விட்டார்கள்..... குவாட்டர் அடித்து விட்டு குப்புற படுத்து விட்டார்களா ????


Anu Sekhar
ஆக 07, 2024 17:59

ராகுல் வாயிலே கொழுகட்டையா? ஏன் சும்மா இருக்காய் . மத பிரிவினை உன்னுடை சக்தி ஆச்ச்சே?


S. Narayanan
ஆக 07, 2024 15:57

வங்க தேசத்தில் உள்ள தமிழர்கள் சொல்லொணா துயரில் இருக்கிறார்கள். இங்கே திராவிட மாடல் அரசு தூங்குகிறது.


பேசும் தமிழன்
ஆக 07, 2024 18:25

அதற்கு ஒரு போராட்டம் நடத்தி விடலாம்.... வாங்க தேச தமிழர்களுக்கு எதிராக நடக்கும்.... ஒன்றிய அரசு ஒழிக என்று கோசம் போட்டால் .....எல்லாம் சரியாகி விடும்....தமிழக மக்களும் ஏமாந்து போய் ஓட்டு போட்டு விடுவார்கள்.


Mettai* Tamil
ஆக 07, 2024 15:46

பிற நாட்டில் வாழும் மைனாரிட்டி ஹிந்துக்களின் வாழ்வாதாரம் பாதுகாத்திட , CAA சட்டம் கட்டாயம் தேவை.


Vijay D Ratnam
ஆக 07, 2024 15:38

இந்திய சுதந்திரத்தின் போது, ஹிந்து மதத்திலிருந்து வெளியேறி மதம் மாறிய இஸ்லாமியர்களுக்கு தனியாக நாடு வேண்டும் என்று பறந்து விரிந்திருந்த பாரத தேசத்தை பிய்த்து எடுத்து இஸ்லாமியர்களுக்காக என்று பாகிஸ்தான் என்ற நாட்டை உருவாக்கிய போதே, ஜெனியூனா அங்கிருந்த ஹிந்துக்கள் இந்தியாவுக்கு அழைத்து இருக்க வேண்டும். ஒரு ஹிந்து விடாமல் அத்தனை பேரையும் நான்கு மாதத்திற்குள் அதாவது 31 டிசம்பர் 1947 க்குள் அழைத்து வந்திருக்க வேண்டும். அது போல இந்தியாவில் உள்ள ஒரு இஸ்லாமியர் ஒருத்தரை விடாமல் அத்தனை போரையும் அவர்களுக்காக உருவாக்கப்பட்ட சொர்க்கம் பாகிஸ்தானுக்கு பத்திரமாக அனுப்பி இருக்க வேண்டும். பெரிய தவறை செய்து விட்டார்கள் அப்போதைய அரசியல்வியாதிகள். படேல் போன்ற ஒருவர் சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் ஆகி இருந்தால் இப்படிப்பட்ட பச்சை அயோக்யத்தனம் நடந்திருக்காது சரி இனியாவது அந்த தவறை திருத்திக்கொள்ளவேண்டும். இஸ்லாமியர்களுக்காக 85 க்கும் மேற்பட்ட நாடுகள் இருக்கிறது. ஹிந்துக்களுக்காக ஒரேயொரு நாடு இந்தியா. இருந்துட்டு போகட்டுமே. நாமும் நிம்மதியாக இருப்போம். அவர்களும் வாழும்போதே சொர்க்கத்தை காணலாம்.


Srinivasan k
ஆக 07, 2024 16:56

this is the handiwork of the British and Nehru no point in asking about this now


Ashokan
ஆக 08, 2024 19:30

நீங்கள் கூறுவது சரிதான்


kulandai kannan
ஆக 07, 2024 14:26

இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி கண்டன ஊர்வலம் நடத்தவேண்டும்.


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை