உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / சீனாவில் 14 மாடி கட்டடத்தில் தீ: 16 பேர் பலி; 75 பேர் பத்திரமாக மீட்பு

சீனாவில் 14 மாடி கட்டடத்தில் தீ: 16 பேர் பலி; 75 பேர் பத்திரமாக மீட்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பெய்ஜீங்: சீனாவில் 14 அடுக்கு மாடி கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 16 பேர் பலியாகினர். 75 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.சீனாவிவ் ஷிக்ஹாங் பகுதியில் 14 மாடி கொண்ட வர்த்தக மையம் உள்ளது. இந்த மாலில் எப்போதும் மக்கள் கூட்டம் நிரம்பி வழியும். இந்நிலையில் நேற்று இரவில் இங்கு ஒரு மாடியில் இருந்து தீ பரவியது. கரும்புகையுடன் நெருப்பு பிழம்பாக எரிந்தது. மக்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர். தீயணைப்பு படையினர் 300 பேர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதில் சம்பவ இடத்தில் 16 பேர் பலியாகினர். 75 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். மீட்பு பணிகள் துரிதமாக நடந்து வருகிறது. கடந்த ஜனவரி, பிப்ரவரியில் நடந்த தீ விபத்தில் 70 பேர் பலியாகினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Ramesh Sargam
ஜூலை 18, 2024 09:10

வேதனை. இறந்தவர்களுக்கு அஞ்சலி.


நிக்கோல்தாம்சன்
ஜூலை 18, 2024 08:40

சீனாவில் இறந்து போனவர்களுக்கு தமிழக கார்பொரேட் குடும்பத்தின் சார்பில் 10 லட்சம் இழப்பீடு தொகை வழங்கப்படுமா?


S.V.Srinivasan
ஜூலை 18, 2024 09:18

அது அவங்க அடிச்ச பணமாச்சே . எப்படி கொடுப்பாய்ங்க.


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை