உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / பெல்ஜியம் கார் பந்தயம்; அஜித்குமார் ரேஸிங் அணிக்கு 2வது இடம்

பெல்ஜியம் கார் பந்தயம்; அஜித்குமார் ரேஸிங் அணிக்கு 2வது இடம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புருஸ்ஸல்ஸ்: பெல்ஜியத்தில் நடந்த கார் பந்தயத்தில் அஜித்குமார் அணி 2வது இடத்தை பிடித்துள்ளது.தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் அஜித்குமார். இவர் தற்போது சினிமாவில் நடிப்பதில் இருந்து விலகி, கார் பந்தயத்தில் ஆர்வம் காட்டி வருகிறார். துபாய், ஸ்பெயின், இத்தாலி என அடுத்தடுத்து பல நாடுகளில் நடக்கும் கார் பந்தயத்தில் அஜித்குமார் அணி கலந்து கொண்டு அசத்தி வருகிறது. தற்போது பெல்ஜியத்தில் நடந்து வரும் ஜி.டி.,4 கார் பந்தயத்தில் அஜித்குமார் அணி பங்கேற்றது. இரு தினங்களுக்கு முன்பு இந்த பந்தயத்திற்கான பயிற்சியில் அஜித் ஈடுபட்டிருந்த போது, கார் விபத்தில் சிக்கியது. இதில், அதிர்ஷ்டவசமாக அவர் காயமின்றி உயிர்தப்பினார். இந்த நிலையில், தொடர்ந்து 12 மணிநேரம் நடக்கும் இந்த கார் பந்தயத்தில் அஜித்குமாரின் அணி 2வது இடத்தை பிடித்துள்ளது. இது அவரது ரசிகர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தியுள்ளது. இது இந்தியாவின் பெருமை மிக்க தருணம் என்று, அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா, எக்ஸ் தளத்தில் நெகிழ்ச்சி பதிவை போட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Karthik
ஏப் 22, 2025 10:19

வாழ்த்துக்கள் மிஸ்டர் A K


Mr Krish Tamilnadu
ஏப் 21, 2025 13:13

இரண்டிலும் சாக்சஸ் சூப்பர். வருவாய்க்காக சினிமா, விருப்பத்திற்காக ரேஸ். நிஜ ரேஸில் சினிமா மூளை வேலை செய்வதால், விபத்துக்கள் எட்டி பார்க்கின்றன. மனம் விரும்பியதை செய்கிறார்.


Keshavan.J
ஏப் 20, 2025 23:08

I think he lost his reflex. Even in Dubai race he had an accident during the practice. He should be careful.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை