உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / கனடா குடியுரிமையில் மாற்றம்; இந்தியர்களுக்கு பாதிப்பு?

கனடா குடியுரிமையில் மாற்றம்; இந்தியர்களுக்கு பாதிப்பு?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஒட்டாவா : குடியுரிமை கேட்டு விண்ணப்பிக்கும் முறையில் சில திருத்தங்களை கனடா அரசு செய்துள்ளது. இதனால், கனடாவில் இருக்கும் அல்லது கனடா செல்ல நினைக்கும் இந்தியர்களுக்கு பாதிப்பு ஏற்படலாம் எனக் கூறப்படுகிறது.வட அமெரிக்க நாடான கனடாவில், பி.ஆர்., எனப்படும் நிரந்தர குடியுரிமை பெறுவதற்கு, 'எக்ஸ்பிரஸ் என்ட்ரி' என்ற நடைமுறை உள்ளது. இதன்படி, குடியுரிமை பெறுவதற்காக விண்ணப்பிப்பதில், இந்தியர்களே முன்னிலையில் உள்ளனர். கடந்தாண்டில் மட்டும், 52,106 இந்தியர்களுக்கு இவ்வாறு விண்ணப்பிக்க அழைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இது, அந்தாண்டில் வழங்கப்பட்ட மொத்த விண்ணப்பங்களில், 47 சதவீதமாகும்.எக்ஸ்பிரஸ் என்ட்ரி முறையில், கனடாவின் குடியுரிமை பெறுவதற்கு விண்ணப்பிக்கும்போது, ஒவ்வொருவருக்கும் அவர்களுடைய, கல்வி, வேலை உள்ளிட்டவற்றின் அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கப்படும். அதிக மதிப்பெண்கள் பெறுபவர்களுக்கு குடியுரிமை வழங்கப்படும்.இந்த வகையில், கனடாவில் வேலை பார்ப்பதற்கான நிறுவனம் அளிக்கும் நியமன உத்தரவு கடிதத்துக்கு, 50 - 200 புள்ளிகள் வரை கொடுக்கப்பட்டு வந்தது. இந்த நியமன கடிதத்துக்கான மதிப்பெண்கள், இனி கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது என, கனடா அரசு கூறியுள்ளது.ஏற்கனவே, குடியுரிமைக்கு விண்ணப்பித்துள்ளோர் மற்றும் காத்திருப்போருக்கு இது பொருந்தாது. அதே நேரத்தில் எக்ஸ்பிரஸ் என்ட்ரி வாயிலாக விண்ணப்பிக்காத, அதே நேரத்தில் வேலைக்கான உத்தரவு கடிதம் உள்ளோருக்கு, இனி இந்த மதிப்பெண் வழங்கப்படாது.போலி உத்தரவு கடிதங்கள் வாயிலாக பலர் விண்ணப்பிப்பதால், மோசடிகளை தடுக்க, பணி உத்தரவு கடிதங்களுக்கான மதிப்பெண்களை கணக்கில் எடுத்துக் கொள்வதில்லை என்று முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.கனடாவில் தற்போது தற்காலிகமாக பணியாற்றும் மற்றும் கனடாவில் பணியாற்றுவதற்கான பணி உத்தரவு பெற்றுள்ள இந்தியர்களுக்கு, இதனால் பாதிப்பு ஏற்படலாம் எனக் கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

அப்பாவி
டிச 26, 2024 18:20

ஒழுங்கா படிச்சு, வேலைக்கு போய் குடியேறவனுக்கு பதிப்பு இருக்காது. கக்ளத்தனமா குடியேறுபவர்களுக்குத்தான் பாதிப்பு.


Kasimani Baskaran
டிச 26, 2024 07:35

எல்லையில்லா திராவிட மாடல் லீலைகளில் ஈடுபட்டால் விட்டுவிடுவார்களா? காலிஸ்தானிகள் ஒரு பக்கம் - மறுபக்கம் அக்மார்க் திராவிடர்கள்... வெளங்க வாய்ப்பில்லை.


அப்பாவி
டிச 26, 2024 06:56

இங்கேயே வந்துருங்கோ. ரெண்டு கோடி வேலையும், பாஞ்சி லட்சமும் போடறாங்க.


பெரிய குத்தூசி
டிச 26, 2024 08:46

போய் முதல ஹிந்தி கத்துக்கிட்டு வா, இந்தி கத்துக்கிட்டு மோடி பேசின வீடியோ வ பாரு. அப்புறம் பாஞ்சி லட்சத்தை பத்தி பேசு. ஒண்ணுமே ஆதாரம் இல்லாம வாய்வெச்சு மட்டும் தேய்க்கறதுல பிரயோசனம் இல்ல. இனி பாஞ்சி லட்சம் திராவிட அரசியல் வேலை செய்யாது, ஏனென்றால் மோடி பேசின உண்மையான வார்த்தையை வீடியோவை தமிழில் மொழிபெயர்த்து அனைத்து தமிழ் மக்கள் வாட்ஸாப்ப் க்கும் அனுப்பப்பட்டு விட்டது. இன்னும் அப்பாவி பாய் எத்தனை நாளைக்கு திராவிடம் குடுக்கும் பிரியாணிக்கும் குவாட்டருல மயக்கமா இருக்க போறியோ.


J.V. Iyer
டிச 26, 2024 05:02

நிறைய காலிஸ்தானியர்கள் இந்தியாவில் உள்ள பஞ்சாபி சீக்கியர்களை இப்படி போலியான வேலைகளை கொடுத்து கனடாவுக்கு இழுக்கிறார்கள் என்பது உண்மை. கனடாவிலிருந்து அமெரிக்காவுக்கு டிரக் ஒட்டி செல்லும் சீக்கியர்களை மடக்கினால் போதைப்பொருள், ஆட்கள் கடத்தல் இவைகளை அறவே ஒழிக்கலாம். இதற்கு ஜஸ்டின் ட்ருடோவும், ஜாக்மீட் சிங்கும் உடந்தை. இந்த இவர்களுக்கும் மேல் இந்தியாவில் உள்ள I.N.D.I. கூட்ட பயங்கரவாதிகள்.


சமீபத்திய செய்தி