உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / ரஷ்ய ராணுவ விமானம் விபத்து : 17 வீரர்கள் பலி

ரஷ்ய ராணுவ விமானம் விபத்து : 17 வீரர்கள் பலி

ரஷ்யாவில், உதிரி பாகங்களை ஏற்றிக் கொண்டு 'ஏ.என்., 12' என்ற ராணுவ விமானம் இன்று (நவ.,17) சென்றது. நோவோசிபிர்ஸ்கில் இருந்து கான்ஸ்க் நோக்கிப் பயணித்த இந்த விமானத்தில், 17 பேர் பயணம் செய்ததாக கூறப்படுகிறது. கெமரோவோ பகுதியில் உள்ள யாகுனோவோ கிராமத்திற்கு அருகே பறந்த போது, திடீரென விமானத்தில் தீப்பிடித்தது. தாழ்வாக பறந்த ராணுவ விமானம், கீழே விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில், அதில் பயணித்த 17 பேரும் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதை அடுத்து, தரையிறங்க முயன்ற விமானம் விபத்தில் சிக்கியது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !