வாசகர்கள் கருத்துகள் ( 2 )
கெழபோல்ட்டுகளுக்குத்தான் பதவி வெறி.
பிரேசில் அதிபர் சீக்கிரம் குணமடைய பிரார்த்தனைகள்.
பிரேசிலியா: பிரேசில் அதிபர் லுாலா, 78, கீழே விழுந்ததில் மூளையில் ரத்தக் கசிவு ஏற்பட்டதால், அவரது பிரிக்ஸ் மாநாட்டு பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.பிரிக்ஸ் நாடுகள் அமைப்பில் முக்கிய உறுப்பினராக இருப்பது பிரேசில். இதன் அதிபராக இருப்பவர் லூலா. இந்த வாரத்தில் ரஷ்யாவில் நடக்கவிருக்கும் பிரிக்ஸ் மாநாட்டில் லூலா பங்கேற்பதாக இருந்தது. இந்நிலையில் வீட்டில் கீழே விழுந்த அவருக்கு தலையில் காயம் ஏற்பட்டது. மூளையில் ஏற்பட்ட ரத்தக் கசிவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், ஓய்வில் இருக்கும் படி டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இதனால் பிரேசில் அதிபரின் ரஷ்ய பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது இது குறித்து டாக்டர் ரோபர்ட்டோ கூறுகையில், அதிபர் லூலா கீழே விழுந்ததில், மூளையில் லேசான ரத்த கசிவு ஏற்பட்டது. நேற்று மாலையில், 16வது பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொள்ள ரஷ்யாவுக்கு புறப்படுவதாக இருந்தார். தலையில் காயம் ஏற்பட்ட நிலையில் நீண்ட பயணம் மேற்கொண்டால் உடல் நலனில் தொய்வு ஏற்படும் என்பதால் ரஷ்ய பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.அவருக்கு ஓய்வு தேவை. மற்றபடி, அவர் நலமுடன் உள்ளார். அவர், சாதாரண செயல்களை செய்யலாம். நீண்ட பயணம் வேண்டாம் என அறிவுறுத்தி இருக்கிறோம்.இவ்வாறு டாக்டர் கூறினார்.அதிபருக்கு பதிலாக, வெளியுறவு அமைச்சர் மவ்ரோ வியரா, பிரேசில் பிரதிநிதியாக, பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொள்ள ரஷ்யாவுக்கு செல்ல உள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கெழபோல்ட்டுகளுக்குத்தான் பதவி வெறி.
பிரேசில் அதிபர் சீக்கிரம் குணமடைய பிரார்த்தனைகள்.