உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / இனி இதைத் தாங்கிக்கொள்ள முடியாது; டிரம்ப் நிர்வாகத்தின் மசோதாவுக்கு எலான் மஸ்க் எதிர்ப்பு

இனி இதைத் தாங்கிக்கொள்ள முடியாது; டிரம்ப் நிர்வாகத்தின் மசோதாவுக்கு எலான் மஸ்க் எதிர்ப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் நிர்வாகத்தின் வரி மற்றும் செலவு மசோதாவிற்கு எலான் மஸ்க் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.அமெரிக்க அதிபருக்கு கடந்தாண்டு இறுதியில் நடந்த தேர்தலின்போது, குடியரசு கட்சியின் டொனால்டு டிரம்புக்கு, பணக்கார தொழிலதிபரும், டெஸ்லா நிறுவன தலைவருமான எலான் மஸ்க் ஆதரவு தெரிவித்தார். டிரம்ப் அதிபராக பொறுப்பேற்ற பின் எலான் மஸ்க்கை சிறந்த நிர்வாகத்துக்கான துறை தலைவர் என்ற சிறப்பு பதவியில் அமர்த்தினார். மஸ்க் இந்த பதவியில் 130 நாள் பணியாற்றுவதற்கு ஒப்புக் கொண்டிருந்தார். சில தினங்களுக்கு முன், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் நிர்வாகத்துக்கு, செலவினங்களை குறைப்பதற்காக ஆலோசனை வழங்கும் அமைப்பில் இருந்து விலகுவதாக தொழிலதிபர் எலான் மஸ்க் அறிவித்தார். இந்நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் நிர்வாகத்தின் வரி மற்றும் செலவு மசோதாவிற்கு எலான் மஸ்க் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது குறித்து எலான் மஸ்க் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:மன்னிக்கவும், ஆனால் என்னால் இனி இதைத் தாங்கிக்கொள்ள முடியாது. இந்த மிகப்பெரியசெலவு மசோதா ஒரு அருவருப்பானது. இதற்கு ஓட்டளித்தவர்கள் வெட்கப்படுகிறார்கள். நீங்கள் என்ன தவறு செய்தீர்கள் என்பது அனைவருக்கும் தெரியும். அது உங்களுக்குத் தெரியும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இது என்ன மசோதா?

* டிரம்ப் நிர்வாகத்தின் வரி மற்றும் செலவு மசோதா, குறுகிய பெரும்பான்மையில், பிரதிநிதிகள் சபையில் நிறைவேறியுள்ளது. அடுத்தது, செனட் சபையில் நிறைவேற வேண்டும்.* ஆயிரம் பக்கத்துக்கு மேல் உள்ள இந்த மசோதாவில், 2017ல் டிரம்ப் கொண்டு வந்த வரி சீர்திருத்தங்களை நீட்டிப்பது, வரிச்சலுகை அளிப்பது ஆகியவை முக்கிய அம்சமாகும். * மேலும், குடியேற்றம் தொடர்பான நடைமுறைகளை கடுமையாக்குவதும் இதில் இடம்பெற்றுள்ளது. ஆரம்பத்தில் இருந்தே இந்த மசோதாவிற்கு எலான் மஸ்க் எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

BHARATH
ஜூன் 04, 2025 16:47

இவனுக்கு வந்தா ரத்தம் அதுதவனுக்கு வந்தா தக்காளி சட்னி.


Karthik
ஜூன் 04, 2025 14:00

ட்ரம்புடன் சேர்ந்து கொண்டு எலான் மாஸ்க் ஏவிய பூமராங், ஏவியவரிடமே வந்திருக்கும் என்று தோன்றுகிறது..


sankaranarayanan
ஜூன் 04, 2025 13:07

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்பிடம் செல்லும்போது எப்போதுமே எலான் மஸ்க், மாஸ்க் அணிந்துதான் செல்வாராம் ஏனென்றால் டிரம்ப்பின் பிடிவாத நோய் இவருக்கும் பரவி விடக்கூத்தே என்பதற்காகத்தான்


venkatan
ஜூன் 04, 2025 12:55

உண்மையான ஜனநாயகம்.


ஆரூர் ரங்
ஜூன் 04, 2025 10:29

அமெரிக்கர்கள் புத்திசாலிகள் வாக்களிக்கும் நேரம் தவிர.


Nada Rajan
ஜூன் 04, 2025 10:11

டிரம்ப் எலான் மஸ்க் இருவரும் அண்ணன் தம்பி போல் இருந்தார்கள்... தற்போதைய எதற்கு சண்டை


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை