உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / செங்கடலுக்கு அடியில் கேபிள்கள் சேதம்: இந்தியாவில் இணையசேவை துண்டிப்பு

செங்கடலுக்கு அடியில் கேபிள்கள் சேதம்: இந்தியாவில் இணையசேவை துண்டிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

துபாய்: செங்கடலில் கடலுக்கு அடியில் இருந்த கேபிள்கள் சேதமடைந்ததை அடுத்து, இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட ஆசிய நாடுகளில் இணையதள சேவை நேற்று முடங்கியது. ஆப்ரிக்க - ஆசிய நாடுகளுக்கு இடையே இந்தியப் பெருங்கடலில், ஏமன் நாட்டை ஒட்டி செங்கடல் பகுதி அமைந்துள்ளது. தெ ன்கிழக்கு ஆசியா, மத்திய கிழக்கு நாடுகள், மேற்கு ஐரோப்பிய நாடுகளுக்கான நான்கு இணையதள கேபிள்கள், செங்கடலின் ஆழமான பகுதிகளி ல் பதிக்கப்பட்டுள்ளன. 'அதேபோல், 'அல்காடெல் - லுசென்ட்' நிறுவனம் சார்பிலும் இணையதள சேவைகள் செங்கடல் அடியில் செல்கின்றன. இந்த கேபிள்கள் சேதமடை ந்ததை அடுத்து, ஆசிய நாடுகளில் இணையதள சேவை நேற்று கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட ஆசிய நாடுகளில் இந்த பாதிப்பு உணரப்பட்டது. இது குறித்து இணையதள சேவை யை நிர்வகித்து வரும், 'நெட்பிளாக்ஸ்' நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 'செங்கடல் பகுதியில் கடலுக்கடியில் புதைக்கப்பட்டிருந்த இணையதள கேபிள்கள் சேதமடைந்ததால், ஆசியா மற்றும் மேற்கு ஆசிய நாடுகளில் இணைய சேவை பாதிக்கப்பட்டது. இது ஓரிரு நாட்களில் சரி செய்யப்படும்' என, தெரிவிக்கப்பட்டுள்ளது. இணையதள சேவை தடை குறித்து 'மைக்ரோசாப்ட்' நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 'கடலுக்கடியில் கேபிள்களில் ஏற்பட்ட சேதத்தை சரிசெய்ய சில நாட்கள் தேவைப்படும்' என தெரிவித்தது. 'இஸ்ரேல் - ஹமாஸ் போரில், ஹமாசுக்கு ஆதரவாக ஏமனை தலைமையிடமாக வைத்து செயல்படும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் செயல்பட்டு வருகின்றனர். 'செங்கடல் பகுதியில், இஸ்ரேல் கொடியுடன் வரும் சரக்கு கப்பலை குறி வைத்து அவர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த தாக்குதலின் போது, இணையதள கேபிள்கள் துண்டிக்கப்பட்டிருக்கலாம்' என கூறப்படுகிறது. கேபிள்கள் சேதமடைந்ததற்கு தாங்கள் காரணமில்லை என ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். வர்த்தகக் கப்பல்கள் வீசும் நங்கூரங்களால் கேபிள்கள் சேதமடைந்திருக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அதேசமயம், செங்கடல் பகுதியில் நிலவும் மோதல்களால், முக்கியமான டிஜிட்டல் உள்கட்டமைப்புகள் வேண்டுமென்றே குறிவைக்கப்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

நிக்கோல்தாம்சன்
செப் 08, 2025 08:33

இப்போதான் எங்க ஊரு invester தலை வெளிநாட்டுக்கெல்லாம் சுற்றிவந்தார் , இதிலும் கால்பதிக்க போகிறதா அவரது குடும்பம் ?


தியாகு
செப் 08, 2025 03:00

நல்லா செக் பண்ணுங்க சார், துபாயில் குடியேறிய கட்டுமர திருட்டு திமுககாரர்கள் ஒரு கும்பலாக அந்த கேபிளை ஆட்டையை போட்டு வெளி மார்க்கெட்டில் கம்மி விலைக்கு விற்பதற்கு திட்டம் போட்டிருக்கலாம். ஏன்னா அவனுங்க டிசைன் அப்படி. கடலுக்கு அடியிலும் ஆட்டையை போடுவதில் வல்லவர்கள் அவர்கள்.


சமீபத்திய செய்தி