சர்ச்சைக்குரிய விளம்பரம் வெளியானதற்காக டிரம்பிடம் மன்னிப்பு கேட்டார் கனடா பிரதமர்
ஒட்டாவா: அமெரிக்க வரி விதிப்பை கண்டித்து கனடாவின் ஒன்டாரியோ மாகாண முதல்வர் வெளியிட்ட விளம்பரத்துக்காக, அமெரிக்க அதிபர் டிரம்பி டம் கனடா பிரதமர் மார்க் கார்னி மன் னிப்பு கோரினார். வட அமெரிக்க நாடான கனடாவின் மிகப்பெரிய மாகாணமான ஒன்டாரியோ மாகாணத்தின் முதல்வர் டக் போர்டு, சமீபத்தில் அமெரிக்க வரி விதிப்பு குறித்து ஒரு விளம்பர வீடியோவை வெளியிட்டார். இதில், அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு ரீகன் பேசிய உரையில் இருந்து சில பகுதிகளை எடுத்து விளம்பரத்தில் பயன்படுத்தியிருந்தார். இதற்கு, டொனால்டு ரீகன் அறக்கட்டளையும், அமெரிக்க அதிபர் டிரம்பும் கண்டனம் தெரிவித்திருந்தனர். இந்நிகழ்வையடுத்து, கனடா உடனான அனைத்து வகை வர்த்தக பேச்சுக்களும் முடிவுக்கு வருவதாகவும், கனடாவிலிருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதியாகும் பொருட்களுக்கு, 10 சதவீதம் கூடுதல் வரி விதிக்கப்படுவதாகவும் டிரம்ப் அறிவித்தார். இதைத்தொடர்ந்து, கனடா பிரதமர் மார்க் கார்னி, ஒன்டாரியோ மாகா ண முதல்வர் டக் போர்டை தொடர்பு கொண்டு விளம்பரத்தை நிறுத்துமாறு அறிவுறுத்தியிருந்தார். சர்ச்சைக்குரிய விளம்பரம் ஒளிபரப்பாவதை நிறுத்தி விடுவதாக டக் போர்டு உறுதியளித்தார். இதைத் தொடர்ந்து, சமீபத்தில் அதிபர் டிரம்பும், கனடா பிரதமர் மார்க் கார்னியும் ஆசிய - பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்பதற்காக தென்கொரியா சென்றிருந்தனர். அங்கு நடந்த விருந்தில் பங்கேற்றபோது, டிரம்பிடம், கார்னி மன்னிப்பு கோரினார். கார்னி கூறியதாவது: கனடா பிரதமர் என்ற முறையில், அமெரிக்காவுடன் நல்லுறவை பேணுவது என் பொறுப்பு. இதனால், நான் அதிபர் டிரம்பிடம் மன்னிப்பு கோரினேன். மேலும், ஒன்டாரியோ மாகாண முதல்வர் டக் போர்டிடம் விளம்பரத்தை நிறுத்துமாறு அறிவுறுத்தியிருந்ததை டிரம்பிடம் தெரிவித்தேன். அவர் இந்த விளம்பரம் குறித்து மிகுந்த மன வருத்தத்தில் இருந்தார். இவ்வாறு அவர் கூறினார். மன்னிப்பு கோரிய பின்பும், கனடா உடனான வர்த்தக பேச்சுக்கள் உடனடியாக துவங்க ப்படாது என டிரம்ப் தெரிவித்தார். கார்னியை தனக்கு மிகவும் பிடிக்கும் என தெரிவித்த டிரம்ப், இருவருக்குமிடையே மிகச்சிறந்த உறவு இருப்பதாக குறிப்பிட்டார்.