உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / சாட் ஜிபிடியை நம்பக்கூடாது: உருவாக்கியவரே சொல்கிறார்

சாட் ஜிபிடியை நம்பக்கூடாது: உருவாக்கியவரே சொல்கிறார்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: '' சாட் ஜிபிடியை நம்ப வேண்டாம், '' என அதனை உருவாக்கிய ஓபன் ஏஐ நிறுவனத்தின் சிஇஓ சாம் ஆல்ட்மன் கூறியுள்ளார்.ஓபன் ஏஐ நிறுவனத்தின் சாட் ஜிபிடி ஏஐ, உலக அளவில் பலரால் பயன்படுத்தப்படும் ஏஐ சாப்ட்வேரில் ஒன்று. பைல் தயாரிப்பு, ஆவணங்கள் சரிபார்த்தல், கோடிங் என பல பயன்பாடுகளுக்கு சாட்ஜிபிடியை பயன்படுத்தி வருகின்றனர். சாட் ஜி பிடி.,யை பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் உச்சம் தொட்டு வருகிறது.2023 ல் அமெரிக்க நாளிதழ் ஒன்று நடத்திய ஆய்வில் அந்நாட்டில் 90 சதவீத மாணவர்கள், தங்களது கல்வி சார்ந்த பணிகளுக்காக 90 சதவீதம் சாட்ஜிபிடியை பயன்படுத்துவது தெரியவந்துள்ளது.இந்நிலையில், ஓபன் ஏஐ நிறுவனத்தின் சிஇஓ சாம் ஆல்ட்மன் கூறியதாவது: சாட் ஜிபிடியை மக்கள் அதிகம் நம்புகிறார்கள் என்ற மிக ஆச்சர்யமான விஷயத்தை நான் கண்டறிந்தேன். செயற்கை நுண்ணறிவு என்பது தவறான தகவல்களை அளிக்க முடியாதது அல்ல. அதனை இந்த அளவுக்கு நம்ப வேண்டாம். இந்தளவுக்கு நம்ப வேண்டிய தொழில்நுட்பம் அல்ல. எந்தவொரு வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தையும் பயனர்கள் அணுகுவது போல், சாட்ஜிபிடியையும் அணுக வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Ramesh Sargam
ஜூலை 02, 2025 21:20

செயற்கை நுண்ணறிவு என்பது தவறான தகவல்களை அளிக்க முடியாதது அல்ல. ஆகையால் அதை மக்கள், குறிப்பாக மாணவர்கள் புறக்கணிக்கவேண்டும். புறக்கணித்து சொந்த அறிவை முழுமையாக பயன்படுத்தவேண்டும்.


அப்பாவி
ஜூலை 02, 2025 19:23

இந்தியாவில் ஏ.ஐ தான் கதின்னு பூந்து விளையாடுறாங்களே


V Venkatachalam
ஜூலை 02, 2025 22:55

ஆமாங்க அண்ணே திருட்டு தீய முக ஐடி விங் இத முழுமையாக பயன் படுத்தி பொய் சமாசாரங்களை உண்மை போல திரித்து பரப்பிக்கொண்டு இருக்கின்றனர்.