உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / காசாவில் போர் நிறுத்தம் அமல்; இஸ்ரேல் ராணுவம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

காசாவில் போர் நிறுத்தம் அமல்; இஸ்ரேல் ராணுவம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

ஜெருசலேம்: காசாவில் போர்நிறுத்த ஒப்பந்தம் தொடங்கியது என இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.இஸ்ரேல்-காசா போர் இடையே 2023ம் ஆண்டு முதல் சண்டை நடந்து வருகிறது. இதில் கிட்டத்தட்ட 65,000க்கும் அதிகமானோர் பலியாகினர். இந்தப் போரை முடிவுக்கு கொண்டுவர இஸ்ரேலுக்கு உலக நாடுகள் அழுத்தம் கொடுத்து வருகின்றன. இதன் ஒருபகுதியாக, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், 20 அம்ச அமைதி திட்டத்தை முன்மொழிந்தார். போரை நிறுத்தி, குறைந்தபட்சம் சில பிணைக் கைதிகளை விடுவிக்கும், அமைதி திட்டத்தின் முதல்கட்டத்திற்கு இஸ்ரேலும், ஹமாசும் ஒப்புக்கொண்டுள்ளன. தற்போது அடுத்த கட்ட நடவடிக்கையாக போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது. இது தொடர்பாக இஸ்ரேல் ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: போர்நிறுத்த ஒப்பந்தம் மதியம் 12:00 மணிக்கு அமலுக்கு வந்தது. மதியம் 12:00 மணி முதல், பிணைக்கைதிகளை விடுதலை செய்யும் பணி நடந்து வருகின்றன.போர் நிறுத்த ஒப்பந்தத்தின்படி, இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் இடமாற்றம் செய்யப்படுகிறார்கள். தெற்கு பகுதியில் இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். எந்தவொரு அச்சுறுத்தல் கொடுத்தாலும் இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் தக்க பதிலடி கொடுப்பர். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

M Ramachandran
அக் 10, 2025 19:36

இங்கு ஒரு கூட்டம் மார்க்க மதத்திற்கு ஜின்ஜிங் அடிக்க , இன்னொரு மத மாற்ற கும்பலால் உள்குத்து கிடைக்க போகுது நிச்சயம்.பினேரா அவுக்க ஆளுகளுக்கு அப்பு வைத்தால் சும்மாவா? சிவகாசி வேட்டு தயார்.


Venkateswaran Rajaram
அக் 10, 2025 19:02

ஹமாஸ் பயங்கரவாதிகள் முற்றிலும் அழிக்கப்பட்டால் ஒழிய அப்பாவி பாலஸ்தீன மக்களுக்கு நிம்மதி கிடைக்காது


RAMESH KUMAR R V
அக் 10, 2025 18:54

அமைதி நிலவட்டும்


தாமரை மலர்கிறது
அக் 10, 2025 18:52

டிரம்புக்கு நோபல் பரிசு கொடுக்க வேண்டும் என்பதற்காக கொண்டுவரப்பட்ட போர் நிறுத்தம். அவருக்கு கொடுக்கபடவில்லை, அதனால் விரைவில் போர் தொடங்கும்.


Subburamu K
அக் 10, 2025 18:33

I think it is only a temporary truce. Permanent peace depends on the Israelis and Islamic armed terrorists groups. War is for destruction only. Peoples must accept coexistence of all heterogeneous groups of Peoples Trust, forgiveness and tolerance is important for peace


சுந்தரம் விஸ்வநாதன்
அக் 10, 2025 17:49

தீர்மானம் போட்ருவோம்ன்னு மிரட்டினத்துக்கு கைமேல் பலன்.


visu
அக் 10, 2025 18:37

என்ன தீர்மானம் உதைத்த உதையில் சமாதானம் என்று ஹமாஸ் குப்புற விழுந்துள்ளது


cpv s
அக் 10, 2025 16:38

no peace once release all hostage , then start the war untill zero tolerance for plastine evil


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை