1200 வீரர்களின் உடல்கள் உக்ரைனிடம் ஒப்படைப்பு
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
கீவ்: போரில் உயிரிழந்த உக்ரைன் வீரர்கள் 1,212 பேரின் உடல்களை ரஷ்யா நேற்று அந்நாட்டிடம் ஒப்படைத்தது.கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் - ரஷ்யா இடையே மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக போர் நீடித்து வருகிறது.சமீபத்தில் மேற்காசிய துருக்கியின் இஸ்தான்புல்லில் இரு நாடுகளுக்கும் இடையே போர் நிறுத்த பேச்சு நடந்தது.நிபந்தனையின்றி போர் நிறுத்தத்திற்கு ரஷ்யா ஒப்புக்கொள்ள வேண்டும். சிறை கைதிகளை பரிமாறிக் கொள்ள வேண்டும். இறந்த உக்ரைன் வீரர்களின் உடல்களை ஒப்படைக்க வேண்டும் என உக்ரைன் கூறியது.நிபந்தனையற்ற போர் நிறுத்தம் என்பதை ரஷ்யா ஏற்க மறுத்துவிட்டது. அதே நேரத்தில், உக்ரைன் சிறைக் கைதிகள் மற்றும் இறந்த வீரர்கள் உடலை ஒப்படைக்க சம்மதம் தெரிவித்தது.அதன்படி குளிரூட்டப்பட்ட ஏராளமான சரக்கு லாரிகளில் 1,212 உடல்களை ஏற்றி உக்ரைன் எல்லையில் ரஷ்யா ஒப்படைத்தது. அவர்களை அடையாளம் காணும் பணியில் உக்ரைன் தடய அறிவியல் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.