உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / பாஸ்வேர்டை மாற்றுங்கள் 1,600 கோடி லாகின் தகவல் கசிவு

பாஸ்வேர்டை மாற்றுங்கள் 1,600 கோடி லாகின் தகவல் கசிவு

சான் பிரான்சிஸ்கோ : உலகளவில், 'ஆப்பிள், கூகுள், மைக்ரோசாப்ட், அமேசான்' உட்பட பல்வேறு இணைய சேவை பயனர்களின், 1,600 கோடி 'லாகின்' தகவல்கள் திருடப்பட்டுள்ளன. அதில் பலவற்றில் உள்நுழைவதற்கான பாஸ்வேர்டு தகவல்களும் அடங்கியுள்ளதாக ஆய்வறிக்கை வெளியாகியுள்ளது.இணையத்தில் அவ்வப்போது பயனர்களின் தகவல்கள் திருடப்படுகின்றன. அந்த தகவல்கள் 'சைபர்' குற்றங்கள் மற்றும் வியாபார உத்திகள் வகுக்க பயன்படுத்தப்படுகின்றன. இந்நிலையில், தற்போது உலகளவில் மிகப்பெரிய தகவல் திருட்டு நடந்துள்ள சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.பயனர்கள் பல்வேறு இணைய சேவைகளுக்கு பயன்படுத்தும் மின்னஞ்சல் முகவரிகள், பாஸ்வேர்டு போன்றவற்றின், 1,600 கோடி விபரங்கள், 'டார்க் வெப்' எனப்படும் மறைமுக இணைய சர்வரில் விற்பனைக்கு வந்துள்ளன.இவை, 30 தனித்தனி தரவு தொகுப்புகளாக கசிந்துள்ளன. ஒவ்வொரு தொகுப்பிலும், பல கோடி தகவல்கள் இடம்பெற்றிருக்கலாம் என சர்வதேச இணைய ஆய்வு நிறுவனங்களான, 'சைபர்நியூஸ்' மற்றும் 'கீப்பர் செக்யூரிட்டி' கூறியுள்ளது.மிகப்பெரிய அளவிலான இந்த தகவல்கள் இணையதளங்கள், 'பேஸ்புக்' உள்ளிட்ட சமூக வலைதளங்கள், ஆன்லைன் சேவைகள், மற்றும் செயலிகளில் இருந்து திருடப்பட்டவை. 'ஆப்பிள், கூகுள், மைக்ரோசாப்ட்' போன்ற நிறுவனங்களின் பயனர் தகவல்கள் இதில் அடங்கி உள்ளன. இந்திய பயனர்களின் தகவல்களும் இதில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே உடனடியாக பாஸ்வேர்டுகளை புதிதாக மாற்றும்படியும், இணைய கணக்குகளின் விபரங்களுக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்கும்படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

naadodi
ஜூன் 21, 2025 08:24

Better is PASSKEY. Please search at google for this. Most sites are pushing people to this. It is safer than password.


Kasimani Baskaran
ஜூன் 21, 2025 07:14

12 டிஜிட்டுக்கு லாக் முன்று டிஜிட் என்பது சற்று ஆபத்தானது. மொத்தமாக 2FA வுக்கு மாறவேண்டும்.


sivan
ஜூன் 21, 2025 08:35

புரியவில்லையே.. விளக்கமாக சொல்லுங்களேன்


புதிய வீடியோ