உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / 3,000 கார்களுடன் தீப்பிடித்த சரக்கு கப்பல் கடலில் மூழ்கியது

3,000 கார்களுடன் தீப்பிடித்த சரக்கு கப்பல் கடலில் மூழ்கியது

அலாஸ்கா : நம் அண்டை நாடான சீனாவின் யந்தாய் துறைமுகத்தில் இருந்து, வட அமெரிக்க நாடான மெக்சிகோவுக்கு 'மார்னிங் மிடாஸ்' என்ற சரக்கு கப்பல், 22 ஊழியர்களுடன் மே, 26ல் புறப்பட்டது. இதில், 70 மின்சார கார்கள் உட்பட 3,000 புதிய கார்கள் இருந்தன.அமெரிக்காவின் அலாஸ்காவுக்கு தென்மேற்கே 490 கி.மீ., துாரத்தில் பசிபிக் கடலில் சென்றபோது, இந்தக் கப்பலில் திடீரென தீப்பிடித்தது. இதையடுத்து சரக்கு கப்பலை அப்படியே விட்டுவிட்டு, கப்பல் ஊழியர்கள் தப்பினர். இவர்களை, கடலோர காவல் படையின் மீட்டனர்.தீயை அணைக்கும் பணியில் அமெரிக்க கடலோர காவல் படை ஈடுபட்ட நிலையில், மோசமான வானிலை மற்றும் கப்பலில் நீர்க்கசிவு ஏற்பட்டதை அடுத்து நேற்று முன்தினம் மார்னிங் மிடாஸ் கப்பல் கடலில் மூழ்கியது.இதை கப்பல் நிறுவனமான லண்டனை சேர்ந்த 'சோடியாக் மேரிடைம்' உறுதி செய்துள்ளது. எனினும் அந்த கப்பலில் இருந்த 3000 கார்கள், அதில் இருந்து மீட்கப்பட்டதா என்பது தெரியவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

NAGARAJAN
ஜூன் 26, 2025 12:03

இது பாஜக சதியாக இருக்குமோ


நிக்கோல்தாம்சன்
ஜூன் 26, 2025 10:44

சமீபமாக சீனாவின் சரக்குகள் அதிகம் தீப்பிடிக்கின்றனவே ?


Balaji Bakthavathsal
ஜூன் 26, 2025 07:10

மிடாஸ் - சரக்கு கப்பல் - தண்ணியில் மூழ்கியது. இயற்கை தானே


முக்கிய வீடியோ