உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / 4 இந்தியர்கள் உட்பட 39 பேருக்கு பொது மன்னிப்பு வழங்கிய பைடன்

4 இந்தியர்கள் உட்பட 39 பேருக்கு பொது மன்னிப்பு வழங்கிய பைடன்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: அமெரிக்காவில் சமீபத்தில் நடந்த அதிபர் தேர்தலில், முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றார். அவர் அடுத்த மாதம் 20ம் தேதி பதவியேற்க உள்ளார். தற்போதைய அதிபராக உள்ள ஜோ பைடனின் பதவிக்காலம் அடுத்த மாதம் முடிவடைய உள்ளது. இந்நிலையில், அந்நாட்டு சிறையில் உள்ள 1,500 கைதிகளுக்கு கருணை வழங்கிய பைடன், அவர்களின் தண்டனைக் காலத்தை குறைத்துள்ளார். அதேசமயம், தன் சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி 39 பேருக்கு அவர் பொதுமன்னிப்பு வழங்கினார். இது குறித்து பைடன் வெளியிட்டுள்ள செய்தியில், 'செய்த தவறுக்கு வருந்தி, மறுவாழ்வில் ஈடுபடுவோருக்கு, அதிபர் என்ற முறையில் கருணை காட்டுவதில் எனக்கு மகிழ்ச்சி. 'எனவே, தங்கள் சமூகங்களை வலிமையாகவும், பாதுகாப்பாகவும் மாற்றுவதில் அர்ப்பணிப்புடன் செயல்பட்ட 39 பேருக்கு பொது மன்னிப்பு வழங்கப்படுகிறது. 'நீண்ட சிறைத்தண்டனை அனுபவித்து வரும் 1,500 பேரின் தண்டனைகளையும் நான் குறைத்துள்ளேன். அவர்களில் பலர் இன்றைய சட்டங்கள், கொள்கைகள் மற்றும் நடைமுறைகளின் கீழ் குறைந்த தண்டனைகளைப் பெறுவர்' என, தெரிவித்துள்ளார். பொதுமன்னிப்பு வழங்கப்பட்ட 39 பேரில், நான்கு பேர் இந்தியர்கள். அவர்களில் ஒருவரான டாக்டர் மீரா சச்தேவாவுக்கு 2012ல், 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. சுகாதார துறையில் மோசடி மற்றும் போதைப்பொருள் சதியில் ஈடுபட்ட பாபுபாய் படேலுக்கு 2013ல், 17 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டது. போதைப்பொருள் வினியோகித்த வழக்கில், 2013ல், கிருஷ்ணா மோட் என்பவருக்கு ஆயுள் தண்டனை அளிக்கப்பட்டது. வாசனை திரவிய வினியோக தொழிலை பயன்படுத்தி, போதைப் பொருள் தயாரித்த குற்றத்துக்காக விக்ரம் தத்தாவுக்கு, 2012ல் 235 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இவர்கள் நால்வருக்கும் பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது. அமெரிக்க வரலாற்றில், இதுவரை இல்லாத அளவாக, ஒரே நாளில் 1,500 பேரின் கருணை மனு ஏற்கப்பட்டு தண்டனை குறைக்கப்பட்டதும், விடுவிக்கப்பட்டதும் பாராட்டைப் பெற்றுஉள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

அப்பாவி
டிச 14, 2024 09:21

இங்கே எப்படி லஞ்சம் குடுக்கறது வாங்கறது குற்றமில்லையோ அதுமாதிரி அங்கே போதைப் பொருள்.


அப்பாவி
டிச 14, 2024 09:20

இங்கிருந்து அங்கே போய் பேரை கெடுக்கறவன் வடக்கன். இங்கிருந்தே பேரைக் கெடுக்கறவன் திருட்டு திராவிடன்.


தர்மராஜ் தங்கரத்தினம்
டிச 14, 2024 08:53

அதையே பின்பற்றி ஜாஃபர் சாதிக்கும் எவ்வித நிபந்தனையுமின்றி விடுவிக்கப்பட்டால் சிறுபான்மையின வாக்குகளை பாஜக அள்ளலாம் ...... நாடு எக்கேடோ கெட்டுப் போகட்டும் .....


Raj
டிச 14, 2024 06:42

பொது மன்னிப்பு கொடுக்க வேண்டிய நிர்பந்தம், காரணம் தன் மகனுக்கு மன்னிப்பு வழங்கினார் அல்லவா.


Duruvesan
டிச 14, 2024 05:17

போதை பொருள் குற்றமே அல்ல அப்படின்னு அதிபர் நினைக்கிறாரா? இதையே மோடி சார் பின்பற்றி தீயமுக அயலக செயலாளர் சாதிக் அவர்களை விடுதலை செய்வாரா?


Mani . V
டிச 14, 2024 04:57

தன் மகனுக்கு மன்னிப்பு வழங்கி விடுதலை செய்தது பேசுபொருள் ஆனவுடன், வேறு வழியில்லாமல் இவர்களுக்கும் மன்னிப்பு வழங்கியுள்ளார் இந்த மன்னர் ஸாரி அதிபர். அங்கும் குடும்ப ஆட்சியின் ஆதிக்கம். மாடலின் புகழ் உலகம் முழுவதும் பரவியுள்ளது மகிச்சியே.


kalyan
டிச 14, 2024 04:24

இதுபோன்ற கொடிய அபராதங்களை செய்த இந்தியர்களுக்கு மன்னிப்பு அளிக்கும் அமெரிக்கா அதிபர் பைடன் அடானியின் மேலுள்ள இந்தியாவில் லஞ்சம் கொடுக்க திட்டமிட்டார் - அதுவும் கொடுக்கவில்லை தம்மாத்தூண்டு வழக்கை மன்னிப்பாரா? மாட்டார் ஏனென்றால் இந்தியா வளர்ந்து விடுமே ?


சமீபத்திய செய்தி