உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / அதிபர் தேர்தலில் போட்டியிடும் கமலாவுக்கு பில்கேட்ஸ் ஆதரவு: 50 மில்லியன் டாலர் நன்கொடை அளித்து தாராளம்

அதிபர் தேர்தலில் போட்டியிடும் கமலாவுக்கு பில்கேட்ஸ் ஆதரவு: 50 மில்லியன் டாலர் நன்கொடை அளித்து தாராளம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடும் கமலா ஹாரிசுக்கு தொழிலதிபர் பில்கேட்ஸ் ஆதரவு தெரிவித்துள்ளார். அவர் கமலாவுக்கு 50 மில்லியன் டாலர் நன்கொடை அளித்துள்ளார்.அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 5ல் நடைபெற உள்ளது. ஜனநாயக கட்சி சார்பில் துணை அதிபர் கமலா ஹாரிசும், குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டிரம்பும் களமிறங்கி உள்ளனர். கருத்துக்கணிப்புகளில் கமலா ஹாரிசுக்கு, அதிக செல்வாக்கு இருப்பது தெரியவந்துள்ளது. தேர்தலுக்கு இன்னும் இரண்டு வாரங்களே உள்ள நிலையில், கமலா ஹாரிசும், டிரம்பும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடும் கமலா ஹாரிசுக்கு தொழிலதிபர் பில்கேட்ஸ் ஆதரவு தெரிவித்துள்ளார். அவர் கமலாவுக்கு 50 மில்லியன் டாலர் நன்கொடை அளித்துள்ளார். ஆசிய- அமெரிக்கர்கள் மத்தியில் ஜனநாயகக் கட்சிக்கு ஆதரவு அதிகம் தென்படுகிறது. இவர்களில் 46 சதவீதம் பேர் பைடனுக்கு ஓட்டளிக்க விருப்பம் தெரிவித்தனர். அவர் தேர்தல் களத்தில் இருந்து விலகி, கமலா ஹாரிஸ் களம் இறங்கிய நிலையில், அவருக்கு ஓட்டளிக்க விரும்புவோர் சதவீதம் 64 ஆக அதிகரித்துள்ளது என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Constitutional Goons
அக் 23, 2024 18:33

இது லஞ்சம் ஊழல் இல்லை . ஆட்சிக்கு வந்து விட்டால் என்ன செய்வது என்ற பயம் . இந்தியர்கள் மீது பாசம்.


என்றும் இந்தியன்
அக் 23, 2024 17:03

50 மில்லியன் டாலர் = ரூ 420 கோடி. அப்போ முடிவு பண்ணியாச்சி அமெரிக்காவில் தாமரை தான் மலரப்போகின்றதென்று அதாவது கமலா ஹாரிஸ் தான் அடுத்த ப்ரெசிடெண்ட்???ஆனால் கருத்துக்கணிப்பு 50% கமலாவுக்கு 49% டிரம்ப் க்கு என்று சொல்றது தான் குழப்பமாக இருக்கின்றது


Gokul Krishnan
அக் 23, 2024 16:01

50 மில்லியன் டாலர் கொடுத்தவன் தேர்தலில் கமலா வெற்றி பெற்றால் சும்மாவா இருப்பான் 500 பில்லியன் ஆக திரும்ப எடுத்துக்கொள்ள திட்டம் தான்


Gopalakrishnan Balasubramanian
அக் 23, 2024 14:05

எதுக்கு கமலா ஹாரிஸ்-க்கு நாயனம் வாசிக்கிறீர்கள் என்று தெரியவில்லை இந்தியாவிற்கு அவரால் பிரச்சனை தான் அதிகம் ஆகும் டிரம்ப் தான் பெஸ்ட்


visu
அக் 23, 2024 12:03

கமலா ஹாரிஸ் அதிபரானால் இந்தியாவுக்கு எந்த பலனும் கிடையாது


Srinivasan K
அக் 23, 2024 12:35

correct, she will bro everything to destabilize india all deep state associates


P. VENKATESH RAJA
அக் 23, 2024 11:43

கமலா ஹாரிஸ்க்கு வெற்றி பெற வாழ்த்துக்கள்


முக்கிய வீடியோ