உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / பிரிட்டன், பிரான்சை தொடர்ந்து கனடாவும் பாலஸ்தீனத்தை அங்கீகரிக்க முடிவு

பிரிட்டன், பிரான்சை தொடர்ந்து கனடாவும் பாலஸ்தீனத்தை அங்கீகரிக்க முடிவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஒட்டாவா: வரும் செப்டம்பர் மாதம் பாலஸ்தீன அரசை அங்கீகரிப்போம் என கனடா பிரதமர் மார்க் கார்னி அறிவித்துள்ளார். ஏற்கனவே, பாலஸ்தீனத்தை ஆதரிப்போம் என பிரிட்டன், பிரான்ஸ் தெரிவித்துள்ளன.இஸ்ரேல்- ஹமாஸ் இடையே நீண்ட நாட்களாக மோதல் போக்கு நிலவி வருகிறது. இந்த போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்கா பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது. போர் நிறுத்த பேச்சுவார்த்தைகள் அனைத்தும் தோல்வியில் முடிந்துள்ளது.இந்த சூழலில், வரும் செப்டம்பர் மாதம் பாலஸ்தீன அரசை அங்கீகரிப்போம் என கனடா பிரதமர் மார்க் கார்னி அறிவித்துள்ளார். இது குறித்து மார்க் கார்னி சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: மத்திய கிழக்கில் இஸ்ரேல் ஒரு சுதந்திர நாடாக இருப்பதை கனடா எப்போதும் உறுதியாக ஆதரிக்கும்.இஸ்ரேல் அரசுடன் அமைதியுடனும், பாதுகாப்புடனும் வாழும் ஒரு சுதந்திரமான, சாத்தியமான மற்றும் இறையாண்மை கொண்ட நாடு பாலஸ்தீனம். இருநாடுகள் இடையே நடக்கும் மோதலுக்கு தீர்வு காண, கனடா நீண்ட காலமாக உறுதிபூண்டுள்ளது.வரும் செப்டம்பர் மாதம் ஐ.நா.,வில் பாலஸ்தீன அரசை அதிகாரப்பூர்வமாக அங்கீகரிப்போம். இவ்வாறு அவர் கூறினார்.

கடும் எதிர்ப்பு

கனடா முடிவிற்கு அமெரிக்கா, இஸ்ரேல் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. இது குறித்து இஸ்ரேல் வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்த நேரத்தில் கனடா அரசாங்கத்தின் நிலைப்பாட்டில் ஏற்பட்ட மாற்றம் ஹமாஸுக்கு ஒரு வெகுமதியாகும். காசாவில் போர்நிறுத்தத்தை அடைவதற்கான முயற்சிகளுக்கும், பிணைக்கைதிகளை விடுவிப்பதற்கான ஒரு கட்டமைப்பிற்கும் தீங்கு விளைவிக்கும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே, பாலஸ்தீனத்தை ஆதரிப்போம் என பிரிட்டன், பிரான்ஸ் தெரிவித்துள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

அப்பாவி
ஜூலை 31, 2025 12:20

நாமளும் ஆதரவு தெரிவிச்சு வெப்போம். நேத்தி வரைக்கும்வேடிக்கை பாத்துட்டு நின்னோம். காங்கிரஸ் ஆட்சியிலிருந்த போது தான் பாலஸ்தீனத்துக்கு ஆதரவு தெரிவிச்சது.


Rajasekar Jayaraman
ஜூலை 31, 2025 09:59

மனித குல அழிவுக்கு முதல் படி.


P. SRINIVASAN
ஜூலை 31, 2025 12:11

மனித குலத்தையே இஸ்ரேல் கொன்னு குவிக்கின்றன அது உனக்கு தப்ப தெரியல?


மூர்க்கன்
ஜூலை 31, 2025 16:16

அழிவில் இருந்துதான் புதிய தொடக்கம் அமையும் இதுதான் ஈசனின் விதி??


GMM
ஜூலை 31, 2025 09:49

பாலஸ்தீனதை அங்கீகரிக்கும் கனடா, பிரிட்டிஷ் நாடுகள் தீவிரவாதத்தை அங்கீகரிப்பதற்கு சமம். தீவிர வாதிகள் நிரம்பிய நாடுகளான லெபனான், துருக்கி, பாகிஸ்தான், பங்கதேஷ்... அங்கிகாரம் வாபஸ் பெற வேண்டும். இல்லாவிட்டால் தீவிரவாதிகள் உடன் வாழ கற்று கொள்ள வேண்டும்.


Haja Kuthubdeen
ஜூலை 31, 2025 10:18

தீவிரவாதிகள் உறுவானதே இஸ்ரேல் பாலஸ்தீனத்தின் காஸா.. ஜெருசலேம் பகுதியை ஆக்கிரமித்து அப்பகுதி மக்களை அடக்கி ஒடுக்கி கொன்று குவித்ததால்தான்..நம் மண் காஸ்மீரை பக்கிகள் ஆக்கிரமித்து வைத்திருப்பதால்தானே இருப்பவரை நாம் பக்கியை எதிர்க்கிறோம். நமக்கொரு நீதி அவர்களுக்கு ஒரு நீதியா!!?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை