உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / போதை கும்பலுக்கு எதிராக பிரேசில் போலீஸ் வேட்டை 132 பேர் கொன்று குவிப்பு

போதை கும்பலுக்கு எதிராக பிரேசில் போலீஸ் வேட்டை 132 பேர் கொன்று குவிப்பு

ரியோ டி ஜெனிரோ: பி ரேசிலில் போதைப் பொருள் கடத்தல் கும்பலை ஒடுக்க போலீசார் மேற்கொ ண்ட அதிரடி நடவடிக்கையில், 132 பேர் உயிரிழந்தனர். தென் அமெரிக்க நாடான பிரேசிலின் தலைநகர் ரியோ டி ஜெனிரோவில் 'கொமாண்டோ வெர்மெல்ஹோ' என்ற போதைப் பொருள் கடத்தல் கும்பல் அரசுக்கு பெரும் தலைவலியாக இருந்து வருகிறது. கடந்த, 1970களின் இறுதியில் சிறைகளில் உருவான இந்த கும்பல், போதைப்பொருள் விற்பனை, ஆயுதங்கள் கடத்தல் போன்ற குற்றங்களில் ஈடுபட்டு வருகிறது. ஓராண்டாக அந்த கும்பலை கண்காணித்து வந்த ரியோ டி ஜெனிரோ போலீசார், 'ஆப்பரேஷன் கண்டெயின்மென்ட்' என்ற பெயரில் நேற்று முன்தினம் நடவடிக்கை மேற்கொண்டனர். நகரின் பல இடங்களில், மாநில போலீஸ் படை, ராணுவம் மற்றும் சிறப்பு பிரிவுகளைச் சேர்ந்த 2,500 பேர் களத்தில் இறங்கி தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, போலீசார் மீது கடத்தல் கும்பல் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதற்கு பாதுகாப்புப் படையினர் பதிலடி கொடுத்தனர். ரியோ டி ஜெனிரோ நகரில் நடந்த இந்த மோதல்களில், நான்கு போலீசார் உட்பட 132 பேர் உயிரிழந்தனர். அவர்களிடம் இருந்து 93 துப்பாக்கிகள், 500 கிலோ போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி