உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / கனடா பிரதமர் பதவிக்கான போட்டியில் சந்திரா ஆர்யா; பார்லியில் கன்னடத்தில் பேசி ஆதரவு திரட்டினார்

கனடா பிரதமர் பதவிக்கான போட்டியில் சந்திரா ஆர்யா; பார்லியில் கன்னடத்தில் பேசி ஆதரவு திரட்டினார்

ஒட்டாவா: கனடா பிரதமர் பதவிக்கான போட்டியில் இந்திய வம்சாவளியை சேர்ந்த சந்திரா ஆர்யா வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.வட அமெரிக்க நாடான கனடாவில், பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பின. சொந்த கட்சிக்குள்ளேயே, அவர் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இந்த சூழலில், லிபரல் கட்சி தலைவர் பதவியில் இருந்தும், பிரதமர் பதவியில் இருந்தும் விலகுவதாக சமீபத்தில் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்தார்.பதவியை ராஜினாமா செய்தாலும், அடுத்த பிரதமர் தேர்வு செய்யப்படும் வரை பதவியில் இருப்பதாக அவர் தெரிவித்திருந்தார். லிபரல் கட்சியின் தலைவராக தேர்வு செய்யப்படுபவர், அக்கட்சி சார்பில் கனடா பிரதமராக தேர்வு செய்யப்படுவார் என்பதால், கட்சித் தலைமை பொறுப்பை ஏற்க அங்கு கடும் போட்டி நிலவுகிறது. இந்த நிலையில், கனடா பிரதமர் பதவிக்கான போட்டியில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சந்திரா ஆர்யா குதித்துள்ளார். இதற்கான வேட்புமனுவை தாக்கல் செய்த அவர், அந்நாட்டு பார்லிமென்ட் கூட்டத்தில் தனது தாய்மொழியான கன்னடத்தில் உரை நிகழ்த்தினார். அவர் பேசியதாவது: நமது நாடு எதிர்கொண்டிருக்கும் கட்டமைப்பு சவால்களை சரிசெய்ய தீர்க்கமான முடிவுகளை எடுக்க வேண்டியுள்ளது. நமது குழந்தைகள், பேரப்பிள்ளைகளுக்கு உறுதியான அரசியல் முடிவு எடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். கனடா மக்களுக்கு எது சிறந்ததோ, அந்த விஷயத்திற்காக உழைக்க எப்போதும் தயாராக இருக்கிறேன். லிபரல் கட்சியின் தலைவராக என்னை தேர்ந்தெடுத்தால், என்னுடைய அறிவு மற்றும் அனுபவத்தை கொடுத்து செயல்படுவேன், என்று கூறினார். இந்திய வம்சாவளியான சந்திரா ஆர்யா கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்தவர். இவர், தர்வாடு மாவட்டத்தில் எம்.பி.ஏ., பட்டப்படிப்பு படித்து முடித்தார். அதன்பிறகு, அவர் கனடாவுக்கு குடிபெயர்ந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

ஜெய்ஹிந்த்புரம்
ஜன 18, 2025 23:52

இவர் கனடா பிரதமர் ஆனால் இலங்கை தமிழர்கள் அதிகம் வாழும் டொராண்டோ பகுதிக்கு குடிநீர் செல்வதை நிறுத்தி விடுவாரா ? ஹா ஹா ஹா..


Senthoora
ஜன 19, 2025 05:33

அவர் இந்திய அரசியலா செய்யப்போறார், அவர் எதுக்கு டொரோண்டோ அல்ல எந்த மாநிலத்திலும் எதுக்கு செய்யப்போகிறார், சொல்லப்போனால் அவர் ஆட்சிக்கு வந்தாலும் சீக்கியர்களின் ஆதரவு இல்லாமல் வரமுடியாது, இந்தியாவுக்கு ஏதும் பெரிசா செய்ய மாட்டார். அவர் கனடிய மக்களுக்கு விசுவாசமான இருக்கப்போறார்.


Mediagoons
ஜன 18, 2025 22:01

இவர் அந்நாட்டுக்காக உழைக்கிறார். மற்ற நாடுகளுக்கு தங்களை அர்பணித்துக்கொண்டவர்கள், எந்த வம்சாவளியை சேர்ந்தவர்களாக இருந்தால் என்னே?


Senthoora
ஜன 19, 2025 05:40

உண்மை, ஆனால் அத நாட்டுக்காக உழைக்கனும்ம்னா , அந்த நாட்டு மக்கள் பேசும் தேசிய மொழியில் பேசணும், அங்கே கன்னடத்தில் பேசினால் அந்த மக்களுக்கு வெறுப்புதான் வரும்.


sankaran
ஜன 18, 2025 21:42

மொழி வெறியர்கள் ...


B MAADHAVAN
ஜன 18, 2025 21:29

"கனடா" பாராளுமன்றத்தில், தாய் மொழி "கன்னடா" வில் பேசிய, நம்ப பக்கத்து கர்நாடக மனிதருக்கு மனம் திறந்த வாழ்த்துக்கள். அங்கு சென்றாலும், தான் பிறந்த பாரத மண்ணுக்கு விஸ்வாஸமாக இருந்தால் சந்தோஷம். நம் பாரத தேசத்திற்கு எதிராக செயல்படும் எந்த நாடும், எந்த கட்சியும் உருப்படாது என்பது சர்வ நிச்சயம்.


Senthoora
ஜன 19, 2025 05:43

முதலில் தன்னை வாழவைக்கும் நாட்டுக்கு விசுவாசமாக யாரும் இருக்கணும்.


V வைகுண்டேஸ்வரன்
ஜன 18, 2025 20:23

சந்தோஷமான விஷயம் : நல்ல டைம் பாஸ். பல வாசகர்களும், திராவிடம்,, விடியல், டாஸ்மாக், ஸ்டாலின், உதயநிதி - இவர்களைத் தான் உலகம் என்று மனதில் எப்போதும் வைத்துக் கொண்டு வாழ்கிறார்கள் என்பது கூடுதல் சந்தோஷம்.


Kumar Kumzi
ஜன 19, 2025 03:31

என்ன செய்ய இன்பநிதிக்கும் நீ தான் போஸ்ட்டர் ஓட்டணும் அது உன் தலையெழுத்து


Ramesh Sargam
ஜன 18, 2025 19:58

இவர் அதிபர் ஆவதால் கன்னடா மக்களுக்கும், பொதுவாக இந்தியர்களுக்கும் ஒரு பலனும் இல்லை.


Anand
ஜன 18, 2025 17:58

திருட்டு திரவிடியாவை போன்று இவன் வெளிநாடு போயும் திருந்தவில்லை.....


Sundar R
ஜன 18, 2025 17:39

ஜஸ்டின் ட்ரூடியோ கனடாவின் சரிந்த பொருளாதாரத்தை மீட்டெடுப்பது சிரமம் என்று நினைத்து பதவி விலகினார். பிறகு கோயம்புத்தூரைச் சேர்ந்த அனிதா இந்திராவும் போட்டியிட விண்ணப்பித்த பிறகு திடீரென விலகினார். கர்நாடகாவின் தார்வாட்டைச் சேர்ந்த சந்திரா ஆர்யா லிபரல் கட்சி சார்பாக போட்டியிட மனு அளித்து கன்னடத்தில் உரை நிகழ்த்தியிருக்கிறார். நாம் கவனிக்க வேண்டியது சந்திரா ஆர்யா வீழ்ச்சியடைந்த கனடாவின் பொருளாதாரத்தை பழைய நிலைக்கு கொண்டு வருவாரா? என்பதே.


Senthoora
ஜன 18, 2025 17:10

அங்கே போயும் , மடி பிச்சையா? கனடிய மக்கள் அரசியலில் ஈடுபாடு இல்லை, ஆனால் யாருக்கு ஒட்டு போடணும் என்று தெரியும்.


Rajan A
ஜன 18, 2025 16:49

இதுவும் ஒரு வெளிநாட்டு திராவிட தத்தி. கனடாவில் கன்னடம் எவ்வளவு பேருக்கு தெரியும். இவ்வளவு மொழி பற்று இருந்தால் அங்கே ஏன் செல்லவேண்டும்? பெங்களுரில் பார் நடத்த வேண்டியதுதானே? நம் நாட்டின் சாபம். இந்த மாதிரி ஆட்கள் வெற்றி பெற கூடாது


Karthikeyan Palanisamy
ஜன 18, 2025 19:43

சரி இத மாதிரி தமிழில் பேசியிருந்தால் இப்படித்தான் கூறியிருப்பீர்களா. அடுத்தவனுக்குனா தக்காளிச்சட்னி


Senthoora
ஜன 19, 2025 05:52

இங்கபாருடா ஒரு தமிழனை, இனொரு தமிழன் வசைபாடுறான். இந்த தமிழனுக்கு எட்டப்பன் இல்லாத இடமே இல்லை.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை