உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / ராஜதந்திரம் வீணாப்போச்சு; குட்டி கட்சி ஆதரவு வாபஸ்: கனடாவில் ஜஸ்டின் ட்ரூடோ பலம் அம்போ

ராஜதந்திரம் வீணாப்போச்சு; குட்டி கட்சி ஆதரவு வாபஸ்: கனடாவில் ஜஸ்டின் ட்ரூடோ பலம் அம்போ

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஒட்டவா: கனடாவில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அரசுக்கான ஆதரவை புதிய ஜனநாயகக் கட்சி வாபஸ் பெற்றது; இதனால் தீர்மானங்களை நிறைவேற்ற வேறு கட்சிகளின் ஆதரவை நாடும் நிலை அரசுக்கு ஏற்பட்டுள்ளது.கனடாவில் ஜஸ்டின் ட்ரூடோ தலைமையிலான, சிறுபான்மை லிபரல் கட்சியின் ஆட்சி நடக்கிறது. இங்கு கணிசமான எண்ணிக்கையில் வசிக்கும் சீக்கியர்களை பிரதிநிதித்துவம் செய்யும் வகையில் ஜக்மீத் சிங் தலைமையில் புதிய ஜனநாயகக் கட்சி செயல்படுகிறது. இந்த கட்சிக்கு 24 எம்.பிக்கள் உள்ளனர். இவ்வளவு காலமாக ட்ரூடோவுக்கு ஆதரவு தெரிவித்து வந்தது. சீக்கியர்களின் ஆதரவை பெறவும், அந்தக் கட்சித்தலைவர்களை மகிழ்விக்கவும், அவ்வப்போது அவர்களுக்கு ஆதரவாக ட்ரூடோ பேசுவது வழக்கம். பயங்கரவாத எண்ணம் கொண்டவர்களுக்கு ஆதரவாகவும், இந்தியாவுக்கு எதிராகவும் பேசுவதையும் வழக்கமாக கொண்டிருந்தார்.

ஆதரவு வாபஸ்

இந்நிலையில், புதிய ஜனநாயகக் கட்சி அரசுக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெற்றதாக அறிவித்துள்ளது. சீக்கிய தலைவர் ஜக்மீத் சிங் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:அரசியலில் கவனம் செலுத்துவதை விட, கடந்த ஆண்டுகளில் நாங்கள் செய்தது போல், கனடியர்களுக்கு ஆதரவாக இருப்பதில் புதிய ஜனநாயகக் கட்சி கவனம் செலுத்தும் என்று நான் நம்புகிறேன்.

திணறி வரும் ட்ரூடோ

2022ல் இருவரும் செய்துகொண்ட ஒப்பந்தத்தை கிழித்தெறிய உள்ளேன். தற்போதைய சூழலில் ஜஸ்டின் ட்ரூடோவால் எதிர்கட்சியான கன்சர்வேடிவ்களை எதிர்கொள்ள முடியவில்லை .2025 அக்டோபர் இறுதிக்குள் நடத்தப்பட வேண்டிய தேர்தலில் கன்சர்வேடிவ் கட்சியினர் எளிதில் வெற்றி பெறுவார்கள். அரசுக்கு அளித்து வந்த ஆதரவை நாங்கள் வாபஸ் பெறுகிறோம்இவ்வாறு அவர் கூறினார்.

ஆட்சிக்கு ஆபத்தா?

இதனால் ட்ரூடோ எதிர்பாராத அடியை சந்தித்தார். எனினும் ஆட்சிக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்பில்லை என அரசியல் நிபுணர்கள் தெரிவித்தனர். பட்ஜெட்டை நிறைவேற்றவும், நம்பிக்கை ஓட்டெடுப்பில் இருந்து தப்பிக்க வேண்டும் என்றால் உதிரிக்கட்சிகளின் ஆதரவை ஜஸ்டின் ட்ரூடோ அரசு பெற வேண்டும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

Easwar Kamal
செப் 05, 2024 16:51

நம் இந்தியர்கள் குறிப்பாக இழத்தமிழர் மற்றும் குஜராத்திகள் ஒரு அணியில் சேர்ந்து இந்த சீக்கிய கட்சிக்கு எதிராக ஒரு அணியாக திரள வேண்டும். சீக்கிய கட்சிக்கு கண்டிப்பாக ஒட்டு போடா கூடாது. ஒட்டு போட்டாலும் கனடிய கட்சிக்கு ஒட்டு போட வேண்டும். அது எங்க கனடா வந்தால் அடுத்த நாளே அமெரிக்கா வந்துரனும். அமெரிக்கால ஒன்னும் சிவப்பு கமபலம் போட்டு வரவேற்களை கனடா இருந்து தங்கள் பலத்தை காட்டினாள் இந்த சீக்கிய கூட்டம் அடங்கி விடும்.


பட்டினத்தார் , மலையும் மலை சார்ந்த பகுதி
செப் 05, 2024 14:13

பாத்திரம் அறிந்து பிச்சை போட வேண்டும் என்பதை போல் கூட்டு சேரும் போதும் கவனமாக இருக்க வேண்டாமா


VENKATASUBRAMANIAN
செப் 05, 2024 13:10

கெடுவான் கேடு நினைப்பான்


Rajah
செப் 05, 2024 13:08

இன்னும் சில வருடங்களுக்குப் பின்னர் கனடா ஒரு இஸ்லாமிய நாடாக மாறி விடும் அபாயம் உள்ளது. 2000 ம் ஆண்டு நான் சென்றபோது இருந்ததற்கும் சென்ற வருடம் நான் சென்றதிற்கும் இடையில் பல மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன. நாட்டை சீரழித்த பெருமை ட்ரூடோவிற்கே சேரும். இந்த அபாயத்தை உணர்ந்த ஆஸ்திரேலியா மிகவும் அவதானமாக செயல்படுகின்றது. சமூக நீதி பேசினால் நிரந்தரமாக உள்ளே இருக்கவேண்டியதுதான். வன்னிஅரசு பிராமணிய எதிர்ப்பு ஆஸ்திரேலியாவில் பேசினால் என்னாகும் என்று சிந்தித்துப் பாருங்கள். இந்தியா தேசிய பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் கொடுத்தால் அது சமூகநீதிக்கு எதிரானது என்று கூச்சலிடம் கூட்டம் இருக்கும்வரை இந்தியாவின் பாதுகாப்பு கேள்விக்குறியாகவே இருக்கும். தமிழகம் எட்டப்பர்களின் கூடாரமா?


sankaranarayanan
செப் 05, 2024 12:40

வினை விதைத்தவன் வினையை அனுபவிக்கிறான் என்ற பழமொழி ட்ருடோவிற்கு முழுவது பொருந்தும்


HoneyBee
செப் 05, 2024 11:34

என்னது மாநிலமா


Almighty
செப் 05, 2024 11:16

மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்கியவர் விளைவுகளை அனுபவிக்கின்றனர். ஒட்டு மொத்த நாட்டில் இவர் விதைத்த தீவிரவாத விதை வளர்ந்து அதன் விளைவுகளை கொடுக்க துவங்கியது. அமைதியும், நிம்மதியும் நிறைந்திருந்த நாட்டை நிர்மூலமாக்கிய கனடாவின் பப்பு இவர்.


S Ramkumar
செப் 05, 2024 10:27

பின்னே ஜஸ்டின் ட்ருடோ இப்படி பேசாமல் பிறகு எப்படி பேசினார். சீக்கிய தீவிரவாதத்துக்கு ஆதரவு அளித்தார். கனிஸ்கா விமானம் குண்டு வைத்தவர்களை விடுவித்தார். பிறகு எப்படி செய்தி போடுவது பாமரன். பாமரத்தனமாகவே இல்லையே.


Palanisamy Sekar
செப் 05, 2024 10:21

இப்போதும் கூட ட்ரூடோ இந்தியாவின் சதி இதில் இருக்கக்கூடும் என்பார். என்றைக்கு அவர் தீவிரவாதிகளுக்கு அடைக்கலமும், பண உதவியையும் வாரி வாரி வழங்கினாரோ அன்றைக்கே அவரது அரசியல் வாழ்க்கை முற்றுப்பெற ஆரம்பித்துவிட்டது. இன்னும் சொல்லப்போனால் இதே தீவிரவாதிகளால் அவரது உயிருக்கும் ஆபத்து ஏற்படுவது திண்ணம். ட்ரூடோ இல்லாத கனடா நிச்சயம் நிலைமை மேம்பாடு அடையும். சிறுபிள்ளைத்தனம் ட்ரூடோவுக்கு அதிகம். அதன் பெயர் திமிர் என்பார்கள்


S R Rajesh
செப் 05, 2024 09:52

மிகவும் தவறான கண்டனத்திற்குரிய செய்தி. ஒரு மாநிலத்தையே பயங்கரவாத மாநிலமாக சித்தரிப்பது மிகவும் ஆபத்து.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை