உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / போர் நிறுத்த ஒப்பந்தம் எதிரொலி; 4 பிணைக்கைதிகளை விடுவித்தது ஹமாஸ்

போர் நிறுத்த ஒப்பந்தம் எதிரொலி; 4 பிணைக்கைதிகளை விடுவித்தது ஹமாஸ்

ஜெருசலேம்: 2ம் கட்டமாக இஸ்ரேல் ராணுவத்தைச் சேர்ந்த நான்கு பெண் வீராங்கனைகளை ஹமாஸ் அமைப்பினர் விடுவித்தனர்.மேற்காசிய நாடான இஸ்ரேல் மற்றும் காசா உள்ளிட்ட பாலஸ்தீன பகுதிகளை கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹமாஸ் பயங்கரவாதிகள் இடையே, 2023, அக்., 7ல் போர் துவங்கியது. அமெரிக்கா, கத்தார், எகிப்து ஆகியவற்றின் மத்தியஸ்த முயற்சியால், போரை நிறுத்துவதற்கான ஒப்பந்தம் சமீபத்தில் கையெழுத்தானது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=pgo908ig&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இதன்படி, ஹமாஸ் பயங்கரவாதிகள் பிடித்துச்சென்ற பிணைக் கைதிகளை விடுவிக்கவும், அதற்காக இஸ்ரேல் சிறையில் உள்ள பாலஸ்தீனர்களை விடுவிக்கவும் முடிவு செய்யப்பட்டது. முதலாவதாக, ஹமாஸ் தரப்பில் இருந்த பிணைக் கைதிகள் எமில் டமாரி, ரோமி கோனென், டோரன் ஸ்டேய்ன்பிரெச்சர் ஆகிய மூன்று பெண்களை, காசாவில் உள்ள செஞ்சிலுவை சங்கத்தினரிடம் ஹமாஸ் படையினர் ஒப்படைத்தனர். இதைத் தொடர்ந்து, இஸ்ரேல் ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட அவர்கள், தங்கள் சொந்த ஊர் சென்றனர். மொத்தம் 42 நாட்கள் அமலில் இருக்கும் இந்த போர் நிறுத்தத்தின் போது, மேலும் 33 இஸ்ரேலிய பிணைக் கைதிகளும், 2,000 பாலஸ்தீன கைதிகளும் அடுத்தடுத்து விடுவிக்கப்பட உள்ளனர். இந்நிலையில், இன்று (ஜன.,25) 2ம் கட்டமாக விடுதலை செய்யப்பட உள்ள பிணைக்கைதிகள் 4 பேரின் பெயர் பட்டியலை ஹமாஸ் வெளியிட்டது. இது குறித்து இஸ்ரேல் ராணுவம் கூறியதாவது: 2வது கட்டமாக 4 பெண்கள் பட்டியலை ஹமாஸ் அமைப்பு வெளியிட்டுள்ளது. இவர்கள் அனைவரும் இஸ்ரேல் படைப்பிரிவைச் சேர்ந்தவர்கள் என தெரிவித்துள்ளது.தொடர்ந்து, நாமா லெவி (20), டேனியலா கில்போவா (20), லிரி அல்பாக் (19), கரினா அரிவ் (20) ஆகியோரை ஹமாஸ் அமைப்பினர் செஞ்சிலுவை சங்கத்தினரிடம் ஒப்படைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Kasimani Baskaran
ஜன 25, 2025 07:16

எப்படியோ அண்டை நாட்டு தூண்டுதலில் தீவிரவாதம் செய்து சாதிக்கிறேன் பேர்வழி என்று இஸ்ரேல் உதவியும் எழுந்து கம்பீரமாக நின்ற பாலஸ்தீனத்தை இஸ்ரயேலை வைத்தே அடித்து உடைக்க வைத்து அரை நூற்றாண்டு பின்னோக்கி செலுத்தி விட்டது ஹமாஸ். இனியாவது திருந்துவார்களா என்றால் கண்டிப்பாக இல்லை. மத வெறுப்பு இருக்கும் வரை தீவிரவாதம் குறையாது.


nisar ahmad
ஜன 25, 2025 12:03

உண் ரத்தத்தில் அடைமைத்தன. ஊரியிருக்கலாம் எல்லோரும் அப்படியில்லை அச்சமில்லை அச்சமில்லை உச்சி மீது வானிடுந்து வீழுகின்ற போதிலும் அச்சமில்லை என்று சுதந்திரத்துக்காக பாரதி உங்களை போன்றவகள் இந்த பூமியில் இருப்தை தெறியாமல் அன்று பாடிவிட்டார். அடிமையாய் நூறு வடங்க. கூனி குறுகி வாழ்வதை விட சுதந்திரமாய் ஒரோ நாள் வாழ்வதுதான் வாழ்க்கை அவர்கள் அவர்களின் தேசத்திற்காய் போராடுகிறார்கள் சுதந்திரத்துக்காய் போராடுகிறார்அதை தவறாக சொல்பவன் இத்த உலகில் வாழ்வதற்கே தகுதியற்றவன்.அவர்களின் சுதந்திர போராட்டத்தை கொச்சை படுத்தும் நாய்கள் தான் சுபாஷ் சந்திர போஸின்( இந்தியன் நேஷன ஆர்மியை கட்டமைத்து போரிட வேண்டுமென்று துடித்த பல நாடுகள் சென்று ஆயுத உதவியும் ஆதரவும் தேடிய வீரமகன்) பெருமையை பேசுகிறார்கள்.விடுதலை போராட்மென்பது என்றூம் தோற்றதாக வரலாறு கிடையாது சுணங்கி போகலாம் சில நேரம் ஆனால் வெற்றி எண்பதோ நிச்சயம்.தனக்கு வந்தார் ரரத்த. மமற்றவனுக்கு வந்தால் தக்காளி சட்னி என்று என்னூம் உங்களை போன்ற மர மண்டைகளுக்கு இதுவும் உரைக்காது.


Bahurudeen Ali Ahamed
பிப் 12, 2025 10:19

மதவெறுப்பா? மதவெறுப்பு உங்களுக்கா அல்லது பாலஸ்தீனியர்களுக்கா சகோ, பாலஸ்தீனியர்கள் முஸ்லிம்கள் என்பதற்காகவே அவர்களின் சொந்த நிலத்திற்கான உரிமை போராட்டத்தை கொச்சைப்படுத்துகிறீர்கள், பாலஸ்தீன் நிலத்தை திருட பெண்கள் குழந்தைகளை கொன்று குவிக்கும் இஸ்ரேலியர்களுக்கு ஆதரவாக கருத்துக்களை வெளியிடுகிறீர்கள், பாலஸ்தீனியர்கள் இஸ்ரேலியர்கள் வாழக்கூடாது என்று போராடவில்லை தங்களுக்கான நிலப்பரப்பில் சுதந்திரமாக தாங்களும் வாழவேண்டும் என்று போராடுகிறார்கள், வாழு வாழவிடு இதுதானே சரியானதாக இருக்கும்? தான் மட்டுமே வாழவேண்டும் அதற்காக யார் செத்தாலும் கவலையில்லை என்று நினைக்கும் இஸ்ரேலியர்களுக்கு ஆதரவாக கருத்திடும் உங்களைப் போன்றவர்கள்தான் மதவெறுப்பு உடையவர்கள்


புதிய வீடியோ