உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / உடனடியாக பதவி விலகணும்; கனடா பிரதமருக்கு கட்சியினர் கெடு!

உடனடியாக பதவி விலகணும்; கனடா பிரதமருக்கு கட்சியினர் கெடு!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஒட்டாவா: கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அக்.,28ம் தேதிக்குள் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று அவரது சொந்த கட்சி எம்.பி.,க்கள் கெடு விதித்துள்ளனர்.கனடாவில், காலிஸ்தான் பிரிவினைவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார், கடந்தாண்டு ஜூனில் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இது தொடர்பாக இந்தியா மீது கனடா பிரதமர் நேரடியாக குற்றம் சாட்டியதால் இருநாடுகளுக்கு இடையிலான உறவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அரசியல் ஆதாயங்களுக்காக இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ சிதைத்துவிட்டதாக இந்தியா தரப்பில் குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. இது ஒரு புறம் இருந்தாலும், கனடா பிரதமர் ட்ரூடோவுக்கு சொந்தக் கட்சியிலேயே கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. நேற்று நடந்த லிபரல் கட்சி எம்.பி.,க்களின் ரகசிய கூட்டத்தில் ட்ரூடோவும் கலந்து கொண்டார். அப்போது, ஒவ்வொரு எம்.பி.,க்களுக்கும் பேச இரண்டரை நிமிடம் அவகாசம் வழங்கப்பட்டது. அதனைப் பயன்படுத்தி பேசிய எம்.பி.,க்கள், ட்ரூடோ மீதான அதிருப்தி மற்றும் குறைகளையும் வெளிப்படையாக கூறினர். மேலும், ட்ரூடோ பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி 24 எம்.பி.,க்கள் கையெழுத்திட்ட கடிதமும் கொடுக்கப்பட்டது.அதில், வரும் அக்டோபர் 28ம் தேதிக்குள் ட்ரூடோ பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று கெடு விதிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில், ராஜினாமா செய்யாவிட்டால், அடுத்தகட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

Sivagiri
அக் 24, 2024 19:41

பரவாயில்லையே . . . அந்த கட்சியினருக்கு பகுத்தறிவு இருக்கு போல . . இங்க ? . . . தலைவனுக்கு மட்டும் பகுத்தறிவு இருக்கு , தொண்டர்கள் ? . . . எப்பவும் ஒரே அறிவுதான் ரூ 200-00 குவார்ட்டர் , பிரியாணி , அவ்வளவுதான் . . .


KavikumarRam
அக் 24, 2024 22:17

என்னது 200 உபிஸோட தலைவனுக்கு பகுத்தறிவு இருக்கா?????? விளங்குன மாதிரி தான்.


Easwar Kamal
அக் 24, 2024 18:05

அந்த keddu கெட்ட 25 காலிஸ்தான் ஆதரவு mp ஆதர்வு வேனும்ம்னுதானே சோம்பு தூக்கின. இப்போ உன்காட்சி இருந்து 24 mp பதவி விட்டு போனு சொல்லுறாங்க. இப்போ மனைவியும் கிடையாது diverse வேற பண்ணியாச்சு. இருந்தாலாவது கொஞ்சம் advice பண்ணி இருக்கலாம். கண்டிப்பா அடுத்த முறை 25ல இருந்து பாதி தன கிடாய்க்கும். நம் இந்தியர்கள் இந்த காலிஸ்தான் கூட்டத்துக்கு ஒட்டு போடாமல் தூக்கி அடிங்கல். அதுக்கு இது தமிழர்கள் துணையும் வேண்டும்.


N.Purushothaman
அக் 24, 2024 17:51

கட்சியை ரெண்டா உடைச்சா பிரிவினைவாதம் எவ்வளவு மோசமானது என்பது அப்போது புரியும் ...


rama adhavan
அக் 24, 2024 22:01

அடிமைகள் இருக்கும்வரை கட்சி உடையாது. அப்பப்போ வீசும் எலும்பு துண்டு போதும், வால் ஆட்ட.


தேச பித்தன்
அக் 24, 2024 17:42

இந்தியாவை சீன்டி பாக்காதிங்க, இங்க மோடி சர்க்கார். தொட்ட, கேடு வரும்.


Anand
அக் 24, 2024 17:04

தேவையில்லாமல் இந்தியாவிடம் வம்பிழுத்து உனக்கு நீயே ஆப்படித்துக்கொண்டாய், இது போதாது, தீவிரவாதிகளை கொல்லைப்புறத்தில் வளர்த்த நீ அவனுங்களாலேயே அழிவாய்...


Palanisamy Sekar
அக் 24, 2024 16:49

நிரந்தரமில்லாத பதவியில் இருந்துகொண்டு நாட்டுக்கு எதிரான போக்கினை கையாண்ட ட்ரூடோ இனி செல்லாக்காசுதான். பதவி கிடைத்ததும் தலைக்கனமும் வந்துவிடுகின்றது. டெல்லி விவசாயிகள் போராட்டத்துக்கு மறைமுக நிதி உதவியை கொடுத்ததே இதே ட்ரூடோ தான். சிறுபிள்ளைத்தனமான செயல்களுக்கு அவரது கட்சியிலேயே எதிர்ப்பு கிளம்புவது நல்லதுதான். மலை மீது முதலாம்... இமயத்தின் மீது மோதி விளையாட நினைத்தது தவறு என்று உணர்ந்த தருணம் இதுவாகத்தான் இருக்கும். டம்மி ட்ரூடோ..


nathan
அக் 24, 2024 15:13

நம்ம மகா மாதிரி கட்சியை உடைத்து வேற பிரதமரை தேர்ந்து எடுக்கலாமே


rama adhavan
அக் 24, 2024 22:02

இங்கு முதலில் நடக்கட்டும்.


Amsi Ramesh
அக் 24, 2024 15:07

இந்தியாவிடமே அரசியல் - உங்கள் வாக்கு வாங்கி அரசியலுக்கு இந்திய ஊறுகாயா


புதிய வீடியோ