உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / இஸ்ரேல் - ஈரான் இடையே தொடரும் குண்டுமழை; இதுவரை 600க்கும் மேற்பட்டோர் பலி

இஸ்ரேல் - ஈரான் இடையே தொடரும் குண்டுமழை; இதுவரை 600க்கும் மேற்பட்டோர் பலி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

டெஹ்ரான்: இஸ்ரேல் - ஈரான் நாடுகள் குண்டுகளை வீசி பரஸ்பரமாக தாக்குதல் நடத்தி வரும் நிலையில், இதுவரையில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 600ஐ தாண்டியுள்ளது.ஈரான், இஸ்ரேல் நாடுகளுக்கும் இடையேயான போர் கடந்த 13ம் தேதி தொடங்கியது. ஈரான் அணுசக்தி நிலையங்கள், ராணுவ நிலைகளை குறி வைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. பதிலுக்கு ஈரானும் இஸ்ரேல் மீது தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=lyivz0d1&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=06வது நாளாக போர் நீடித்து வரும் நிலையில், ஈரானை நிபந்தனையின்றி சரணடையுமாறு அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியிருந்தார். ஆனால், சமரசத்திற்கு வாய்ப்பே இல்லை என்று கூறி, ஈரான் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதையடுத்து, மத்திய கிழக்கு நாடுகளில், அமெரிக்கா தனது போர் விமானங்களை குவித்து வருகிறது. போரை நிறுத்துமாறு பல உலக நாடுகள் அறிவுறுத்தி வரும் நிலையிலும், இருநாடுகள் தீவிர தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. இஸ்ரேலில் உள்ள டெல்அவிவ் நகரில் 400 ஏவுகணைகளும், நூற்றுக்கும் மேற்பட்ட டிரோன்களைக் கொண்டும் ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது. டெல் அவிவ் மீது Fattah-1 ஹைப்பர்சோனிக் ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டது. 2024ம் ஆண்டுக்குப் பிறகு, தற்போது முதல்முறையாக இந்தப் போரில் Fattah-1 ஹைப்பர்சோனிக் ஏவுகணை பயன்படுத்தப்பட்டுள்ளது. இஸ்ரேல் முழுவதும் 40 இடங்களில் தாக்குதல் நடத்தப்பட்டது. இதன்காரணமாக 19,000க்கும் மேற்பட்ட பகுதிகள் சேதமடைந்துள்ளதாகவும், 3,800 மக்கள் இருப்பிடங்களை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்கு சென்று விட்டதாக அதிகாரிகள் கூறுகின்றனர். பதிலுக்கு டெஹ்ரான் மீது இஸ்ரேலும் தாக்குதலை நடத்தி வருகிறது. இதுவரையில் நடந்த தாக்குதல்களில் ஈரானில் 585 பேர் உயிரிழந்துள்ளனர். 1,326 பேர் காயமடைந்துள்ளனர். அதேபோல, இஸ்ரேலில் 24 பேர் உயிரிழந்துள்ளனர். 1,300 பேர் படுகாயமடைந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

JaiRam
ஜூன் 18, 2025 22:42

இப்பொழுது தர்மம் ஈரான் பக்கம் உள்ளது, தர்மம் தலை காக்கும் புடின் வடிவில்


JaiRam
ஜூன் 18, 2025 22:01

உண்மை இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா செய்வது அடாவடிய செயல் இஸ்ரேல் ஏதோ ஹமாஸ் அமைப்பு லெவலுக்கு ஈரானை நினைத்து தப்புக்கணக்கு போடுகிறார்கள், அமெரிக்கா உள்ளே வந்தால் ரஷ்யா, சீனா, வடகொரியா ஆகியவை ஈரானுக்காக உள்ளே வரும், இந்த முறை இரானுக்கானது


Kulandai kannan
ஜூன் 18, 2025 20:33

உணர்ச்சிப் பூர்வமாக வாய்ச்சவடால் விட்டால் ஈரான், காசா, பாலஸ்தீன கதிதான் என்பதை நம்மூர் சவுண்டு பார்ட்டிகளான ஸ்டாலின், சீமான், வேல்முருகன் இத்தியாதிகள் உணர்ந்தால் சரி.


Duruvesan, தர்மபுரி பாட்டாளி
ஜூன் 18, 2025 19:22

என்ன மூரக்கஸ் எரியுதா ?


அனுப்குமார்
ஜூன் 18, 2025 19:05

ரெண்டு பக்கமும் சேதாரம் இருந்தாத்தான் விஷயம் சூடு பிடிக்கும்.


sankaranarayanan
ஜூன் 18, 2025 18:59

கோமாளி கொமினி கொதித்தெழுந்தாலும் ஒன்றும் பயனில்லை அவர் அழிவை நாடி செல்கிறார் ஆனால் அவரை நாடி அழிவு விரைவில் வந்துகொண்டிருக்கிறது


Jagan (Proud Sangi )
ஜூன் 18, 2025 18:14

இந்த கொமேனியையும் போட்டு விடுவார்கள் அப்புறம் சண்டை முடிந்து ஈரான் ஒரு ஜனநாயக நாடாக மாறும். ஈரான் ஜனநாயக நாடாக விரைவில் மாற வாழ்த்துக்கள்...


சேகர்
ஜூன் 18, 2025 17:20

israel இந்த அடியை ஈரானிடம் இருந்து எதிர்பார்க்கவில்லை. ஏதோ ஹமாஸ் அமைப்பு லெவலுக்கு ஈரானை நினைத்து தப்புக்கணக்கு போட்டுவிட்டது. ஆகவே அமெரிக்கா israelகாக உள்ளே வர முயற்சிக்கிறது. அமெரிக்கா உள்ளே வந்தால் ரஷ்யா, சீனா, வடகொரியா ஆகியவை ஈரானுக்காக உள்ளே வரும். உலக நாடுகள் அனைத்துக்கும் தலைவலியே. israel தான் ஆதிக்கம் நிறைந்த நாடு எனும் கற்பனையில் இருந்து வெளிவந்து ஈரானுடன் பேச்சு வார்த்தை நடந்த வேண்டும். ஒன்றுபட்டால் உண்டு நன்மை. ஹமாஸ் அமைப்புடன் தீர்வு ஏற்பட வேண்டும். அரபு நாடுகள் அனைத்தும் ஒன்றிந்தாலே அமெரிக்காவின் அரபு நாடுகளின் மீதான தேவையற்ற ஆதிக்கம் முடிவுக்கு வரும்


SUBBU,MADURAI
ஜூன் 18, 2025 17:54

Seculars of Indian subcontinent: We stand with Iran. Shame on Israel and USA. Their Abba Asim Munir : Thank you for lunch President Trump, use our airbase to destroy Iran...


Karthik Madeshwaran
ஜூன் 18, 2025 16:57

ஓரளவு திறன்கொண்ட வலிமையான ராணுவம் ஈரானிடம் உள்ளது. ஆகையால், ஈரான் பின்வாங்க வாய்ப்பில்லை. அதனால் ஈரானை மிரட்டி பணிய வைக்க பார்க்கிறார்கள் அமெரிக்காவும் இஸ்ரேலும். வெறும் ஒரு கோடி மக்கள் தொகை கொண்ட இஸ்ரேல், ஒன்பது கோடி மக்கள் தொகை கொண்ட ஈரானை தனியாக அழிக்க முடியாது. அமெரிக்காவின் துணை கண்டிப்பாக தேவை. அமெரிக்கா ஈரானை நேரிடையாக தாக்கினால், இது உலக போருக்கு கட்டாயம் வழிவகுக்கும். கோமாளியை எல்லாம் கூட்டி வந்து அமெரிக்க அதிபர் ஆக்கினால் இப்படி தான் அனைத்து நாடுகளும் நாசமாக போகும்.


hasan kuthoos
ஜூன் 18, 2025 16:46

இந்த போர் முழுவதுமாக நடந்து முடியவேண்டும் பிறகு யார் உயிருடன் இருக்கிறார்களோ அவர்களே மத்திய கிழக்கில் கோலோச்சுவார்கள்


புதிய வீடியோ