கவுதமாலா நாட்டில் பஸ் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்து; பயணிகள் 15 பேர் பலி
நமது நிருபர்கவுதமாலா நாட்டில் பயணிகள் பஸ் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில், 15 பேர் உயிரிழந்தனர்; 19 பேர் காயமடைந்தனர்.மேற்கு கவுதமாலாவில் உள்ள இன்டர்-அமெரிக்கன் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த பஸ் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், 15 பேர் உயிரிழந்தனர். இவர்களில் 11 பேர் ஆண்கள் ஆவர்.மேலும் 19 பேர் பலத்த காயமடைந்து உள்ளனர். காயமடைந்த 19 பேரை தீயணைப்பு வீரர்கள் மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என மீட்புப்படை அதிகாரிகள் தெரிவித்தனர்.மூடு பனி காரணமாக இந்த விபத்து நிகழ்ந்திருக்கலாம் என்று முதற்கட்ட தகவல் தெரிவிக்கின்றன. பஸ் கவிழ்ந்து விபத்தில் 15 பேர் உயிரிழந்த சம்பவம் கவுதமாலா நாட்டையே உலுக்கி உள்ளது.