உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / நைஜீரியாவில் பஸ் கவிழ்ந்து விபத்து; விளையாட்டு வீரர்கள் 21 பேர் பரிதாப பலி

நைஜீரியாவில் பஸ் கவிழ்ந்து விபத்து; விளையாட்டு வீரர்கள் 21 பேர் பரிதாப பலி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

அபுஜா: நைஜீரியாவில் சாலையில் சென்று கொண்டிருந்த பஸ் கட்டுப்பாட்டை இழந்து, கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதில் விளையாட்டு வீரர்கள் 21 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.நைஜீரியாவின் ஓகுன் மாகாணத்தில் தேசிய விளையாட்டு விழா நடந்து வருகிறது. இதில் பங்கேற்ற தடகள வீரர்கள் ஒரு பஸ்சில் வீடு திரும்பி கொண்டிருந்தனர். அப்போது தேசிய நெடுஞ்சாலையில் பஸ் சென்று கொண்டிருந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து, கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு படையினர் நீண்ட நேரம் போராடி மீட்பு பணி மேற்கொண்டனர். இந்த விபத்தில் தடகள வீரர்கள் 21 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்திற்கான காரணம் குறித்து பல்வேறு கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர். அதிவேகமாக பஸ்ஸை இயக்கியது தான் விபத்திற்கு காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.'நைஜீரியாவில் சாலைகளின் நிலைமை மோசமாக இருக்கிறது. போக்குவரத்து விதிகளை மீறி டிரைவர்கள் செயல்படுவதால் அதிகமான விபத்துக்கள் நிகழ்கிறது' என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த ஆண்டு மட்டும் நைஜீரியாவில் 9,570 சாலை விபத்துக்களினால் 5,421 பேர் உயிரிழந்துள்ளனர் என புள்ளி விவரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Espionage
ஜூன் 01, 2025 23:51

ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திப்போம்


Padmasridharan
ஜூன் 01, 2025 15:37

எல்லோரும் விளையாட்டு வீரர்கள். RiP. போக்குவரத்து விதிகளை லைசென்ஸ் கொடுக்கும்போது தெரிந்திருக்கிறதா என்று பணம் வாங்காமல் பார்த்து கொடுத்திருந்தால் இம்மாதிரி விபத்துண்டாக்கும் ஓட்டுனர்களை அதிகாரிகள் முளையிலேயே தடுத்திருக்கலாம்.


Nada Rajan
ஜூன் 01, 2025 14:59

வீரமிக்க விளையாட்டு வீரர்கள் ஆன்மா சாந்தி அடையட்டும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை