உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / இந்திய மாணவர் சேர்க்கை குறைந்தது: கனடா பல்கலை, கல்லுாரிகளில் 10,000 பேர் வேலை இழப்பு

இந்திய மாணவர் சேர்க்கை குறைந்தது: கனடா பல்கலை, கல்லுாரிகளில் 10,000 பேர் வேலை இழப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஒன்டாரியோ: கனடா பல்கலை மற்றும் கல்லூரிகளில் இந்திய மாணவர்களின் சேர்க்கை வெகுவாக குறைந்ததால் நிதி நெருக்கடியில் சிக்கிய கல்வி நிறுவனங்கள் பேராசிரியர்கள், நிர்வாக பணியாளர்கள் என 10,000 பேரை பணி நீக்கம் செய்துள்ளன.காலிஸ்தான் பயங்கரவாதிகள் தொடர்பான பிரச்னையில், நம் நாட்டுக்கும், வட அமெரிக்க நாடான கனடாவுக்கும் இடையேயான உறவில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. இந்நிலையில், வட அமெரிக்க நாடான கனடாவில் உயர் கல்வி படிப்பதற்காக, இந்திய மாணவர்கள் அதிகளவில் சென்று வந்தனர். அந்நாட்டு அரசு வெளிநாட்டு மாணவர்கள் சேர்க்கைக்கு கடும் கட்டுப்பாடுகளை விதித்தது.மாணவர் விசாவுக்கான எண்ணிக்கையில் வரம்பை நிர்ணயித்தது. இந்த கட்டுப்பாடுகள் வெளிநாட்டு மாணவர்களை நம்பியுள்ள அந்நாட்டின் கல்லூரிகளுக்கே விளைவுகளை ஏற்படுத்தியது. கனடாவின் ஒன்டாரியோ நகரில் உள்ள கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் இந்தியர்கள். இந்தாண்டு விதித்த கட்டுப்பாடுகள் இந்திய மாணவர்களின் சேர்க்கை குறைந்தது. அதை ஈடுசெய்ய அரசிடம் அவசர நிதியுதவி வழங்க கல்லூரி நிர்வாகங்கள் கோரின. ஆனால் அதுவும் கிடைக்கவில்லை. இதனால் பல கல்லூரிகள் துறைகளின் எண்ணிக்கையை குறைத்துள்ளன. 10,000க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள், நிர்வாக பணியாளர்களை பணி நீக்கம் செய்துள்ளன. அரசு தலையிடாவிட்டால் கல்லூரிகளில் பணி நீக்கம் அதிகரிக்கும் என ஒன்டாரியோ அரசு ஊழியர்கள் சங்கத்தின் தலைவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

Ganesan Arumugam
ஜூலை 15, 2025 22:14

இந்தியா ஊழலற்ற நாடாக மாறிவிட்டால் உலகமே இந்தியாவைத் தான் ஏக்கமாக பார்க்கும்..


கண்ணன்
ஜூலை 14, 2025 11:38

இது ஜஸ்டின் ட்ரூடோ போன்ற படிப்பறிவற்றோருக்கான் பாடம்- இதே போல் இங்கிலாந்து மற்றும்அமெரிக்காவிற்கும் ஏற்படும்


இந்தியன்
ஜூலை 14, 2025 10:51

இங்கேயே ஊருக்கு ஒரு ஐ.ஐ.டி திறந்து எல்லோருக்கும் கல்வி குடுங்க. அங்கே படிக்கப் போறஅனுங்க அங்கேயே வேலை தேடிக்கொண்டு செட்டிலாயிடறாங்க. அங்கே ரிடையரானதும் இந்தியாவுக்கு வந்து தேச சேவை செய்யறேன்னு உருட்டுவாங்க.


peermohammednurullaraja peermohammednurullaraja
ஜூலை 13, 2025 15:56

வெளிநாடுகளில் இந்திய மாணவர்கள் வேலை இழந்தது பெரும் மகிழ்ச்சி


உண்மை கசக்கும்
ஜூலை 13, 2025 21:10

பாவி .. என்ன வக்கிர புத்தி..


RaNaMurty
ஜூலை 14, 2025 04:40

சிரியாவில் துலுக்ஸ் அடித்துக்கொண்டு சாவதும் பாகிஸ்தான் உலக பிச்சைக்காரர்களானதும் மகிழ்ச்சி அளிக்கிறது. மோடி வாழ்க


Jack
ஜூலை 13, 2025 13:33

அமெரிக்காவிலும் மாணவர்கள் படிக்க செல்வது குறைந்திருக்கிறது ... வேலை வாய்ப்பு குறைந்ததே காரணம் ... ஏரோ ஸ்பேஸ் போன்ற குறிப்பிட்டமேற்படிப்புகளுக்கேசெல்ல விரும்புகிறார்கள். ஐரோப்பிய நாடுகளுக்கும் செய்வது குறைவு .. இஸ்ரேலில் ரஷ்யாவில் வாய்ப்பு இருந்தால் படிக்க செல்லலாம்


Padmasridharan
ஜூலை 13, 2025 12:14

சாகறதுக்காகவும் மற்ற சுதந்திர செயல்களுக்காகவும் அமெரிக்கா போக வேண்டிய அவசியமில்லையே. அவை இந்தியாவிலேயே தங்கள் குடும்பத்துடன் இருந்தே கிடைக்கும்


Ramesh Sargam
ஜூலை 13, 2025 12:03

இதிலிருந்து என்ன தெரிகிறது? இந்தியாவை எதிர்த்தவர்கள் அழிந்துபோவார்கள் என்றல்லவா? என்னவென்றால், இந்தியாவில் வாழ்ந்துகொண்டு, இந்திய உணவை தின்றுகொண்டு, இந்தியாவை எதிர்க்கும் காங்கிரஸ், திமுக, கம்யூனிஸ்ட்ஸ் போன்ற தேசதுரோகிகள் அழியாமல் இருக்கிறார்கள். அவர்களும் ஒரு நாள் அழிவார்கள்.


SUBBU,MADURAI
ஜூலை 13, 2025 11:56

இதற்கெல்லாம் மூல காரணம் கனடாவின் முன்னாள் பிரதமரும் காலிஸ்தான்களின் ஆதரவாளருமான...


SUBBU,MADURAI
ஜூலை 13, 2025 12:24

Justin Trudeau..


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை